»   »  பிரியாவை போல சினிமாவில் அறிமுகமாகும் ‘ருசிக்கலாம் வாங்க’ மீனாட்சி

பிரியாவை போல சினிமாவில் அறிமுகமாகும் ‘ருசிக்கலாம் வாங்க’ மீனாட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செய்தி வாசிப்பாளர் பிரியா பவானி சங்கரைப் போல புதுயுகம் டிவியின் சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீனாட்சி தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார்.

புதுயுகம் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட நூறு எபிசோடுகளை கடந்துள்ளது ருசிக்கலாம் வாங்க. திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு, சுவாரஸ்யம் குறையாமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மீனாட்சியும் முக்கிய காரணம்.

மீனாட்சி

மீனாட்சி

பொதுவாக தொகுப்பளினிகள் என்றாலே படபடவென பொரிந்து தள்ளுவார்கள்.. பாதி புரியும்.. பாதி புரியாது.. ஆனால் அதிலிருந்து மாறுபட்டு அனைவருக்கும் புரியும் விதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில், பேச்சில் நிதானம் காட்டுகிறார் அதற்காகவே அவருக்கு நிறைய பாராட்டுக்கள் குவிகின்றன.

விஜேயானது எப்படி?

விஜேயானது எப்படி?

சொந்தமாக விளம்பர நிறுவனம் நடத்திவரும் மீனாட்சி, ஒரு நாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டிய தொகுப்பாளினி வராமல் போக அந்த நெருக்கடியைச் சமாளிக்க இவரே தொகுத்து வழங்கினாராம்.

புதுயுகம் டிவியில் விஜே

புதுயுகம் டிவியில் விஜே

தொடர்ந்து அப்படியே பிஸியான விஜேவாக மாறிவிட்டார் மீனாட்சி. இதற்கிடையே அழகி, பொம்மலாட்டம், பொன்னூஞ்சல் கங்கா என அடுத்தடுத்து சீரியல்களிலும் வாய்ப்பு வர அவற்றிலும் ஒரு ரவுண்டு வந்துவிட்டார்..

ருசிக்கலாம் வாங்க

ருசிக்கலாம் வாங்க

தற்போது வெள்ளித்திரையில் கால் பதிக்கவேண்டும் என்பதற்காக சமீபகாலமாக சீரியல் உலகில் இருந்து சற்றே ரிலாக்ஸ் ஆனாலும், கூட ‘ருசிக்கலாம் வாங்க' நிகழ்ச்சியை மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார் மீனாட்சி.

சினிமாவில் கால்பதிக்கிறார்

சினிமாவில் கால்பதிக்கிறார்

மீடியாவுக்குள் வருவதற்கு முன் அப்படி ஆகவேண்டும், இப்படி ஆகவேண்டும் என எதையும் பிக்ஸ் பண்ணிக்கொள்ளாத மீனாட்சிக்கு தானாகவே வாய்ப்புகள் தேடிவந்தன. தற்போது அனைவர்க்கும் தெரிந்த முகமாக மாறிவிட்ட மீனாட்சி, அதை பயன்படுத்தி சினிமாவிலும் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

சின்னத்திரை டூ சினிமா

சின்னத்திரை டூ சினிமா

சின்னத்திரை தொகுப்பாளர்களாக இருந்து சினிமாவில் பிரபல நாயகர்களாக பலரும் மாறி வருகின்றனர். செய்தி வாசிப்பாளர் பிரியா பவானி சங்கர் இப்போது மேயாத மான் படத்தில் நடிக்கிறார். அதே போல சினிமாவில் அடியெடுத்து வைக்கும் மீனாட்சி பிரபல நாயகியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
Puduyugan Ruchikalam program TV Anchor Meenatchi debut the Tamil Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil