»   »  என்ன பொருட்களை எங்கு வாங்கலாம்... வேந்தர் டிவியில் அழகின் அழகே பாருங்க!

என்ன பொருட்களை எங்கு வாங்கலாம்... வேந்தர் டிவியில் அழகின் அழகே பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும் அழகின் அழகே நிகழ்ச்சி நவநாகரீக ஆடைகள், காலணிகள், அணிகலன்கள், ஒப்பனை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை மகளிருக்கு தெரிவிக்கிறது.

வார விடுமுறை நாட்களில் ஷாப்பிங் போவது ஒரு கலை. அதுவும் கடை கடையாக ஏறி இறங்கி மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவது அலாதி சுகம். ஆனால் மனதிற்கு பிடித்த பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

வேந்தர் டிவி அழகின் அழகே

வேந்தர் டிவி அழகின் அழகே

மாறிக்கொண்டே இருப்பதுதான் பேஷன் உலகம். இன்றைய பெண்கள் வாழ்வில் சமீபத்திய வாழ்க்கை போக்குகளைப் பற்றி அலசும் இந்த புதிய நிகழ்ச்சி "அழகின் அழகே". இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

பொட்டிக்

பொட்டிக்

நகரங்களில் புதிதாக தொடங்கப்பட்ட பொட்டிக்குகள், அணிகலன் கடைகள், சலூன்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் ஸ்பா மையங்களை அறிமுகப்படுத்தி, அங்குள்ள சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் தோல் மற்றும் முடி பாதுகாப்பு,ஒப்பனை தந்திரங்கள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றி தெரிவிக்கிறது.

நாகரீக ஆடைகள்

நாகரீக ஆடைகள்

மேலும் இன்றைக்கு டிரன்ட்ல இருக்கின்ற ஆடைகள், காலணிகள், அணிகலன்கள், ஒப்பனை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் புது புது டிசைன்களில் எங்க கிடைக்கின்றது என்பதை நேயர்களுக்கு தெரிவிக்கிறது.

ஷாப்பிங் அனுபவம்

ஷாப்பிங் அனுபவம்

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் தர்ஷிகா .இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. வார விடுமுறையில் ஷாப்பிங் செல்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது என்கின்றனர் இல்லத்தரசிகள்.

English summary
Vendhar TV telecast new program Azhagin Azhage on week days morning 8.30 AM to 10. AM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil