»   »  என்னம்மா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்களேம்மா: ராதிகாவால் ரசிகர்கள் கவலை #VaniRani

என்னம்மா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்களேம்மா: ராதிகாவால் ரசிகர்கள் கவலை #VaniRani

Posted By:
Subscribe to Oneindia Tamil
பரோல்ன்னா.. ஷாப்பிங்கா?, கலாய்த்த ராதிகா- வீடியோ

சென்னை: வாணி ராணி தொலைக்காட்சி தொடர் குறித்து ராதிகா வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இரவு 9.30 மணி ஆகிவிட்டால் இல்லத்தரசிகள் நிச்சயம் டிவி முன்பு வந்து அமர்ந்துவிடுகிறார்கள். காரணம் நம்ம ராதிகா இரட்டை வேடங்களில் நடிக்கும் வாணி ராணி தொலைக்காட்சி தொடரைப் பார்க்கத் தான்.

ராதிகா சீரியல் என்றால் இல்லத்தரசிகளுக்கு ஸ்பெஷல் என்றே கூற வேண்டும்.

நம்பிக்கை

நம்பிக்கை

ராதிகாவை ஒரு நடிகையாக பார்க்காமல் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்க்கிறார்கள் இல்லத்தரசிகள். அவர் நடிப்பை பார்த்து நம்பிக்கை பெறுகிறார்கள், அவர் அழுதால் இவர்களும் அழுகிறார்கள்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நக்கல் செய்வது போன்று பரோல்னா ஷாப்பிங் போகிறதா என்று ஒரு வசனத்தை பேசி ரசிகர்களின் கைதட்டலை பெற்றார் ராதிகா.

முடிவு

முடிவு

வாணி ராணி சீரியல் இரண்டு மாத்திற்குள் நிறைவடைய உள்ளதாக ராதிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இனி வாணிமா ராணிமாவை பார்க்க முடியாது என்று தெரிந்ததும் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பரவாயில்லை

பரவாயில்லை

வாணி ராணி சீரியல் முடியப் போகிறது என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. ஆனால் நீங்கள் நிச்சயம் வேறு ஒரு புதிய சீரியல் மூலம் எங்கள் வீட்டிற்கு வருவீர்கள் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சீரியல்

சீரியல்

தொலைக்காட்சி சேனல்களில் எத்தனை சீரியல்கள் வந்தாலும் ராதிகாவின் சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் இடையே தனி ப்ரியம் உண்டு. சீரியல்களின் ராணி என்றால் அது ராதிகா என்று கூட சொல்லலாம்.

English summary
Actress Radhika has announced that Vani Rani TV serial is going to end within two months of time. This announcement has made the viewers sad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X