For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிக்பாஸ் வீட்ட மட்டுமல்ல டிவிட்டரையும் அதிரவிடும் வனிதா! ஓவர் நைட்டில் ட்ரென்டிங்! #vanitha

|
Watch Video : Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 72

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா அந்த வீட்டை மட்டும் அல்ல டிவிட்டரையும் அதிர விட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார் வனிதா. ஆனால் அவரின் ஆணவப் பேச்சு, அதிகாரம், போட்டுகொடுக்கும் புத்தி, சண்டை மூட்டி விடுவது போன்ற காரணங்களால் இரண்டாம் வாரத்திலேயே மக்கள் அவரை புறக்கணித்து வெளியேற்றினர்.

வனிதா இருந்தவரை போர்க்களமாக இருந்த பிக்பாஸ் வீடு, அவர் வெளியே சென்ற பிறகு அமைதி பூங்காவாக மாறியது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரசியமும் டிஆர்பியும் இல்லை.

எதிர்பாராத டிவிஸ்ட்.. கெஸ்ட்டாக பிக் பாஸுக்கு வந்த சாக்‌ஷி.. பாவம் கவின் இனி தினம்தினம் தீபாவளிதான்

மது வெளியேற்றம்

மது வெளியேற்றம்

இதனால் வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் வனிதாவை உள்ளே அழைத்து வந்தார் பிக்பாஸ். இதனால் நிகழ்ச்சி மீண்டும் சூடுபிடித்தது. வனிதா வந்த வேகத்தில் மதுமிதாவை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார். மேலும் கவினை உண்டு இல்லை என செய்து வருகிறார். இதனால பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியுள்ளது.

வனிதா ட்ரென்ட்டிங்

வனிதா ட்ரென்ட்டிங்

நேற்று கவினை கிழித்து தொங்கவிட்டார் வனிதா. இதனால் சமூக வலைதளத்தில் அவர் குறித்து அதிகம் பேசப்பட்டது. கவினின் ஆதரவாளர்கள் வனிதாவை திட்டியும் கவினின் ஹேட்டர்ஸ்கள் வனிதாவை புகழ்ந்தும் டிவிட்டி வருகின்றனர்.

இதன்காரணமாக டிவிட்டர் தளத்தில் வனிதா ட்ரென்ட்டாகியுள்ளார். நேற்றிரவு முதல் #vanitha என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் டிவிட்டி வருகின்றனர். அவற்றில் சில,

வனிதா சொல்வது சரிதான்

வனிதா சொல்வது சரிதான், சேரன் அவார்டு வின்னர்னு தெரிஞ்சிதான அனுப்பியிருக்காங்க. ஷெரின் நடிகைன்னு தெரிஞ்சுதான அனுப்பியிருக்காங்க. அவங்க ஜெயிக்க கூடாதுன்னு கவின் எப்படி முடிவு பண்ணலாம். உனக்கு வின் பண்ண இஷ்டம் இல்லாட்டி போ. சும்மா சிம்பத்தி கிரியேட் பண்ணி நல்லவனா நடிக்காத என்று கூறுகிறார். இந்த நெட்டிசன்.

ஏமாத்திட்டு சுத்துதுங்க

#vanitha கேக்குறதுல தப்பு ஏதும் இல்லையே... இவனுக்கு அவ்வளவு நல்ல எண்ணம்னா போக வேண்டி தானே செவுறேறி குதிச்சி அப்படி இல்லனா இவன் ஜெயிச்சா மொத்த அமௌண்ட்டயும் அந்த மூனு பேருக்கு குடுத்துடுவனா. .அதுங்களே சீட்டு கம்பெனி பேர்ல ஏமாத்திட்டு சுத்துதுங்க என்கிறார் இந்த நெட்டிசன்.

குடியை கெடுக்குறது

மனுஷன்னா தப்பு உணரும் போதும் அழத்தான் செய்வான். அதுக்காக அழக்கூடாதுன்னு சொல்ல #Vanitha யாரு.? என்னமோ பிக்பாஸ் வீட்டுக்குள்ள தனி ராணி மாதிரி இருக்கனும்னு ஆசை படுறாங்க போல அப்படியா.. கமல் சார் பிக்பாஸ்ல டாஸ்க் சரியா பண்ணுறது இல்ல இதுல எல்லார் குடியையும் கெடுக்குறது என்று திட்டுகிறார் இவர்.

அழ கூடாது, பேச கூடாது

#Vanitha தான் பிக்பாஸ் வீட்டின் ஓனர் இப்போது. எலிமினேட் ஆனா கூட திரும்பி வருவாங்க. நினைச்சா மைக்க அப்பப்போ கழட்டி வைப்பாங்க, இவங்க பர்மிஷன் இல்லாம சிரிக்க கூடாது, அழ கூடாது, பேச கூடாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஆப்பு வைக்கவும்

ரூல்ஸ் பிரேக் பண்ணிட்டா அதனால தலைவர் பதவிக்கு ஆப்பு வைக்கவும் என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

100% உண்மை

#Vanitha டூ கவின்- நீ இப்டி பண்ணலனா சாக்சி ஃபைனல்ஸ் போயிருப்பா.. 100% உண்மை.. சாக்ஷி இமேஜ் போனது கவினால் தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ட்ரவுஸர் கழன்டு போச்சு

#Vanitha டா.. பொண்ணுங்கள பகடையா யூஸ் பண்ணவனுக்கு இப்போ புரியும், பொண்ணுனா யாருன்னு.. ட்ரவுஸர் கழன்டு போச்சு கேங் பாய்ஸ் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தவறாக கமென்ட்

#Vanitha எல்லோரும் விட்டுக்கொடுங்கள் சேரன் வெற்றி பெறட்டும் என்று சொல்லவில்லை. அங்குதான் வித்தியாசம் இருக்கு. கவின் நாமினேஷன்ல இன்ஃபுளுயன்ஸ் பண்றார் அவருக்கு என தனிப்பட்ட திறமை இல்ல. அவர் மற்றவர்கள் குறித்து புரணி பேசுவதிலும் மற்றவர்களை தவறாக கமென்ட் அடிப்பதிலும் தான் டைம்பாஸ் செய்து வருகிறார். என வனிதாவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

வாதாடியே வாங்கியிருக்கும்

வனிதா மட்டும் வக்கீலா இருந்தா, POK காஷ்மீர கூட வாதாடியே வாங்கியிருக்கும் ... !!! என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

சிம்பத்தி கிரியேட்டர்

வனிதாவுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். சிம்பத்தி கிரியேட்டர் கவினை பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டியடியுங்கள். அழுதே ஓட்டு பிச்சை எடுக்கும் கவின் பெண்களை சமமாக மதிக்க தெரியாத கவின் என்று வனிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஸ்டேட்மென்ட் கரெக்ட்

#Vanitha சத்தமாக பேசுவார் ஆனால் அவரின் ஸ்டேட்மென்ட் கரெக்ட். கவினின் ஸ்ட்ரேட்டர்ஜியை தர்ஷன் உணர்ந்து கவினை விட்டு விலக வேண்டும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

English summary
Vanitha is trending on twitter. Some fans praising Vanitha and Some scolding Vanitha.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more