»   »  மடிசார் கட்டினா அடையாளம் தெரியாதா காதில் பூ சுற்றும் வம்சம்

மடிசார் கட்டினா அடையாளம் தெரியாதா காதில் பூ சுற்றும் வம்சம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் பெரிய மீசை வைத்துக்கொண்டு கன்னத்தில் மரு வைத்துக்கொண்டு மாறு வேடம் போட்டு வந்து வில்லனை கைது செய்வார் ஹீரோ. ஆனால் சன்டிவியில் வம்சம் சீரியலில் வில்லன் கௌவ்பாய் ஆடை அணிந்து கொள்வதும், கடத்தி வந்த பெண்ணிற்கு மடிசார் கட்டி விடுவதும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுவேடம் போடுவதாக காட்டி பார்ப்பவர்களின் காதில் பூ சுற்றியுள்ளனர்.

சன்டிவியில் வம்சம் சீரியல் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கலெக்டர் அர்ச்சனாவாகவும், சக்தியாகவும் நடித்து வருகின்றனர். அர்ச்சனாவின் கணவர் பொன்னுரங்கம் திடீரென்று போலீஸ் அதிகாரியாக வந்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். கடந்த சில வாரங்களாக அவரையும் காணவில்லை.

பூமிகா குடும்ப கதைதான் கடந்த சிலவாரங்களாகவே ஒளிபரப்பாகி வருகிறது. பூமிகா குடும்பத்தின் பிரச்சினையை தீர்ப்பதுதான் கலெக்டர் அர்ச்சனாவில் வேலையாக இருக்கிறது. மதன் திருந்தியதை அடுத்து நந்தகுமார் என்ற குடுமி போட்ட புது வில்லன் முளைத்துள்ளான்.

வில்லன்நந்தகுமார்

வில்லன்நந்தகுமார்

நந்தகுமாரை ராதாவுக்கு திருமணம் செய்து வைக்கும் வரை போதுமடா சாமி என சொல்ல வைத்த சீரியல் மீண்டும் காதில் பூ சுற்றுகிறது. . ஜோதிகாவுக்கு சபேஷ் உடன் திருமணம் நடந்தும், திருந்தாத நந்தகுமார் முதல் இரவில் ஜோதிகாவை கடத்தி அவரை போல் இன்னெருவருக்கு முகமுடி போட்டு மாற்றி குடும்பத்தை பிரிக்க அனுப்புகிறார்.

ஜோதிகாவாக மாறிய வேதிகா

ஜோதிகாவாக மாறிய வேதிகா

அந்த பெண்ணின் பெயர் வேதிகா. அவர்தான் ஜோதிகாவாக மாறி வந்து சர்வேஷ் தான் தன்னை கடத்தி விட்டதாக கூற, மனநிலை பாதிக்கபட்டு விட்டதாக டாக்டர் வரவழைக்க பட அவர் கடத்தவில்லை என ஜோதிகா கூறுகிறார். முதல் இரவுக்கு ஏற்பாடு செய்ய, மாஸ்க் முகத்துடன் இருக்கும் ஜோதிகா தான் நந்துவை விரும்புவதாக கூறுகிறார்.

முகமுடி நபர்கள்

முகமுடி நபர்கள்

ஜோதிகாவிடம் நந்தகுமார் கடத்தினாரா? என அர்ச்சனா கேட்க தனக்கு எதுவும் தெரியாது என கூறுவதை கேட்டு விட்டு, சர்வேஷ் அவர்களை கூப்பிட்டு அவரை கண்காணிக்க சொல்லுகிறார். முகமுடி செய்து கொடுத்த வள்ளியின் மாமா, ராதாவுடன் போகும் நந்துவை மடக்கி பத்து கோடி கேட்க, ராதாவை அனுப்பி விட்டு அவரை பள்ளத்தில் தள்ளி விடுகிறார் . உடனே ராதாவுக்குள் சந்தேகம் எழுகிறது.

மதன் மீது கொலைப்பழி

மதன் மீது கொலைப்பழி

இதற்கிடையே நந்தகுமாரின் முகமூடி போல் போட்டு பிணத்தை காரோடு எரித்து விட்டு மதன்தான் நந்தகுமாரை கொலை செய்து விட்டதாக முகமூடி போட்ட ஜோதிகா மூலம் சொல்ல வைக்கின்றனர். இதனால் நந்தகுமார் தலைமறைவாகிறார். உண்மையான ஜோதிகாவோ நந்தகுமாரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிக்க, திருமணத்திற்கு புடவை எடுக்க இருவரும் மாறு வேடத்தில் வருகின்றனர்.

மாறுவேடம்

மாறுவேடம்

தலையில் தொப்பியும், கண்ணாடியும் போட்டால் மாறு வேடமாம். அதேபோல மடிசார் போடுவதும் மாறுவேடம் என்று கூறி ஜோதிகாவை திருமணம் செய்த கணவனுக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு சீன் வைத்திருப்பது காதில் பூ சுற்றல்.
குழந்தை தேவிகாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பேப்பரில் விளம்பரம் கொடுத்து தலைமறைவாக இருக்கும் மதனை கைது செய்ய ஐடியா கொடுக்கிறாள் தேவிகா உருவத்தில் வந்திருக்கும் வேதிகா.

கைது செய்வாரா அர்ச்சனா?

கைது செய்வாரா அர்ச்சனா?

அடையாளம் தெரியாத பிணத்திற்கு நந்தகுமாரின் முகமுடியை மாட்டிவிட்டு அதனை எரித்தது நந்தகுமார்தான் என்ற தகவல் கலெக்டர் அர்ச்சனாவிற்கு தெரிந்து விடவே, நந்தகுமாரை கைது செய்ய திட்டம் போடுகிறார் அர்ச்சனா. ஜோதிகாவை திருமணம் செய்ய நினைக்கும் நந்தகுமாரின் திட்டம் பலிக்குமா? கொலை பழியில் இருந்து மதன் தப்பிப்பானா? போன்ற திருப்பங்களுடன் நகர்கிறது வம்சம்.வம்சம் சீரியலில் பல கதாபாத்திரங்கள் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்பது சீரியல் தயாரிப்பாளர் ரம்யாகிருஷ்ணனுக்கு மட்டுமே வெளிச்சம்.

English summary
Foolishness galore in vamsam serial say fans of the serial

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil