twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெளில தலைகாட்ட முடியல... திட்டுகிறார்கள்!- இது ஒரு டிவி நடிகரின் கவலை

    By Shankar
    |

    நடிகர்களுக்கு எங்கும் மதிப்பும் வரவேற்பும் உண்டு. பார்க்கிற இடங்களில் எல்லாம் கைகுலுக்கல்கள் வரவேற்புகள் என்று மரியாதை செய்து சந்தோஷப் படுத்துவார்கள் ரசிகர்களும் பொதுமக்களும்.

    ஆனால் ஒரு நடிகர் பிரபலமாகி விட்டார். பரபரப்பாகப் பேசப்படுகிறார். ஆனால் வெளியில் தலை காட்டமுடியவில்லை. பார்க்கிறவர்கள் எல்லாம் 'பாவி' என்று சபிக்கிறார்களாம்.

    மனைவியுடன் கூட வெளியில் செல்ல முடியவில்லையாம். இவருக்கு விழும் திட்டுகளால் மனைவி இவர் கூடவே வருவதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    வில்லன் பாஸ்கர்

    வில்லன் பாஸ்கர்

    யாரந்த வில்லாதி வில்லன் என்கிறீர்களா?

    அவர்தான் பாஸ்கர். சன் டிவியிலேயே 'இளவரசி', நாதஸ்வரம்' ,'மகாபாரதம் என '3 தொடர்களில் நடிப்பவர். தற்போது சன்னில் ஒளிபரப்பாகி வரும் 'இளவரசி' தொடரில் சொத்தை அபகரிக்க ஒரு பெண்ணைக் கொலைசெய்யும் கொடியவனாக நடிக்கிறார்.

    அதே சன்னில் 'நாதஸ்வரம்' தொடரில் ஒரு குடும்பத்தையே அழிக்க பழிவாங்க அநியாயங்களை அடுக்கடுக்காக செய்யும் ராசுவாகவும் நடித்து வருகிறார். 'மகாபாரதம் தொடரில் ருக்மியாக வலம்வ ந்து மிரட்டுகிறார்.

    உள்ளூர மகிழ்ச்சிதான்

    உள்ளூர மகிழ்ச்சிதான்

    இதுவரை பல தொடர்களில் நடித்து இருந்தாலும் இவ்விரு தொடர்கள் மூலம் பாஸ்கரின் பெயர் அநியாயத்துக்குக் 'கெட்டு' இருக்கிறது. இந்த வசவுகளை எல்லாம் தன் நடிப்புக்குக் கிடைத்த வாழ்த்துகளாக எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

    ரஜினி - விஜயகாந்துடன்

    ரஜினி - விஜயகாந்துடன்

    இதுகுறித்து பாஸ்கர் கூறுகையில், "நான் இதுவரை 45 தொடர்களில் நடித்து இருக்கிறேன். பெரும்பாலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம்தான். தொடக் முழுக்க வலம் வந்தாலும் யூனிபார்மை மட்டும் கழற்றவே விட மாட்டார்கள்.

    இந்த தொடர்களில் வந்த யூனிபார்ம் ராசி சினிமாவிலும் தொடர்கிறது. ரஜினி சாருடன் 'சிவாஜி', விஜயகாந்த் சாருடன் 'ரமணா' என்று பல படங்களிலும் தொடர்ந்தது.

    காக்கி யூனிபார்மை விட்டு மாற வேண்டும் என்று கூறி வந்தேன். நிறம் மாறிவிட்டது என்று கூறி வந்த வாய்ப்பு ‘ஜனனம்' படத்தில கூட கலர் மாற்றினார்கள் தவிர யூனிபார்ம் மாறவில்லை. காக்கிக்குப் பதில் மிலிடரி பச்சை யூனிபார்ம் போட வைத்து விட்டார்கள்," என்கிறார்.

    தலைகாட்ட முடியல

    தலைகாட்ட முடியல

    நாதஸ்வரம்' தொடரில் திருமுருகன் தந்த ராசு பாத்திரம் திட்டல் ராசியான பாத்திரமாக மாறிவிட்டதாம். ஒருமுறை அவருக்கு நேர்ந்த அனுபவம் இது: "நான் எங்கும் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. கோயில், மார்க்கெட் என்று போக முடியவில்லை. காதுபட கன்னா பின்னான்னு திட்டறாங்க.

    ஒரு முறை கோயிலுக்குப் போனப்போ ஒரு பெண். 'யார் யார் கோயிலுக்கு வர்றதுன்னு இப்ப விவஸ்தையே இல்லாமப் போய்டுச்சு நல்லவன் வர்றான்.. கெட்டவன்.. வர்றான். கேடுகெட்ட பயல், கொலைகாரன் வர்றான்,''னு திட்டுனாங்க.

    நீ யோக்கியனா?

    நீ யோக்கியனா?

    சற்றுநேரம் கழித்து அவர்களிடம் போய் 'நீங்க அப்படி என்னை நினைக்காதீங்க' என்றேன். ''என்ன.. நீயோக்கியனா? பொண்ணுங்களை இந்தப்பாடு படுத்துற, நீ எப்படி யோக்கியனா இருப்பே நம்பச்சொல்றியா,'' ன்னு சண்டைக்கு வந்துட்டாங்க. இப்படிப் பல அனுபவங்கள்.

    'வந்துட்டான் மோசக்காரன்.. அவன் நாசமாப் போக..' என்றெல்லாம் திட்டுகிறார்கள். மனைவியுடன் போகும் போது இப்படி திட்டுகள் மனைவியின் காதுபட விழவே அவர் என்னுடன் கூட வெளியில் எங்கும் வருவதே இல்லை. அந்தக்காலத்தில் நம்பியாரை இப்படித்தான் திட்டுவார்களாம்,'' என்கிறார் பாஸ்கர்.

    ரியஸ் எஸ்டேட்

    ரியஸ் எஸ்டேட்

    வெளியில் தலைகாட்ட முடியவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் 'நாதஸ்வரம்' இயக்குநர் திருமுருகனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அந்த கேரக்டரை உருவாக்கி இருக்கிறார். என்கிறார்.

    நடிகர் பாஸ்கர், ரியல் எஸ்டேட், கட்டுமானப் பணி என்று ஒரு பக்கம் தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும் இவரிடம் கலையார்வம் நடிப்பார்வம் பஞ்சம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.

    கிருஷ்ணதாசியில் ஆரம்பித்து

    கிருஷ்ணதாசியில் ஆரம்பித்து

    பாஸ்கர் முதலில் நடித்த தொடர் 'கிருஷ்ணதாசி' இவரது ஆறடி உயரம் ஆஜானுபாகுவான தோற்றத்தைப் பார்த்து தானே வந்த போலீஸ் வேடம் அது. அதைப் பார்த்து உடனே வந்த அடுத்த தொடர், 'போலீஸ் டைரி' பிறகு 'கங்கா யமுனா சரஸ்வதி', நதி எங்கே போகிறது, திருமதிசெல்வம், லட்சுமி, செல்வி, அரசி, செல்லமே, வாணிராணி போன்ற 45 தொடர்கள். ஆனால் எல்லாமே போலீஸ் வேடம்.

    வேற வேஷம் கொடுங்களேன்...

    வேற வேஷம் கொடுங்களேன்...

    இனி போலீஸ் வேடமே வேண்டாம் என்று நினைத்து மறுத்து வந்த போதுதான் 'நாதஸ்வரம்' ராசு பாத்திரம் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

    13 ஆண்டுகளாக காக்கி உடைக்குள் சிறைப்பட்டுள்ள தன்னை மீட்க வரும் மீட்பரை வரவேற்க பூச்செண்டுடன் காத்திருக்கிறாராம் பாஸ்கர்!

    English summary
    Baskar, a popular TV artist who completed 45 serials and few movies wanted to come out from his notorious villain image.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X