»   »  பாயும்புலி, நானும் ரவுடிதான் வீரபாண்டிய கட்டபொம்மன்... ஆக.15 டிவியில பாருங்க...

பாயும்புலி, நானும் ரவுடிதான் வீரபாண்டிய கட்டபொம்மன்... ஆக.15 டிவியில பாருங்க...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. சன் டிவியில் நானும் ரவுடிதான், பாயும் புலி திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயா டிவியில் இறுதிச்சுற்று, பாகுபலி ஒளிபரப்பாக உள்ளது கலைஞர் டிவியில் பையா படமும், இந்தியன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

ராஜ் டிவியில் தேசப்பற்றை உணர்த்தும் வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டம்

சுதந்திர தின கொண்டாட்டம்

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்ற அறிவிப்போது ரசிகர்களை கட்டிப்போட புத்தம் புது திரைப்படங்களை போட்டு போட்டு ஒளிபரப்புகின்றன சேட்டிலைட் சேனல்கள்.

சன் டிவியில் ஸ்பெஷல்

சன் டிவியில் ஸ்பெஷல்

சன் டிவியில் ஞாயிறன்றே இந்த கொண்டாட்டம் ஆரம்பமாவது போல சந்திரமுகி, தெனாலிராமன் ஒளிபரப்பாக உள்ளது. திங்கட்கிழமை காலையில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் திரைப்படங்களும், சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றமும் ஒளிபரப்பாக உள்ளது.

ஜெயா டிவி ஸ்பெஷல்

ஜெயா டிவி ஸ்பெஷல்

சுதந்திர தின சிறப்புத் திரைப்படமாக மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று திரைப்படமும், பிரபாஸ், தமன்னா நடித்த பாகுபலி திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்தியன்

இந்தியன்

சுதந்திர போராட்ட தியாகியாக கமல் நடித்த இந்தியன் திரைப்படமும், கார்த்தி, தமன்னா நடித்த பையா திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன்

சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. சுதந்திர தினத்திற்கு பொருத்தமான திரைப்படம் இதுதான்.

விஜய் டிவி மனிதன்

விஜய் டிவி மனிதன்

உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களை அவ்வப்போது அப்டேட் செய்கிறோம்.

English summary
Sun TV independence day premiere movie Naanum Rowdy Thaan and Payum Puli

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil