»   »  சிரிப்பு போலீஸ் ஆக சித்தரிக்கப்படும் சீரியல் போலீஸ்கள்: கடுப்பேத்துறாங்க மை லார்ட்...

சிரிப்பு போலீஸ் ஆக சித்தரிக்கப்படும் சீரியல் போலீஸ்கள்: கடுப்பேத்துறாங்க மை லார்ட்...

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடவுளே... இவங்களை எல்லாம் நாடு கடத்துங்க... இல்லையா என்னை நானே தமிழ்நாட்டை விட்டு கடத்துங்க என்பதாகத்தான் இருக்கிறது தமிழ் டிவி சீரியல்களை பார்க்கும் ரசிகர்களின் மனநிலை. காலை முதல் இரவு வரை சீரியல் ஒளிபரப்பினாலும், இரவு நேரங்களில் பிரைம் நேரங்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சன் டிவியில் இரவு 6 மணி முதல் 9.30 மணிவரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாமே ரசிகர்களை கடுப்பேற்றும் வகையாகவே இருக்கிறது. அதிலும் வில்லி, வில்லன்களின் கோமாளித்தனமாக செயல்களைக் கூட சிரிப்பு போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் கூடுதல் காமெடி. சினிமாவில்தான் காவல்துறையை காமெடி பீஸ் ஆக காட்டினால் டிவி சீரியலிலும் லாஜிக் இல்லாத சிரிப்பு போலீசாகவே சித்தரிப்பதுதான் வாசகர்களை கடுப்படிக்கிறது.

வம்சம் 1000

வம்சம் 1000

சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த கால சீரியல்கள் எல்லாம் 300 எபிசோடுகளைக் கூட கடந்ததில்லை. ஆனால் வம்சம் மட்டும் எப்படி 1000 எபிசோடுகளை கடந்தது என்பதுதான் ஆச்சரியம்.

நடிகர்களை காணவில்லை

நடிகர்களை காணவில்லை

டிவி சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டு ஆளை மாற்றுவது சாதாரண விசயம். ஆனால் இங்கே பல கதாபாத்திரங்கள் காணாமல் போய்விட்டனர். இப்போது கலெக்டர் அர்ச்சனாவின் கணவர் பொன்னுரங்கத்தையும் காணவில்லை. சீரியலில் இப்போது பூமிகா குடும்பமும், வில்லன் நந்தகுமாரின் வில்லத்தனங்களும் மட்டுமே ஒளிபரப்பாகி வருகின்றன.

காமெடி போலீஸ்

காமெடி போலீஸ்

நந்தகுமாரை கொலை செய்து விட்ட குற்றத்திற்காக டாக்டர் மதனை சிறையில் தள்ளிய போலீஸ், நந்தகுமாரே கண் முன்னால் வந்தும், அடையாளம் தெரியாதது போல இருப்பது, அவன் கொடுக்கும் பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு மயங்கி விழுவது என காவல்துறையினரை கிரியேட்டிவ் ஹெட் ரம்யா கிருஷ்ணன் இவ்வளவு கேவலமாக காட்டியிருக்க தேவையில்லை.

தெய்வமகள் காமெடி

தெய்வமகள் காமெடி

அதே சேனலில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் நம்பியை கொலை செய்து விட்டதாக கூறி சத்யாவை சிறையில் அடைக்க, கர்ப்பிணி சத்யா படும் கஷ்டங்களை காட்டி இல்லத்தரசிகளை உச்சு கொட்ட வைக்கின்றனர்.

உயிரோடு இருக்கும் நம்பி

உயிரோடு இருக்கும் நம்பி

நம்பியின் மாமா பிணத்தை பார்த்து விட்டு அறிவுடைநம்பி காலில் குபேரன் மச்சம் இருப்பதாக கூறி அது நம்பி இல்லை என சொல்ல, கந்தசாமியோ அவரை சமாதானம் படுத்தும் போது பிராகாஷ் கேட்க, நம்பி உயிரோடுதான் இருக்கிறான் என்பது பிரகாஷ்க்கு தெரியவருகிறது. அதற்குள் தந்திரமாக காயத்திரி நம்பி என கூற பட்ட உடலை எரித்துவிடுகிறார்.

அசராத காயத்ரி

அசராத காயத்ரி

நம்பியை புதைக்கும் நேரத்தில் உயிர் இருப்பதை அறிய , அதே நேரத்தில் கந்தசுவாமி போன் செய்து ஜெய் ஹிந்த் விலாஸ் பத்திரத்தை போலி லாக்கர் சாவி தயார் செய்து அந்த ஒரிஜனல் பத்திரத்தை எடுத்து விட்டு பொய் பத்திரம் தயாரித்து அறிந்து நம்பியை அடித்தும், குடியை ஊற்றி கொடுத்தும் பயன் இல்லாமல் போகிறது. நம்பியை அடித்து மயக்கமாக்கி கேரளாவிற்கு கடத்திய காயத்ரி இதற்கு எல்லாம் அசந்ததாக தெரியவில்லை. சத்யாவின் கர்ப்பத்தை கலைக்க திட்டமிடுவது, ஜெய்ஹிந்த் விலாசை அடைவேன் என்று கூறி பகிரங்கமாக சவால் விடுவது என வில்லத்தனம் தொடர்கிறது.

எவிடெண்ட் கொடுங்க

எவிடெண்ட் கொடுங்க

நம்பி உயிரோடுதான் இருக்கிறான் என்று பிரகாஷ் கூறிய உடன் அதை நம்பி காயத்ரியை கைது செய்ய வந்த போலீஸ், காயத்ரியின் வக்கீல் வந்து சில பாயிண்ட்கள் பேசிய உடன், பேக் அடித்து எவிடென்ஸ் கொண்டு வாங்க காயத்ரியை கைது செய்கிறேன் என்று கூறுவது காமெடி.

எப்போது நிறுத்துவாங்க?

எப்போது நிறுத்துவாங்க?

சன் டிவியில் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த போர் அடித்த சீரியல்களை நிறுத்தி விட்டு டப்பிங் சீரியல், குஷ்பு நிகழ்ச்சி என மாற்றி வருகின்றனர். இரவு நேரத்திலும் இதே போல கடுப்பேற்றும் சீரியல்களை நிறுத்திவிட்டு அந்த நேரத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பயனுள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பரலாமே என்று கேட்கின்றனர் டிவி ரசிகர்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Viewers complaint worst serial Vamsam and Deivamagal. Director of vamsam, viewers mind with one concept : Killing and marrying.. The serial is stupid concepts that even a child will make complaints about this serial.Either change the story to a decent story or Stop telecasting it Else viewers will do anything to take this complaint to next level.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more