»   »  இவங்க எல்லாம் ஏன் திடீர்னு காணாம போயிட்டாங்க!...

இவங்க எல்லாம் ஏன் திடீர்னு காணாம போயிட்டாங்க!...

Posted By:
Subscribe to Oneindia Tamil

கணவனை மாத்தணுமா, மனைவியை மாத்தணுமா கவலையே வேண்டாம் ஒரு கார்டு போதும் உடனே மாறிடுவாங்க. என்ன அதிர்ச்சியா இருக்கா? டிவி சீரியல்லதான் இது ஈசியா நடக்கிறதே.

சினிமாவில் ஒரு கதாபாத்திரம் நடித்தவர் திடீரென இறந்து விட்டாலோ, அல்லது நடிக்க வராமல் வம்பு செய்தாலோ அந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படும். ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் அப்படி இல்லை. நடிகையோ, நடிகரோ வம்பு செய்கிறாரா கவலையே படமாட்டார்கள். இவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டுவிட்டு சீரியலை தொடர்ந்து கொண்டு இருப்பார்கள்.

நேற்றுவரை கணவராக நடித்தவருக்கு பதிலாக இன்று வேறொருவர் நடித்துக் கொண்டிருப்பார். அதேபோல மனைவியாக நடித்தவருக்கு பதிலாக மற்றொருவர் வந்து நடிப்பார். இப்படி இவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டு நடிக்க வைப்பது குடும்ப கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்று புகார் கூறுகின்றனர் சீரியல் ஆர்வலர்கள். (சமூகத்தைப் பற்றி கவலைப்பட்டா சமூக ஆர்வலகர்க, சீரியலைப்பற்றி கவலைப்பட்டா சீரியல் ஆர்வலர்கள்தானே)

இப்படி ஆளை மாற்றி கார்ட் போட்டு நடிக்க வைப்பவர்களை எதிர்த்து உண்ணாவிரதம் கூட அறிவிச்சாங்க.

ஒரு சீரியலில் தகப்பனாரை மாற்றியும்,கணவரை, மனைவியை மாற்றியும் இவருக்கு பதில் இவர் என்று வேறு ஒரு நபரை அறிமுகப்படுத்துவது போன்ற செயலினால் கதையையே கொலை செய்வதாக உள்ளது. இந்த சீரியல்களை பார்க்கும் நபர்களை அறிவற்றவர்களாக கருதுகிறார்களா என்பது தெரியவில்லை என்றும் இந்த சீரியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினாங்க.

இந்த நிகழ்ச்சிகளும் நம் குடும்பத்தில் நடக்ககூடும் என்று கருதுவது இல்லை. பிற்காலத்தில் இப்படிப்பட்ட சீன்கள் நம் குடும்பத்தையும் பாதிக்கக்கூடும் என்று எண்ணுவது இல்லை.

தமிழ் மக்களுக்கு இப்போது அறிவு வளர்ச்சிக்கு உதவும் சின்னதிரை பெரியதிரை கதைகள் இல்லை.எப்படி கொலை செய்வது, கொலையை எப்படி மறைப்பது, எப்படி திருடுவது, லஞ்சம் கொடுப்பது, ஏமாற்றுவது், குடும்பத்தாரை எப்படி கெடுப்பது என்ற செயல்களை படம் பிடித்து காட்டி வன்முறையை வளர்த்து வருகிறது. தீயசக்திகள் எப்படி செயல்படுவது. அரசியல் இன்று மக்களுக்கு எப்படி துரோகம் செய்கிறது என்பதை எடுத்துகாட்டுகிறது.

இந்த நிகழ்ச்சியை பார்க்கும் குழந்தைகளின் கேள்விக்கு பெரியவர்கள் சரியான பதில் கூறமுடியவில்லை. இப்படிப்பட்ட காட்சிகள் சின்னத்திரையில் வருவது நடைமுறைக்கு வந்தால் மனிதர்கள் மிருக பண்புகளுடன் வாழும் நிலை ஏற்படும். கலையுலகினர் இதை கருத்தில் கொள்ள வேண்டும் அப்படின்னு அவங்க அறிக்கை விட்டிருக்காங்க.

இந்த ஆண்டு யாரெல்லாம் காணாம போனாங்க, அவங்களுக்கு பதிலா யாரெல்லாம் வந்தாங்க? தெரிஞ்சுக்கலாமா?

இர்பான்

இர்பான்

சரவணன் மீனாட்சி இரண்டாம் பகுதி சீரியலின் ஹீரோ சரவணணுக்கு திடீர் என சினிமா வாய்ப்பு வரவே, அவருக்கு பதிலாக ஒருவரை புகுத்தினார்கள். அவரும் பழுதில்லாம் நடித்திக்கொண்டிக்கிறார்.

 பொன்னூஞ்சல் அபிதா

பொன்னூஞ்சல் அபிதா

சன் டிவியில் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் பொன்னூஞ்சல் தொடரின் கதாநாயகி நந்தினியாக அபிதா நடித்தார். அவருக்கு என்ன ஆயிற்றோ திடீரென சமீதா நடித்துவருகிறார். ஏற்கனவே நந்தினியின் தங்கையாக நடித்த ரேவதியும் ஆள்மாறாட்டத்தில் அடிபட்டவர்தான்.

இளவரசி

இளவரசி

இளவரசி தொடரில் மகாலட்சுமி கதாபாத்திற்கு மூன்று பேரை மாற்றி நடிக்க வைத்துவிட்டார்கள். அதேபோல இளவரசியின் கணவர் என்ன ஆனார் என்றே தெரியாமல் முடித்ததுதான் சோகம்.

 முத்தாரம் விஜயலட்சுமி

முத்தாரம் விஜயலட்சுமி

முத்தாரம் தொடரில் முதலில் நடித்தவர் தேவயாணி. அவருக்கு பதிலாக விஜயலட்சுமி நடித்தார். அவருக்கும் ஏதோ சிக்கல் போல, பிளாஸ்டிக் சர்ஜரி அது, இது என்று கூறி அலைக்கழித்தார்கள்.

 சொந்த பந்தம் சபர்னா

சொந்த பந்தம் சபர்னா

சொந்த பந்தம் தொடரே கந்தரகோலம்தான். கதாநாயகி முதலில் மாற்றப்பட்டார். வில்லி ரேஷ்மாவிற்கு இதுவரை மூன்று பேர் மாறிவிட்டனர்.

 பாரதிக்கு பதில்

பாரதிக்கு பதில்

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் உறவுகள் சங்கமம் தொடரில் நடித்த பாரதிக்கு என்ன ஆயிற்றோ அவருக்கு பதில் துர்கா நடித்து வருகிறார்.

அழகி

அழகி

சன் டிவியில் நீண்ட நாட்களாக நள்ளிரவில் ஒளிபரப்பாகும் தொடர் அழகி. இந்தத் தொடரில் சாலுகுரியன் நடித்த கதாபாத்திரத்திற்கு குட்டி பூஜா மாறினார்.

 தெய்வம் தந்த வீடு

தெய்வம் தந்த வீடு

விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தெய்வம் தந்த வீடு தொடரில் சுதாசந்திரன் மகளாக நடித்த சரண்யாவிற்கு பதிலாக தற்போது மோனிகா நடித்துவருகிறார்.

 சோனியா அகர்வால்

சோனியா அகர்வால்

புதுயுகம் தொலைக்காட்சி சீரியலான மல்லியில் முதலில் நடித்தவர் சோனியா அகர்வால், ஆனால் சம்பள பிரச்சினையில் சோனியா கழன்று கொள்ளவே, அவருக்கு பதிலாக நடிக்கிறார் சான்ட்ரா.

 அடிக்கடி மாறும் பிரேமா

அடிக்கடி மாறும் பிரேமா

சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் தொடர் முந்தானை முடிச்சு. இதில் வில்லியாக நடிக்கும் பிரேமாவிற்கு தற்போது மூன்றாவது ஆள் மாறிவிட்டார். மற்ற இரண்டுபேரை விட இவர்தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.

 மரகத வீணை சரசு

மரகத வீணை சரசு

சீரியலின் பெயர் என்னவோ மரகத வீணை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்,சீரியல் சுத்த மோசம். இதில் சரசுவாக நடித்தவருக்கு பதிலாக இப்போது வேறொருவர் நடித்து வருகிறார்.

 நாதஸ்வரம்

நாதஸ்வரம்

கோபியின் மூத்த தங்கையாக நடித்தவர் இதுவரை நான்குமுறை மாறிவிட்டார் என்ன காரணமோ தெரியலே. தினசரி விடாமல் சீரியல் பாக்கிறவங்களுக்குதான் இந்த மாற்றம் தெரியும் கொஞ்சநாள் பாக்காமல் விட்டு புதுசா பார்த்தா யாருக்கு பதில் யார் என்பதில் குழம்பம் வந்தாலும் வரும். இயக்குநர்களே, சாரி இதில் இயக்குநர்களை குற்றம் சொல்ல முடியாது சமயத்தில் இயக்குநர்களே தூக்கியடிக்கப்படும் சம்பவமும் நடப்பதுண்டு. வம்சம், வாணி ராணி, பாசமலர் சீரியல்களின் இயக்குநர்களும் தற்போது மாற்றப்பட்டு விட்டனர்.

 மாறும் கலாச்சாரம்

மாறும் கலாச்சாரம்

வருங்காலத்தில் சின்னத்திரையில் வருவது போல் குடும்பங்களிலும் இவருக்கு பதில் இவர் என்ற கலாச்சாரம் பரவக்கூடும். மனிதர்களின் பண்பாட்டினையே சீர்குலைக்கும் தொடர்கதைகள் சின்னத்திரையில் தொடர்ந்து வருவதால் பெண்களுக்கு அறுவறுப்பாக உள்ளது. பலருக்கு மனநோய், இரத்த அழுத்தம், திடீர் மாரடைப்பு வருவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுவதாக கொதித்து போய் கூறுகின்றனர் சீரியல் ஆர்வலர்கள். இனியாவது சீரியல் தயாரிப்பாளர்கள் இதை கருத்தில் கொள்வார்களா?

English summary
The most of TV serials characters changes suddenly, a single card post ivaruku pathil ivar. TV serial fans feeling are not consider in serial producers.
Please Wait while comments are loading...