»   »  நீங்க எல்லாம் எங்க இருந்துயா வர்றீங்க? கலகலக்கும் டிவி சீரியல் வசனங்கள்!!

நீங்க எல்லாம் எங்க இருந்துயா வர்றீங்க? கலகலக்கும் டிவி சீரியல் வசனங்கள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரையில் அழுகாச்சி சீரியர்கள்... அடுத்தவர்கள் குடியை கெடுக்கும் சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வசனங்களில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மரகத வீணை' என்ற மொக்கை சீரியலில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரும், ஏட்டம்மாவும் பேசிகொள்ளும் வசனங்கள் இருக்கே.... அட அட அட அந்த வசனங்களை எழுதிய கைக்கு மோதிரம்தான் போடணும்.

பல்பு வசனங்கள்

பல்பு வசனங்கள்

சரசு உடன் திருமணமான சுப்புவை காதலிக்கும் சப் இன்ஸ்பெக்டர் கவிதா, செய்யும் வில்லத்தனங்கள்தான் சீரியலின் முக்கிய அம்சம். இதற்காக காஞ்சிபுரத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு போனது முதல், சென்னைக்கு மறுபடியும் மாற்றலாகி வந்தது வரை அதிரடிதான்.

கரண்டு இருக்கிற இடத்திலதான்…

கரண்டு இருக்கிற இடத்திலதான்…

ஏம்மா காஞ்சிபுரத்தில இருந்து சென்னைக்கு மறுபடியும் மாற்றலாகி வந்தீங்க? என்று கவிதாவிடம் ஏட்டம்மா கேட்கவே, கரண்ட் இருக்கிற இடத்திலதான் பல்புக்கு வேலை என்கிறார்.

குண்டுபல்பு

குண்டுபல்பு

அம்மா இப்ப எல்லாம் குண்டு பல்புக்கு வேலையில்லை தூக்கி போட்டுட்டாங்க. எல்இடி பல்புதான் என்று வசனம் பேச... நானா குண்டு பல்பு... நீ என்னமோ டியூப் லைட் மாதிரி ஒல்லியா இருக்கியோ என்று கேட்கிறார்.

நீங்க எல்இடி பல்பு

நீங்க எல்இடி பல்பு

நான் சரசுவை சொன்னேன்... அவதான் குண்டு பல்பு மாதிரிதான் இருக்கா. நீங்க எல்இடி பல்பு மாதிரி அழகா இருக்கீங்க என்று கூறி ஐஸ் வைக்கிறாள்.

ஃபேஸ்புக், டுவிட்டர்

ஃபேஸ்புக், டுவிட்டர்

இன்றைக்கு பேசிய வசனமோ அதைவிட காமெடி... இப்ப எல்லாம்.. தும்மினா கூட டுவிட்டல்தான் முகம் பார்த்தா கூட ஃபேஸ்புக்லதான் பார்க்கறாங்க... வண்டை வண்டையா திட்னா கூட வாட்ஸ் அப்லதான் திட்றாங்க என்று போகிறது வசனம்.

இப்படி எல்லாம் எப்படி எழுதறாங்க... எங்கதான் ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

English summary
Some of the TV serial dialogues are rocking the houses

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil