For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  செத்துப் போன கெளதம் - பூஜா.. சிதறிப் போன நெஞ்சங்கள்.. பரபரப்பில் "வாணி ராணி"!

  |

  சென்னை: வாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு நேற்று அதிர்ச்சி நாள்.. அவர்கள் இது நாள் வரை ரசித்துப் பார்த்து வந்த கெளதம் - பூஜா ஜோடியை நேற்றைய அத்தியாயத்தோடு கொன்று விட்டனர். ஆம், கெளதமும், பூஜாவும் தற்கொலை செய்து கொண்ட காட்சி நேற்று இடம் பெற்று நேயர்களை அதிர வைத்து விட்டது.

  என்னதான் சீரியல்கள் மக்கள் மனதைக் கெடுக்கிறது என்று சொன்னாலும் கூட அதை தங்களது வாழ்க்கையின் அங்கமாகத்தான் டிவி நேயர்கள் பலரும் பார்க்கிறார்கள்.

  அந்த வகையில் தமிழ் டிவி நேயர்களை அதிகம் கவர்ந்த ஒரு தொடர் வாணி ராணி. இந்தத் தொடரின் கேரக்டர்களுக்கு தனி ரசிகர்களே இருக்கிறார்கள். ஆனால் நேற்று அத்தனை வாணி ராணி ரசிகர்களும் அதிர்ந்து போய் விட்டனர்.. கெளதம் பூஜா முடிவைப் பார்த்து.

  வாணி மகன் கெளதம்

  வாணி மகன் கெளதம்

  இந்த சீரியிலில் வாணியாக வரும் ராதிகாவின் மகன்தான் கெளதம். இவரது மனைவிதான் பூஜா. கெளதம் வேடத்தில் நடித்து வந்தவர் விக்கி கிருஷ். பூஜா வேடத்தில் வந்தவர் நவ்யா.

  கொடைக்கானல் பயணம்

  கொடைக்கானல் பயணம்

  மகனையும், மருமகளையும் வாணி, கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கிறார். மனசு நிறைய கனவுகள், சந்தோஷம், உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தபடி கொடைக்கானல் வந்து சேருகிறது கெளதம் - பூஜா ஜோடி.

  திடீர் விபரீதம்

  திடீர் விபரீதம்

  ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த பின்னர் ஊர் சுற்றக் கிளம்புகிறது இந்த இளம் ஜோடி. வழியில் அவர்கள் எதிர்பாராத விபரீதத்தை சந்திக்கின்றனர். ஒரு கும்பல் இவர்களைக் கடத்திச் செல்கிறது.

  என்ன ஆனார்கள்

  என்ன ஆனார்கள்

  இருவரிடமிருந்தும் போன் ஏதும் வராததால் வாணியும், அவரது கணவர் பூமிநாதனும் சென்னையிலிருந்து ஓடி வருகிறார்கள். இருவரையும் தேடி அலைகின்றனர். பூஜாவின் தந்தையும் ஓடி வருகிறார்.

  சிக்கிய கடிதம்

  சிக்கிய கடிதம்

  இந்த நிலையில்தான் கெளதம் எழுதி வைத்த ஒரு கடிதம் அவரது அறையிலிருந்து கிடைக்கிறது. அதைப் படித்துப் பார்க்கும் வாணியும், பூமிநாதனும் அலறித் துடிக்கிறார்கள்.

  கேங் ரேப்

  கேங் ரேப்

  அக்கடித்தில் பூஜாவை 5 பேர் கொண்ட கும்பல் கேங் ரேப் செய்து விட்டதாகவும், இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார் கெளதம்.

  உருக்கமான தற்கொலைக் காட்சி

  உருக்கமான தற்கொலைக் காட்சி

  நேற்று இந்த உருக்கமான தற்கொலைக் காட்சி அடங்கிய பாகம் ஒளிபரப்பானது. கெளதமும், பூஜாவும் அழும் காட்சிகளும், பூஜா உருக்கமாக பேசும் வசனங்களும் இடம் பெற்றிருந்தன.

  அபார நடிப்பு

  அபார நடிப்பு

  இருவரது நடிப்பும் இயல்பாகவே இருந்ததை குறிப்பிட்டுச் சொல்லாமல் இருக்க முடியாது. புத்திசாலித்தனம், தைரியம் மிக்க ஆணாக இருந்தாலும் கூட தனது மனைவிக்கு நேர்ந்த கதியை நினைத்து கலங்கி, இடிந்து போன கணவனின் நிலையை கெளதம் வெளிப்படுத்திய விதம் இயல்பாக இருந்தது.

  புன்னகை மன்னன் பாணியில்

  புன்னகை மன்னன் பாணியில்

  அழுது தீர்த்த இருவரும் இறுதியில் தற்கொலை முடிவை எடுத்து மலைக்கு வந்து கைகளைக் கோர்த்தபடி கீழே குதித்து மரணிப்பதாக காட்சி முடிந்தது. கிட்டத்தட்ட புன்னகை மன்னன் பட பாணியில் இருந்தது இந்த தற்கொலைக் காட்சி.

  ரசிகர்கள் அதிர்ச்சி

  ரசிகர்கள் அதிர்ச்சி

  ரசிகர்கள் இந்தக் காட்சியால் அதிர்ச்சி அடைந்துள்ளதை வாணி ராணி சீரியலின் பேஸ்புக் கருத்துக்கள் காட்டுகின்றன. குறிப்பாக ராதிகாவின் அழுகையை அவர்கள் ரசிக்கவில்லை.

  ராதிகா அழலாமா

  ராதிகா அழலாமா

  பலரும் ராதிகா இப்படி அழலாமா என்று கேட்டுள்ளனர். ராதிகாவின் :சீரியலில் இப்படி ஒரு காட்சியா என்பதும் பலரின் அதிர்ச்சியாக உள்ளது.

  முதல் முறையாக

  முதல் முறையாக

  தமிழ் சீரியல்களில் இதுவரை கேங் ரேப் குறித்தோ, இப்படி ஒரு தற்கொலைக் காட்சியோ இடம் பெற்றதில்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வாணி ராணியின் இந்த எபிசோட் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டது என்பது உண்மை.

  எதற்காக இந்த திடீர் முடிவு

  எதற்காக இந்த திடீர் முடிவு

  மறுபக்கம், கெளதம், பூஜா கதையை முடித்ததற்கு என்ன காரண் என்றும் ரசிகர்கள் அலச ஆரம்பித்து விட்டனர். ஒரு வேளை பூஜா கேரக்டரில் நடித்தவருக்கு திருமணம் ஏற்பாடாகியிருக்கலாம். எனவேதான் கதையை முடித்து விட்டார்களா் என்று பலர் பேசுகின்றனர்.

  English summary
  Gowtham and Pooja the key charectors in the serial Vani Rani, have committed suicide after Pooja was ganga raped by a gang in Kodaikanal.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X