ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தேவயானியுடன் வனிதா மோதல்.. அதிர்ந்த ரசிகர்கள்.. அப்புறம் தான் சுவாரஸ்யமே!

சென்னை : பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

90 களில் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்து விட்டு திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய நடிகை வனிதா, தற்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஸ்டாராக உள்ளார்.

ஒரு பக்கம் யூடியூப், நடிப்பு, பிசினஸ் என வனிதா விஜயகுமார் படு பிஸியாக அனைத்திலும் அசத்தி வருகிறார்.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்து தனது மகள்களை கவனித்து வந்த வனிதா விஜயகுமார் மீண்டும் சினிமா, சின்னத்திரை என பிசியாக நடித்து வருகிறார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட்

வனிதாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தனது பிஸினஸை கவனித்துக்கொண்டே படங்களிலும் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலே வெளியேறினார். முன்னதாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும் அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான படங்களில்

ஏராளமான படங்களில்

சின்னத்திரை மட்டுமின்றி மீண்டும் வெள்ளித்திரையிலும் பிசியான நடிகையாக மாறி உள்ளார் வனிதா விஜயகுமார். அனல்காற்று, அந்தகன், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லு இருந்தா போராடு, பிக்கப் ட்ராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு பிஸினஸ் மட்டுமல்லாமல் வனிதா தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஜீ டிவியில்

ஜீ டிவியில்

தற்போது வனிதா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் சிறப்பு விருந்தினராக நுழைந்துள்ளார். இந்த சீரியல் தொடங்கிய சில காலங்களிலேயே நேயர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக மாறிவிட்டது. இதற்கு மிக முக்கியமான காரணம், சீரியலின் கதை அம்சமும் மற்றும் லட்சுமி அம்மாவாக நடிக்கும் தேவயானியின் நடிப்பு தான்.

கடுப்பான வனிதா

கடுப்பான வனிதா

இந்த சீரியலில் ஒவ்வொரு எபிசோடுகளிலும் பலவித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பேட்டி கொடுக்க வரும் வனிதாவிடம், திருமணம் தோல்வியில் முடிந்தது குறித்தும், நீங்கள் பப்ளிசிட்டிக்காகத்தான் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குறீங்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விகளை யார் எழுதினார்கள் எனக் கேட்க, தேவையாணிக்கும் வனிதாவுக்கும் மோதல் ஏற்படுவது போல வெளியான புதிய புரமோ தான் தற்போது ஹாட் டாப்பிக்காக டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X