»   »  இட்லி அதுவா வெந்துரும்.. தோசையை திருப்பிப் போட்டுத் தாண்டி வேக வைக்கனும்... என்னமா ஒரு தத்துவம்!

இட்லி அதுவா வெந்துரும்.. தோசையை திருப்பிப் போட்டுத் தாண்டி வேக வைக்கனும்... என்னமா ஒரு தத்துவம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சும்மா சொல்லக் கூடாது பாஸ்.. டிவி சீரியல் வசனங்கள் சில நேரம் சினிமா வசனத்தையும் தூரத் துரத்தி தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது. எப்படித்தான் எழுதவாங்களோ.. எங்க உக்காந்து எழுதுவாங்களோ.. புல்லரிக்க வைக்கிறது!

நேற்று கூட ஒரு சீரியலில் செம வசனம் ஒன்று காதில் வந்து விழுந்து காதுக்கு கிச்சுக் கிச்சு மூட்டியது. அடடா.. இப்படி ஒரு தத்துவத்தை இதுவரை எங்கேயுமே கேட்டதில்லையே என்று மனசு ஜெர்க் ஆகிப் போனது.

வழக்கம் போல வண்டி வண்டியாய் கேரக்டர்கள் "வசனம்" பேசும் போன வாணி ராணியில்தான் இதுவும்...!

வாணி ராணியா... வசன ராணியா?

வாணி ராணியா... வசன ராணியா?

வாணி ராணியில் வசனமெல்லாம் படா ஜோரா இருக்கும். ஒவ்வொருவரும் அப்படிப் பேசித் தள்ளுவார்கள். அதுவும் வாணி பேசும் வசனமெல்லாம் "ஆஹாஹா ஓஹோஹோ" ரகமாக இருக்கும்.

நேத்து கேட்ட வசனம் இது

நேத்து கேட்ட வசனம் இது

நேற்றும் இரண்டு கேரக்டர்களை வைத்து அவர்கள் ஆடிய வசன விளையாட்டு அசரடித்தது. சரவணனை அவனுக்குத் தெரியாமலேயே மனதுக்குள் காதலிக்கிறாள் நாயகி. ஆனால் அவனிடம் சொல்லத் தயக்கம். சரவணனோ அவளுக்கு பெண் பார்த்துக் கொண்டு "பிசி"யாக சுற்றுகிறான் அவளுடைய தந்தையுடன்.

உடனே வா கோவிலுக்கு

உடனே வா கோவிலுக்கு

என்ன செய்வது என்று தெரியாமல் கோவிலுக்கு வந்து (என்னா கோவில் அது.. ஆ... அஷ்டலட்சமி நகர் கோவிலாம்) சாமியிடம் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். போதாதென்று தனது உயிர்த் தோழிக்கும் போனைப் போட்டு வரச் சொல்கிறாள்.

ஏன் இந்த அழுகை.. எதற்காக இந்த புலம்பல்?

ஏன் இந்த அழுகை.. எதற்காக இந்த புலம்பல்?

வந்த தோழியிடம் மனதைத் திறந்து புலம்புகிறாள். அவளோ தோழியை கலாய்க்கிறாள். அப்போது அந்தத் தோழி பேசிய வசனம்தான் நம்மைப் புல்லரிக்க வைத்தது.

சில ஆண்கள் இப்படி.. சில ஆண்கள் அப்படி

சில ஆண்கள் இப்படி.. சில ஆண்கள் அப்படி

அந்தத் தோழி கூறுகிறாள், சில ஆண்கள் வெளிப்படையாக இருப்பார்கள். சிலர் கடைசி வரை வெளியில் சொல்லாமல் மனசுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்வார்கள் என்று அவள் தத்துவமாக பேசுகிறாள்.

தோசையை திருப்பிப் போட்டாத்தான்.. !

தோசையை திருப்பிப் போட்டாத்தான்.. !

அடுத்து அந்தத் தோழி பேசிய வசனம்தான் டாப்போ டாப்பும்மா... இட்லிதாண்டி அதுவாக வேகும். தோசையை நாமதாண்டி திருப்பிப் போட்டு வேக வைக்கனும் என்றாரே பார்க்கனும்.. வீடுகளிலெல்லாம் அப்ளாஸ்தான் அந்த வசனத்துக்கு.. சிரிப்பலை சீலிங்கைப் பிய்த்துக் கொண்டு போனது.

எப்படித்தான் இப்படியெல்லாம் உக்காந்து யோசிச்சு எழுதுவாங்களோ.. !

English summary
A dialogue in the Vani Rani serial got big applause from the viewers. Usually Radhika's dialogues will get good response, for a change they gave a chance to small character to utter this dialouge.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil