»   »  2015 பிளாஷ் பேக்: அழகு தொகுப்பாளினிகளின் ஆனந்த கல்யாண ஆல்பங்கள்!!

2015 பிளாஷ் பேக்: அழகு தொகுப்பாளினிகளின் ஆனந்த கல்யாண ஆல்பங்கள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா ஹீரோயின் அளவிற்கு இல்லாவிட்டாலும் ம் சீரியல் ஹீரோயின்கள், டிவி தொகுப்பாளினிகளுக்கும், டிவி செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளங்கள் உண்டு. எங்களுக்கும் பேன்ஸ் இருக்காங்கப்பா என்று சில தொகுப்பாளர்களே வெளிப்படையாக டிவி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளனர். உங்க குரலை கேட்கத்தான் போன் பண்றேன்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று தினசரி காலை முதல் இரவு வரை விடாமல் டிவி லைவ் நிகழ்ச்சிகளில் போன் செய்யும் ரசிகர்களும் இருக்கின்றனர்.

பல ஆண்டுகளாக தொகுப்பாளினிகளாவும், செய்தி வாசிப்பாளர்களும், சீரியல் நட்சத்திரங்களாகவும் இருந்த சின்னத்திரை நட்சத்திங்கள் சிலர் 2015ம் ஆண்டில் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தனர். அவர்களில் சிலர் தங்களின் திருமணத்தை சினிமா படப்பிடிப்பு போலவே நடத்தியுள்ளனர். திருமணத்திற்கு முன்பே போட்டோ ஷூட் நடத்தியும் அசத்தியுள்ளனர் சில ஜோடிகள். அசத்தலான ஜோடிகளின் திருமண தகவல்கள் உங்களுக்காக.

சன் டிவி ஐஸ்வர்யா

அழகு தொகுப்பாளினி ஐஸ்வர்யா அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். சன் சிங்கர், பைரவி சீரியல், பாலச்சந்தர் சீரியர்கள் என பட்டையை கிளப்பிய ஐஸ்வர்யா, சமர்த்து பெண்ணாக பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தனது திருமணத்தை சினிமா பாணியில் படம் பிடித்து யுடுயூப்பில் அப்லோடு செய்துள்ளார்.

புதிய தலைமுறை சரண்யா

புதிய தலைமுறை சரண்யா

செய்திவாசிப்பாளராகவும், சினிமா நடிகையாகவும் அறிமுகமானவர் சரண்யா இப்போது லண்டன் பெண்ணாகிவிட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் சென்னை வந்த அமுதன் சந்திரகுமார் என்பவரை காதலித்து இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். லண்டனில் வசித்தாலும் மீண்டும் தொகுப்பாளராகவேண்டும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை விடவில்லை என்கிறார் சரண்யா.

சன் டிவி நிஷா - கணேஷ் வெங்கட்ராம்

சன் டிவி நிஷாவும், நடிகர் கணேஷ் வெங்கட்ராமும் வேந்தர் வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போய் காதலில் விழுந்தவர்கள். இவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள ஊடகங்களில் பரபரப்பு பற்றிக்கொண்டது. நிச்சயம், திருமணத்தை போட்டோ ஷூட் எடுத்து போட்டது இந்த ஜோடி. அனைவரின் ஆசியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தேறியது.

சன் மியூசிக் அஞ்சனா - கயல் சந்திரன்

சன் மியூசிக் அஞ்சனா - கயல் சந்திரன்

சன் மியூசிக் தொகுப்பாளினியான அஞ்சனா, கயல் படத்தில் நடித்த ஹீரோவை திருமணம் செய்து கொள்ளப்போகிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் 30ம் தேதி நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருவரும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை செய்தனர். அப்போது காதல் எல்லாம் இல்லையாம். சினிமாவில் ஹீரோவான சந்திரன், எடிசன் விருது வழங்கும் விழாவில் அறிமுகமான சந்திரன் மற்றும் அஞ்சனா ஆகியோர் பிறகு காதலிக்க ஆரம்பித்து இப்போது நிச்சயம் வரை வந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் மார்ச் 10ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

கீர்த்தி - சாந்தனு பாக்யராஜ்

கீர்த்தி - சாந்தனு பாக்யராஜ்

மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கீர்த்தி, தான் காதலித்த சாந்தனுவை கரம் பிடித்தார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மானாட மயிலாட, நாளைய இயக்குநர் ஆகிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியான கீர்த்திக்கும், பாக்யராஜ் மகனுமான சாந்தனுவும் நீண்ட நாள் நண்பர்களாக இருந்து காதலித்து கடந்த ஆகஸ்ட் மாதம் இல்லற பந்தத்தில் இணைந்தனர். திருமணத்திற்குப் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பிற்கு டாடா சொல்லிவிட்டார் கீர்த்தி.

English summary
Television's beauty, Aishwarya tied the knot this year. Nisha,Sharanya,Anjana are tied knot engaged on 2015.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil