»   »  செய்திவாசிப்பாளர் சரண்யாவிற்கு ஆக.27ல் கல்யாணம்

செய்திவாசிப்பாளர் சரண்யாவிற்கு ஆக.27ல் கல்யாணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்திவாசிப்பளரும் நடிகையுமான சரண்யாவிற்கு வரும் 27ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரண்யாவிற்கு கணவராக வரப்போகும் மணமகனின் பெயர் அமுதன். இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த அமுதனின் குடும்பத்தினர் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர்.

TV news anchor Sharanya gets ready to enter into wedlock

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிற்கு வந்த போது அமுதனை சந்தித்துள்ளார் சரண்யா. நட்பு காதலாகி இப்போது கல்யாணம் வரை வந்துள்ளது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்னர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. வரும் 27ம்தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்குப் பின்னர் சரண்யா லண்டனில் செட்டில் ஆகப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TV news anchor Sharanya gets ready to enter into wedlock

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் சரண்யா. சரண்யா வாசிக்கும் செய்தியை கேட்கவே தனி ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Puthiya Thalaimurai TV news reader Sharanya is getting ready to enter into wedlock soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil