»   »  சைத்தான் பட வில்லியானார் ‘மச்சான்’ பூமிகா

சைத்தான் பட வில்லியானார் ‘மச்சான்’ பூமிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மச்சான் என்ற வார்த்தையைக் கேட்டால் முன்பு நமீதாவின் நினைவு வரும் இப்போது மச்சான் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் வம்சம் பூமிகா.விஜய் ஆண்டனி நடிக்கும் சைத்தான் படத்தில் வில்லியாக அறிமுகமாகியுள்ளாராம் பூமிகா என்கிற சந்தியா.

சின்னத்திரை நாயகிகள், தொகுப்பாளர்கள் சினிமாவிற்கு வருவது புதிய விசயமில்லை. சின்னத்திரை முக்கிய கதாபாத்திரங்களில் இல்லத்தரசிகளை கவரும் பாத்திரத்தில் நடிப்பவர்கள் சினிமாவில் வில்லத்தனம் செய்கின்றனர்.

TV Serial actress Santhiya debut negative role in Vijay Antony movie

அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் நடிகை சந்தியா. இவர் அத்திப்பூக்கள் என்ற சீரியலில் நடித்து இல்லத்தரசிகளைக் கவர்ந்தவர். தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் வம்சம் தொடர் மூலம் தினசரி இரவு 8.30 மணிக்கு வந்து போகிறார்.

விஜய் ஆன்டணி புண்ணியத்தில் சினிமாவிற்குள் வில்லியாக காலடி எடுத்து வைக்கிறார். சைத்தான் படத்தில் விஜய் ஆன்டணியை மனரீதியாக சித்ரவதை செய்யும் வேடமாம். பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் சந்தியா. இந்தப்படத்தில் தனது கொஞ்சும் குரலில் பேசி நடிக்கிறாராம்.

சீரியலைப் போல சினிமாவிலும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறாராம் சந்தியா. சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வருவேன் என்கிறார் சந்தியா. நீங்க அசத்துங்க மச்சான்...

English summary
TV Serial actress Santhiya debut Cythan movie. Santhiya play egative role in Vijaya Antony's movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil