»   »  ஆஸ்திரேலியா போகும் வாணி ராணி குழு.... சாமிநாதனை சந்திப்பாரா ராணி?

ஆஸ்திரேலியா போகும் வாணி ராணி குழு.... சாமிநாதனை சந்திப்பாரா ராணி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாணி ராணியில் சீரியலில் தற்போது பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகின்றன. போலீசில் இருந்து தப்பிய ஆர்யாவை கண்டுபிடிக்க கவுதம் முயற்சி செய்கிறான். ராணியின் கணவர் சாமிநாதனை காணாமல் தவித்து வருகிறார் ராணி.

பரபரப்பான எபிசோடுகளுடன் பயணப்படும் வாணி ராணி சீரியல் சில எபிசோடுகள் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், ஊட்டி, தென்காசி, குற்றாலம் என்று பயணித்த வாணி ராணி இப்போது ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

சரவணன் தன் மனைவியுடன் ஆஸ்திரேலியாவிற்கு ஹனிமூன் போக, அங்கே வில்லி தேஜூவும் பயணிக்கிறாள். இருவரையும் சந்தோசமாக இருக்க விடுவாளா? என்பது வாசகர்களின் எதிர்பார்ப்பு.

வாணி ராணி

வாணி ராணி

கடந்த 2013ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
வாணியும் ராணியும் இணை பிரியா சகோதரிகள். பூமிநாதன், சாமிநாதன் அண்ணன் தம்பிகளை திருமணம் செய்த பின்னரும் ஒரே குடும்பத்தில் வசிக்கின்றனர். பணத்தின் மீதான ஆசையால் பூமிநாதன் கொண்ட பொறாமையால் ராணியின் குடும்பம் வாணி குடும்பத்தை விட்டு பிரிகிறது.

மூன்று வில்லிகள்

மூன்று வில்லிகள்

வாணி குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னர் நடுத்தர வாழ்க்கை வாழும் ராணியின் குடும்பம் பல சிக்கல்களை சந்திக்க வாணிதான் அரணாக இருந்து காக்கிறாள். ராணியின் வெகுளித்தனம் நல்ல மனதும் அவளது குடும்பத்தை காக்கிறது. மாமியார் மட்டுமே வில்லத்தனம் செய்த இந்த சீரியலில் இப்போது டிம்பிள், தேஜூ என்ற இரு வில்லிகளும், ஆர்யா என்ற வில்லனும் வாணி குடும்பத்தை அழிக்க துடிக்கிறான்.

சாமிநாதன் எங்கே?

சாமிநாதன் எங்கே?

சரவணனுக்கு நினைத்தது போலவே ராணி திருமணம் செய்து வைக்க, வீட்டை விட்டு வெளியேறுகிறார் சாமிநாதன். பணத்தையும் தொலைத்து விட்டு வீதியில் நிற்கும் சாமிநாதனுக்கு எங்கே செல்வது என்று தெரியாமல் பிளாட்பாரமே வீடாகிறது,

வாணியின் ஆறுதல்

வாணியின் ஆறுதல்

கணவரை நினைத்து உண்ணாவிரதம் இருக்கும் ராணியை சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறாள் ராணி. அக்காவின் அன்பில் கரைந்து போகும் ராணிக்கு அக்கா செய்த உப்புமா ருசியாக இருக்கிறது.

ஆர்யாவை தேடும் கவுதம்

ஆர்யாவை தேடும் கவுதம்

வில்லன் ஆர்யா, தப்பிச்செல்ல, அவனை தேடி வருகிறார் போலீஸ் கவுதம். குழந்தையை எப்படி வளர்ப்பது என்று இப்போதே திட்டம் போடுகிறாள் பூஜா, சரவணனை அவளது மனைவியுடன் சேர்ந்து வாழ விடக்கூடாது என்று திட்டம் போடுகின்றனர் தேஜூவும், டிம்பிளும். இவர்கள் திட்டம் பலிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வாணி ராணி

ஆஸ்திரேலியாவில் வாணி ராணி

வாணி ராணி குழு ஆஸ்திரேலியா செல்ல சென்னையில் இருந்து புறப்பட்ட போது ரசிகர்களுக்கு உற்சாக ஹாய் சொல்லி கிளம்பியுள்ளனர். ஆஸ்திரேலியா தமிழர்களும் வாணி ராணி குழுவினரை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

பரபரப்பான திருப்பங்கள்

வாணி ராணி குழு தற்போது ஆஸ்திரேலியா பயணித்துள்ளது. அங்கே வில்லன் ஆர்யா, வில்லிகள் பூஜா, டிம்பிள் என்ன செய்யப் போகிறார்கள். ஹனிமூன் சென்றுள்ள சரவணனுக்கு சிக்கல் வருமா? அதே போல சாமிநாதனை ராணி சந்திப்பாளா? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது வாணி ராணி.

English summary
Radhika Sarathkumar led Vaani Raani team has left for Australia for shooting some Important episodes there.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil