திடீரென கன்னித்தீவில் களமிறங்கிய வனிதா விஜயக்குமார்....இனி இங்க தானா மேடம் ?

சென்னை : பிக்பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயக்குமார், அதற்கு பிறகு விஜய் டிவி.,யில் குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

Recommended Video

ஜாதகப்படி சீக்கிரம் நடக்கலாம் | Powerstar Srinivasan fun speech | pickup drop movie |Filmibeat Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, 4 சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை ஒன்றிணைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் வனிதா.

விஜய் டிவி.,யிலிருந்து வெளியேறிய வனிதா

விஜய் டிவி.,யிலிருந்து வெளியேறிய வனிதா

பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த பிரச்சனைக்கு பிறகு விஜய் டிவி.,யில் இருந்தும் வெளியேற போகிறீர்களா என வனிதாவிடம் பலர் பேட்டியின் போது கேட்டனர். ஆனால் விஜய் டிவி தனக்கு தாய் வீடு போன்றது என்றும், இங்கிருந்து தான் போக மாட்டேன் என்றும் உருக்கமாக பதிலளித்தார். ஆனால் சில நாட்களிலேயே விஜய் டிவி.,யில் இருந்தும் வெளியேறினார்.

சினிமாவில் பிஸி

சினிமாவில் பிஸி

பிறகு வனிதாவிற்கு சினிமாவில் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புக்கள் குவிந்தது. பிரஷாந்த் நடிக்கும் அந்தகன், பவர்ஸ்டார் சீனிவாசன் இயக்கி நடிக்கும் பிக்அப் டிராப், வசந்த பாலன் தயாரிக்கும் பெயரிடப்படாத படம் போன்றவற்றில் நடித்து வருகிறார்.

பரபரப்பை கிளப்பிய ஃபோட்டோ

பரபரப்பை கிளப்பிய ஃபோட்டோ

அதோடு பிக்அப் டிராப் படத்திற்காக பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள், கழுத்தில் தாலியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி போன்றவைகள் பெரும் பரபரப்பை கிளப்பின. பவர்ஸ்டார் சீனிவாசனை நான்காவதாக வனிதா திருமணம் செய்து கொண்டார் என வதந்திகளும் பரவி, பரபரப்பாகின.

கன்னித்தீவில் வனிதா

கன்னித்தீவில் வனிதா

இந்நிலையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கன்னித்தீவும் உல்லாச உலகம் 2.0 என்ற நிகழ்ச்சி செட்டில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் வனிதா. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தான் வனிதா கலந்து கொள்ள போகிறாராம்.

சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர்

ஷகீலா, ரோபோ சங்கர், மதுமிதா உள்ளிட்டோர் நடித்து வரும் கன்னித்தீவு சீரியலில் இதற்கு முன் நமீதா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் வனிதாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

விஜய் டிவி.,க்கு குட்பை யா

விஜய் டிவி.,க்கு குட்பை யா

வனிதா பகிர்ந்த இந்த ஃபோட்டோவை பார்த்த பலர் இனி விஜய் டிவி.,க்கு போக மாட்டீங்களா, விஜய் டிவி.,க்கு குட்பை சொல்லிட்டீங்களா, கலர்ஸ் தமிழ் சேனலில் இணைந்து விட்டீர்களா என அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X