வெட்கமா இல்லை.. கரூர்ல 41 பேர் செத்துப் போயிட்டாங்க.. பிக் பாஸ் போட்டியாளருக்கு ஆதரவு திரட்டும் தவெகவினர்

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட மீனவ பொண்ணு சுபிக்‌ஷா குமாருக்கு சப்போர்ட் பண்ணுங்க என விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவதை பார்த்த சில நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் இன்னமும் தமிழ்நாட்டை விட்டு விலகாத நிலையில், தவெக கட்சியை சேர்ந்தவர் என சுபிக்‌ஷாவுக்கு ஆதரவு திரட்டுவது வெட்கமாக இல்லையா என விளாசி வருகின்றனர்.

TVK cadres supports Bigg Boss Tamil 9 Contestants Meenava Ponnu Subi and gets roasted
Photo Credit:

நேற்று பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் மேடையேறிய சுபிக்‌ஷா தான் ஒரு மீனவ பொண்ணு என்பதை மட்டுமே உஷாராக சொல்லி பலரது ஆதரவை பெற்று வரும் நிலையில், தவெக தொண்டர்கள் அந்த பெண்ணுக்கு வரவிருந்த ஓட்டுக்களையும் போட விடாமல் செய்துவிடுவார்களோ என சோஷியல் மீடியாவில் விவாதம் கிளம்பியிருக்கிறது.

யாரு இந்த மீனவ பொண்ணு சுபி: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட சுபிக்‌ஷா மீனவ பொண்ணு சுபி என ஃபேமஸ் ஆன இன்ஃப்ளூயன்சர். முதல் கடல் vloger என சோஷியல் மீடியாவில் டிரெண்டான இவர் பூர்விகா, சத்யா என ஏகப்பட்ட கடைகளுக்கு ப்ரோமோஷன் செய்துள்ளார். மேலும், விஜய் டிவி நடத்திய ஊ சொல்றியா ஊஊ சொல்றியா நிகழ்ச்சியிலும் முன்னரே பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்களின் படங்களுக்கும் இவர் ப்ரோமோஷன் செய்துள்ளார்.

TVK பொண்ணு: அப்பாவுடன் கடலில் சிறு வயதில் இருந்தே அடம்பிடித்து மீன் பிடிக்கச் சென்று வந்த கதைகளை எல்லாம் சொல்லி விஜய் சேதுபதியின் மனதையும் கவர்ந்து வீட்டுக்குள் சென்ற சுபி தற்போது மீனவ பொண்ணு சுபி என்பதில் இருந்து மாறி TVK பொண்ணு என விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் அவரது வீடியோக்களையும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

கரூர்ல 41 பேர் செத்துப் போயிட்டாங்க: இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் கரூரில் 41 பேர் செத்துப் போயிட்டாங்க, இங்க இந்த தவெகவினர் என்ன பண்றாங்கன்னு பாருங்க என மீனவ பொண்ணுக்கு பிக் பாஸ் வீட்டில் சப்போர்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு இருக்காங்களே என விளாசி எடுத்துள்ளார். மேலும், பலர் இந்தம்மாவும் இன்ஃப்ளூயன்சர் தானா? என்றும் இந்த சீசன் எப்படி இருக்கப் போகுதோ என கேள்வி எழுப்பியுள்ளனர்.

திறமையை மட்டும் பாருங்க: சுபி மீனவ பொண்ணாக இருக்கிறாங்களா, தவெக கட்சியை சேர்ந்தவங்களா? என்பதையெல்லாம் விட்டு விடுங்க, அவங்க பிக் பாஸ் வீட்டில் எப்படி விளையாடுறாங்கனு பாருங்க, அவங்களோட திறமை மற்றும் நடவடிக்கையை வைத்து அவங்களுக்கு சப்போர்ட் செய்வதும், செய்யாததும் மக்களோட முடிவு என்றும் சிலர் சுபிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். தவெக கட்சியினர் ஒட்டுமொத்தமாக சப்போர்ட் செய்தால் சுபி தான் இந்த சீசன் வின்னர் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன. இந்த பிக் பாஸ் வீட்டில் சுபி எத்தனை நாட்கள் தாக்குப் பிடிப்பார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X