Don't Miss!
- News
இங்க வந்துட்டு எடப்பாடியை பத்தி பேசலனா எப்படி? ரவுண்டு கட்டிய உதயநிதி ஸ்டாலின்! ஆஹா.. மாநாடு மாதிரி!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பாரதி அப்பாவிற்கு வந்த வயிற்று கேன்சர்.. அனைவரிடமும் மறைக்கும் வேணு.. உண்மை தெரிந்தால் என்னவாகும்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக காணப்படும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
இந்தத் தொடரில் ஹேமா மற்றும் லஷ்மி குறித்த உண்மைகளை தெரிந்துக் கொண்ட பாரதி அதை ஏற்க முடியாமல் அனைவரும் பொய் சொல்வதாக நினைக்கிறார்.
பாரதியின் அப்பாவிற்கும் உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. மருத்துவரிடம் அவர் யாருக்கும் தெரியாமல் ஆலோசனை பெறுகிறார்.
வாரிசு
இயக்குநர்
போட்ட
அதிரடி
உத்தரவு..இனிமேலும்
அது
நடக்க
வாய்பே
இல்லை!

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முன்னணி தொடர்களாக பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்றவை காணப்படுகின்றன. இந்தத் தொடர்களை தொடர்ந்து பாரதி கண்ணம்மாதான் ஆளுமை செலுத்தி வருகிறது. ஒரு காலகட்டத்தில் இந்தத் தொடர்தான் முதன்மையான இடத்தை பிடித்திருந்தது. ஆனால் தொடரில் செய்யப்பட்ட மாற்றங்கள், அரைத்த மாவையே அரைத்த கதைக்களம் போன்றவை இந்தத் தொடரை கீழிறக்கியுள்ளது.

உண்மையை வெளிப்படுத்திய கண்ணம்மா
கடந்த சில வாரங்களாக 8வது இடத்தில் இந்தத் தொடர் காணப்பட்டது. இதனிடையே இந்த சிரியல் தற்போது பரபரப்பான கட்டங்களை எட்டியுள்ளது. ஹேமா -லஷ்மி பிறந்தநாளில் ஹேமாவின் அம்மாவாக தன்னுடைய மறைந்த பழைய காதலியின் புகைப்படத்தை பாரதி அனைவருக்கும் காண்பிக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் கண்ணம்மா ஹேமாவின் பிறப்பு ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

குமுறும் பாரதி
ஆனால் இதையெல்லாம் ஏற்க மறுக்கிறார் பாரதி. தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்கில் பங்கேற்க செல்லும் அவரிடம், தன்னுடைய அப்பாவாக டீச்சரிடம் பேச அழைக்கிறார் லஷ்மி. ஆனால் அதை மறுக்கும் பாரதி, குழந்தையின் மனதை எப்படியெல்லாம் கலைத்துள்ளனர் என்று குமுறுகிறார்.

சென்டிமெண்ட் தாக்குதல்
தற்போதைய எபிசோடில், பள்ளிக்கு வராமல் இருக்கும் ஹேமாவை மீண்டும் அனுப்புமாறு தொலைபேசி மூலம் கெஞ்சி அழுதபடி கேட்கிறார் லஷ்மி. தாங்கள் இருவரும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் என்றும் கூறுகிறார். ஆனால் இதையெல்லாம் கேட்டும் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். குழந்தையை வைத்து சென்டிமெண்டாக தன்னை மற்றவர்கள் தாக்குவதாக நினைக்கிறார்.

வேணுவிற்கு வயிற்றுப் புற்றுநோய்
இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக குடும்பத்திற்கு தெரியாமல் தனியாக மருத்துவரை கன்சல்ட் செய்யும் வேணுவிற்கு தனக்கு வயிற்றில் கேன்சர் முற்றிய நிலையில் உள்ளது தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியடைகிறார். ஆனால் தன்னுடைய மகனும் மருமகளும் இணைந்து வாழ்வதை பார்க்க வேண்டும் என்று அந்த நேரத்திலும் அவரது மனம் பரிதவிப்புடன் நினைத்துப் பார்க்கிறது.

பாரதி -கண்ணம்மா இணைவார்களா?
இதையடுத்து இவரது உடல்நிலையை வைத்து பாரதியும் கண்ணம்மாவும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த விஷயம் தன்னுடைய குடும்பத்திற்கு தெரியக்கூடாது என்றும் தெரிந்தால் அவர்கள் உடைந்துப் போவார்கள் என்றும் மருத்துவரிடம் கூறும் வேணு, மருத்துவர் அந்த விஷயத்தை தன்னுடைய குடும்பத்தினரிடம் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்.

வெண்பா நிச்சயதார்த்தம்
இதனால் அடுத்தடுத்த எபிசோட்கள் எப்படி போகும் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒரு பக்கம் வெண்பாவின் நிச்சயதார்த்த ஏற்பாடுகளும் ஜரூராக போகிறது. அதை முடித்தே ஆக வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சவுந்தர்யா.