»   »  7ம் உயிர்... குளு குளு மணாலியில் படமான திகில் பேய் சீரியல்

7ம் உயிர்... குளு குளு மணாலியில் படமான திகில் பேய் சீரியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்காசியில் தொடங்கிய 7ம் உயிர் சீரியல் கதை 200வது எபிசோடில் இருந்து குளுகுளு மணாலியில் இருந்து பயணப்பட உள்ளது. சின்னத்திரை சீரியலுக்காக முதல்முறையாக உறையவைக்கும் குளிரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் நெடுந்தொடர் "7ம் உயிர்". அண்ட சராசரங்களை அடக்கி ஆளும் சக்தி தனக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கும் தீயவன் வீரபத்திரன் ஒரே நட்சத்திரத்தில் ஒரே நாளில் பிறந்து வெவ்வேறு இடங்களில் வாழும் ஏழு கன்னி பெண்களை அமாவசையன்று பலி கொடுத்தால் அந்த சக்தியை பெறலாம் என நினைக்கிறான் .

வெவ்வேறு இடங்களில் பிறந்திருக்கும் ஏழு இளம்பெண்களை கொள்வதற்கு தேடி அலையும் இந்த தீய சக்தி பற்றிய இந்த திகில் தொடருக்காக தமிழகத்தின் தென்காசியில் தொடங்கிய கதை இமயமலையில் பயணப்படுகிறது.

பெண்களுக்கு ஆபத்து

பெண்களுக்கு ஆபத்து

ஒரே நட்சத்திரத்தில் பிறந்த 7 பெண்களுக்கு ஆபத்தை உருவாக்கும் இந்த வித்தியாசமான திகில் கதையை மிகவும் வித்தியாசமாக கொடுக்க நினைத்த இயக்குனர் ஒவ்வொரு பெண்ணும் பிறந்து வளரும் இடங்களை தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் கேரளாவில் படம்பிடித்து நடத்தினார்.

தென்காசி டூ இமயமலை

தென்காசி டூ இமயமலை

தென்காசி சுந்தரபாண்டியபுரத்தில் அதாவது இந்திய திருநாட்டின் தென்கோடியில் ஆரம்பித்த கதை ,வடகோடியான இமாச்சல பிரதேசத்தில் தற்போது பயணப்படுகிறது .

200வது எபிசோடு

200வது எபிசோடு

7ம் உயித் திகில் தொடர் 200வது பகுதி ஒளிபரப்பாகவிருக்கிறது. கிளைமாக்ஸை நோக்கி கதை நகரஆரம்பித்துள்ளது., இந்த 200வது எபிசோடில் இருந்து ஒளிபரப்பாகவிருக்கும் காட்சிகள் அனைத்தும் இமாச்சல பிரதேசம் மணலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .

குளு குளு மணாலி

குளு குளு மணாலி

திரைப்படப் பாடல்கள் தவிர சின்னத்திரை தொடர்களுக்காக இதுவரை யாரும் இங்கு சென்று படப்பிடிப்பு நடத்தியதில்லை இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வேந்தர் டிவியில் "7ம் உயிர்" நெடுந்தொடருக்காகவே இங்கு படப்பிடிப்பு நடத்தினார்கள் என்பது இத்தொடரின் தனிப்பெரும் சிறப்பு.

கடும் குளிரில் திகில் பேய்

கடும் குளிரில் திகில் பேய்

இத்தொடரைப்போலவே படப்பிடிப்பு நடத்திய இடங்களிலும் திகில் தொடரவே செய்தது .கடுங்குளிர் ,உறைப்பனி ,சில்லென்ற நீரோடை ,செங்குத்தான மலைப்பாதை என்று ரத்தத்தை உறையவைக்கும் சிரமங்களை சந்தித்து "7ம் உயிர்" படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள்.

200வது பகுதி முதல் பரபரப்பான திருப்பங்களுடன் பயணப்பட உள்ள 7ம் உயிர் சீரியல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது .

English summary
7m uyir serial telecast on Vendhar tv touches on 200 episode.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil