»   »  உணவுக்கும் மனசுக்கும் என்ன தொடர்பு? வேந்தர் டிவியில் மாஸ்டர் கிச்சன் பாருங்க!

உணவுக்கும் மனசுக்கும் என்ன தொடர்பு? வேந்தர் டிவியில் மாஸ்டர் கிச்சன் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் நிகழ்ச்சிகளுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி "மாஸ்டர் கிச்சன்"இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளதாம்.

இந்த சமையல் நிகழ்ச்சி, ஒளிபரப்பான காலந்தொட்டு பல்வேறு பரிமாணங்களை அடைந்து தற்போது, மாஸ்டர் கிச்சன் என்ற பெயரில் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மனநலத்தோடு தொடர்புடைய உணவு வகைகள் பலவற்றை நேயர்கள் பயன்பெறும் வகையில் செய்து காட்டி விளக்குகிறார் மனநல மருத்துவர் அபிலாஷா.

Vendhar tv cooking show Master kitchen

வேந்தர் டிவியின் மாஸ்டர் கிச்சன் நிகழ்ச்சி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் தனிச்சிறப்பு வாய்ந்த உணவு வகைகள் நேயர்களுக்கு செய்து காட்டப்படுவதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல் பகுதி ஸ்டார் ஸ்பெஷல் இந்த பகுதியில் பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வித்தியாசமான அறுசுவை உணவுகளை செய்து அசத்துகிறார்கள்.

இரண்டாவது பகுதியில் பிரபல எஸ்.ஆர்.எம். ஓட்டலின் செப் கலந்து கொண்டு தரமான உணவு வகைகளை சுவையாக செய்வது எப்படி என்பதனை விளக்கி சமைத்து காட்டுகிறார்.

Vendhar tv cooking show Master kitchen

மூன்றாவது பகுதி ஹெல்த் மாஸ்டர் என்ற பெயரில் ஆரோக்கிய உணவு வகைகளை சமைத்து காட்டும் பகுதியாக ஒளிப்பரப்பாகிறது. இந்தப் பகுதியில் சமைக்கும் கலையை கையிலெடுப்பவர் பிரபல உளவியல் நிபுணர் அபிலாஷா அவர்கள். மனநலத்தோடு தொடர்புடைய உணவு வகைகள் பலவற்றை நேயர்கள் பயன்பெறும் வகையில் செய்து காட்டி விளக்குகிறார்.

இப்படி இந்த "மாஸ்டர் கிச்சன்"பகுதியில் செய்து காட்டப்படும் உணவு வகைகள் அனைத்தும் உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்ததாக இருப்பதால் நேயர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

English summary
Vendhar TV telecase new cooking show Master kitchen Monday to Friday 12 P.M.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil