»   »  வாணி ராணி 1000... உற்சாகத்தில் நடிகர்கள்... சூப்பர் சேலஞ்சில் கொண்டாட்டம்

வாணி ராணி 1000... உற்சாகத்தில் நடிகர்கள்... சூப்பர் சேலஞ்சில் கொண்டாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'வாணி ராணி'சீரியல் 1000மாவது எபிசோடை எட்டியுள்ளது. இதனை சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி தொடர் பல நேரங்களில் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. ராணியின் நடிப்புதான் சீரியலுக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுத் தருகிறது.

வாணியும் ராணியும் இணை பிரியா சகோதரிகள். பூமிநாதன், சாமிநாதன் அண்ணன் தம்பிகளை திருமணம் செய்த பின்னரும் ஒரே குடும்பத்தில் வசிக்கின்றனர். பணத்தின் மீதான ஆசையால் பூமிநாதன் கொண்ட பொறாமையால் ராணியின் குடும்பம் வாணி குடும்பத்தை விட்டு பிரிகிறது.

பிரிந்து சென்ற ராணி

பிரிந்து சென்ற ராணி

வாணி குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னர் நடுத்தர வாழ்க்கை வாழும் ராணியின் குடும்பம் பல சிக்கல்களை சந்திக்க வாணிதான் அரணாக இருந்து காக்கிறாள். ராணியின் வெகுளித்தனம் நல்ல மனதும் அவளது குடும்பத்தை காக்கிறது.

மருமகள்கள் பிரச்சினை

மருமகள்கள் பிரச்சினை

வாணியின் மகன்கள் சூர்யா, கவுதம்விற்கு திருமணம் நடைபெற்று மருமகள் வரவே பிரச்சினை ஆரம்பிக்கிறது. சூர்யாவின் மனைவி டிம்பிள், கவுதமின் மனைவி பூஜா இடையேயான பிரச்சினை குடும்பத்தில் சிக்கலை அதிகரிக்கிறது.

சாமிநாதனின் மனநிலை

சாமிநாதனின் மனநிலை

தனது தோல்விக்கும் பிரச்சினைக்கும் காரணம் வாணிதான் என்று நினைக்கும் சாமிநாதன், வாணி குடும்பத்தினர் உடனான உறவை முறித்துக்கொள்ளும் அளவிற்கு பேசுகிறான்.

பூமிநாதனின் உத்தரவு

பூமிநாதனின் உத்தரவு

ராணி குடும்பத்தினருடன் எந்த வித பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று பூமிநாதன் தன் மனைவி வாணியிடம் கூறவே, சகோதரிகள் இடையே பாசப்போராட்டம் நடக்கிறது.

பிரச்சினை செய்யும் டிம்பிள்

பிரச்சினை செய்யும் டிம்பிள்

டிம்பிள் குடும்பத்தினரும், பூஜா குடும்பத்தினரும் வாணி வீட்டில் இருக்க, அதையே சாக்காக வைத்து பிரச்சினை செய்கிறாள் டிம்பிள். கர்ப்பமாக இருக்கும் பூஜாவை மாமியார் தாங்குவதும் டிம்பிளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

வெளியேறும் டிம்பிள்

வெளியேறும் டிம்பிள்

பூஜாவின் பெரியம்மா உடன் டிம்பிள் சண்டை போட, சப்போர்டுக்கு டிம்பிளின் மாமாவும் சேர்ந்து கொள்ள, சண்டை முற்றி பூமிநாதன் சத்தம் போடும் அளவிற்கு வரவே வீட்டை விட்டு வெளியேறுகிறார் டிம்பிள்.

பூங்கொடி குடும்பத்தில் குழப்பம்

பூங்கொடி குடும்பத்தில் குழப்பம்

பூங்கொடி தன் மாமனார் நடத்தும் நாடகத்தால் தன் கணவனுக்கு அத்தை மகளை திருமணம் செய்து கொடுக்கும் நிலைமை ஏற்படுகிறது. இரண்டாவது மனைவியை வீட்டை விட்டு எப்படி விரட்டுவது என்று யோசித்து பூங்கொடி நாடகம் போடுகிறாள்.

1000மாவது எபிசோடு

1000மாவது எபிசோடு

வாணி ராணி சீரியல் 1000மாவது எபிசோடை எட்டப்போகிறது. இதற்கான கொண்டாட்டம் இப்போதே ஆரம்பித்து விட்டது. நடிகர்கள் தங்களின் சந்தோச தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கௌதம் - சூர்யா

வாணியின் மகன்கள் கௌதமும், சூர்யாவும் ரசிகர்களுடன் நேரடியாக உரையாட உள்ளனர். இந்த ஆயிரமாவது எபிசோடினைப் பற்றி பூஜாவும் அழகு தமிழில் கொஞ்சி பேசியுள்ளார்.

சூப்பர் சேலஞ்ச்

சூப்பர் சேலஞ்ச்

சன் டிவியில் ஞாயிறன்று ஒளிபரப்பாக உள்ள சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியில் வாணி ராணி 1000மாவது எபிசோட் கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது. வாணியாகவும், ராணியாகவும் ஒரே நேரத்தில் பேசி அசத்த இருக்கிறார் ராதிகா.

English summary
Super Challenge is a popular game show on Sun TV. Divided into different teams, mega serial actors take part in the fun-filled and entertaining games on the show.The popular mega serial Vani Rani touch 1000 episode that will grace the show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil