»   »  டிவி சீரியல்களில் அரங்கேறும் கொலைகள்... நோயை விலை கொடுத்து வாங்கும் இல்லத்தரசிகள்!

டிவி சீரியல்களில் அரங்கேறும் கொலைகள்... நோயை விலை கொடுத்து வாங்கும் இல்லத்தரசிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று மணிக்கொரு அறிக்கைகள், செய்திகள் வந்து கொண்டிருக்க, டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எபிசோடுக்கு எபிசோடு கொலைகள், குடும்பத்திற்கு குழி பறித்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. டிவி சீரியல்களினால் உறவுமுறைகளுக்கு இடையே சிக்கல்கள் அதிகரிப்பதோடு, உடல்நலத்திற்கும், மனதிற்கும் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றனவாம்.

சகோதரி முறை என்று வந்த பின்னும் அடையத்துடிக்கும் வில்லன், கணவன் குடும்பத்தினரை கூண்டோடு குழி தோண்டி புதைக்க நினைக்கும் மருமகள் உமா என சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாமரை டிவி சீரியல் 500 எபிசோடுகளை ஒருவழியாக கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை 1500 எபிசோடுகள் வரை கொண்டு போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் இயக்குநர். இப்போது சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அம்மாவை கொலை செய்த முத்துலட்சுமியை பழிவாங்க, அதே மருத்துவமனையில் வேலை பார்க்கிறார் சினேகா. உதவிக்கு டாக்டர் சக்கரவர்த்தி சினேகா தாய் உதவியில் படித்தவர் இணைந்துள்ளார். முத்துலட்சுமியும், சினேகாவும் ஒருவரை ஒருவர் பகைமையை உள்ளே வைத்து உறவுவாடுகிறார்கள்.

மீனா பற்றிய ரகசியத்தை உன் குடும்பத்தினரிடம் கூறி விடுவேன் என்று கூறி மிரட்டும் கதிர், கதிரை கொல்ல கத்தியோடு அலையும் மீனாவின் கணவர். சினேகாவும் தன் பிறந்த வீட்டை காப்பாற்ற இப்போது ஒரு முடிவு எடுத்திருக்கிறாள். அதற்காக தனது வளர்ப்பு தாயாக இருந்த அத்தை ராஜியை பார்த்து அவள் மடியில் படுத்து அழுகிறாள்.

ஆள் ஆளுக்கு கத்தியும் கையுமாக அலையத் தொடங்கி விட்டனர். ஒரு கருவை கலைப்பது. இல்லையா கத்தியால் கழுத்தை அறுப்பது என்று முடிவு செய்து விட்டார்கள் போல. எனவேதான் எல்லா சீரியல்களிலும் கருவை கலைக்கும் சீன்கள் இடம்பெறுகின்றன.

மீனாவின் வயிற்றில் வளரும் குழந்தையை விஷம் கொடுத்து கொடுத்து கொல்லும் உமாவின் வில்லத்தனம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. விவாகரத்து கிடைத்த பின்னர் முன்னாள் கணவரின் குடும்பத்தினரை ஓட ஓட விரட்டுகிறாள் உமா.

ராஜீயின் பாசம், சினேகாவை கண்டதும் கண்களில் கண்ணீர் என அசத்தலாகவே நடித்திருக்கிறார் நிரோஷா. சினேகா ஏதோ பிரச்சினையில் இருக்கிறார் என்று புரிந்து கொண்டாலும் அதை கேட்காமல் தவிர்க்கிறார்.

பிரியாவின் கணவர் யார் பிரதீப்பா, சஞ்சயா என்ற குழப்பம் வேறு நீடிக்கிறது. போலீஸ்ஐ.ஜிக்கு தன் மகனையே கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் மருமகள் என்ற பெயரில் ஒரு பெண் வேறு வந்து அட்டகாசம் செய்கிறார். இந்த குழப்பத்தை எப்படியும் ஆயிரம் எபிசோடுகள் வரை இழுத்து விடுவார்கள் என்பது நிச்சயம்.

தாமரை 500

தாமரை 500

பிற்பகல் 1.30 மணிக்கு சன்டிவியில் ஒளிபரப்பாகும் தாமரை சீரியரை ஒரு வழியாக 500 எபிசோடுகளை ஓட்டி விட்டார்கள். இன்னும் பல பரபரப்பு திருப்பங்களுடன், புதிய கதாபாத்திரங்கள் இணைய உள்ளதாக கூறியுள்ளார் தாமரை சீரியலின் இயக்குநர். இந்த வாரம் சூப்பர் சேலஞ்சிலும் இதனை கொண்டாடுகின்றனர்.

குடும்பத்தை கெடுக்கும் சீரியல்கள்

குடும்பத்தை கெடுக்கும் சீரியல்கள்

குல தெய்வம் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் சீரியலில் திருமணமான அத்தை பையனை மடக்கிப் போட முயற்சி செய்யும் பெண், மருமகளை கொலை செய்த மாமனார். என கதை நகர்கிறது. குடும்ப கதைகளை எடுத்த இயக்குநரா இப்படி சீரியல் எடுப்பது என்று திட்டுகின்றனர். இதனால் குலதெய்வம் சீரியல் டிஆர்பியில் பின் தங்கி வருகிறது.

கருவே உருவாகக்கூடாது

கருவே உருவாகக்கூடாது

சன்டிவியில் மட்டுமல்ல விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து சேனல்களிலும் இருதார திருமணங்கள், திருமணம் ஆன ஆணை கவர முயற்சி செய்யும் பெண்கள் என கதை கன்றாவியாகவே உள்ளது. லட்சுமி வந்தாச்சு தொடரில் லட்சுமியின் கருவை கலைக்க தேன்மொழியின் அம்மா இளநீரில் விஷத்தை கலந்து கருவை கலைக்க முயற்சிக்கிறாள். லட்சுமி தப்புவாளா என்பதே எதிர்பார்ப்பு.

வேதவல்லிக்கு வேட்டு வைக்கும் கல்பனா

வேதவல்லிக்கு வேட்டு வைக்கும் கல்பனா

தலையணைப் பூக்கள் தொடரில் ராமநாதன் வீட்டு மூத்த மருமகள் கல்பனாவில் வில்லத்தனம் ஓவராகவே உள்ளது. நாகராஜை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மருமகளாக காலடி எடுத்து வைத்திருக்கிறாள் வேதவல்லி. கல்பனாவின் வில்லத்தனங்களை சமாளிப்பாளா வேதவல்லி?

படையெடுக்கும் பாம்புகள்

படையெடுக்கும் பாம்புகள்

கொலைகள், குழிபறிப்புகள் ஒருபுறம் இருக்க, பாம்புகள் வேறு டிவி சீரியலை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. இந்த சீரியல்களை பார்த்து பார்த்து கடைசியில் பிபி, சுகர் போன்ற நோய்களை காசு கொடுத்து வாங்கி வருகின்றனர் இல்லத்தரசிகள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதயநோய்கள்

இதயநோய்கள்

டிவி சீரியல்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு இதயநோய் வரும் ஆபத்து அதிகம் இருக்கிறது என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். இப்போது ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்த்தால் ஒரே வாரத்தில் ஹார்ட் அட்டாக் வருவது என்னவோ நிச்சயம்தான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மருத்துவர்கள் எச்சரிக்கை

மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் 2030க்குள் 23 மில்லியன் மக்கள், இதய நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஒரே இடத்தில் உட்கார்ந்து டிவி சீரியல் பார்க்கும் பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் டிவி சீரியலில் காட்டும் கற்பனை நிகழ்ச்சிகள், நிஜவாழ்வில் செயல்முறையாக மாறி, பாலியல் மற்றும் இதயநோய்கள் வர வழிவகுக்கிறது என்கின்றனர்.

நூற்றுக்கணக்கான சீரியல்கள்

நூற்றுக்கணக்கான சீரியல்கள்

சன்டிவியில் மட்டும் 18 தினசரி சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், பாலிமர் டிவி,ஜெயா டிவி என பல சேனல்களில் தினசரி நூற்றுக்கணக்கான சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. உடம்பையும் மனதையும் கெடுக்கும் டிவி சீரியல்களை இனி பார்ப்பதா வேண்டாமா என்று யோசியுங்க மக்களே!

English summary
Every hour spent watching TV each day increases the risk of dying from heart disease by almost a fifth, say scientists.The scientists warned that it was not only telly addicts whose lazy lifestyles put them in danger.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil