நயன்தாராவால் வெற்றிமாறன் – ராகவா லாரன்ஸ் கூட்டணியில் பிரச்சினையா?: அதிகாரம் லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், சந்திரமுகி 2, துர்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதிய அதிகாரம் படத்தில் நடிக்கவும் ராகவா லாரன்ஸ் கமிட் ஆனார்.

ஆனால், நயன்தாராவால் அதிகாரம் திரைப்படம் உருவாவதில் சிக்கல் என செய்திகள் வெளியானது குறித்து இப்போது அப்டேட் கிடைத்துள்ளது.

வாணி ராணி வேணு

வாணி ராணி வேணு

டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் அறிமுகமான ராகவா லாரன்ஸ், அதன் பின்னர் நடிகராகவும் கலக்கி வருகிறார். அதேபோல், முனி, காஞ்சனா என சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கி மாஸ் காட்டினார். தற்போது ருத்ரன், சந்திரமுகி 2 படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், முதன்முதலாக வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்தார். வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுத, ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை துரை செந்தில்குமார் இயக்குவார் என முடிவானது. அதேபோல், படத்திற்கு அதிகாரம் என்ற தலைப்புடன் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

கைவிடப்படும் அதிகாரம்

கைவிடப்படும் அதிகாரம்

ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். பி வாசு இயக்கும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நடிக்கவிருந்த அதிகாரம் திரைப்படம், ட்ராப் ஆனதாக தகவல்கள் வெளியாகின. சந்திரமுகி 2, ருத்ரன், துர்கா ஷூட்டிங் ஆகியவற்றில் ராகவா லாரன்ஸ் பிஸியாக இருந்து வருகிறார். அதனால், அதிகாரம் பட இயக்குநர் துரை செந்தில்குமார் நயன்தாராவின் புதிய படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார்.

நயன்தாராவின் 81வது திரைப்படம்

நயன்தாராவின் 81வது திரைப்படம்

முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் நயன்தாரா, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 81வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை துரை செந்தில்குமார் இயக்குகிறார். அதிகாரம் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காததால் நயன்தாராவின் படத்தை இயக்க துரை செந்தில்குமார் ஓக்கே சொல்லிவிட்டார். இதனால் தான் அதிகாரம் படம் ட்ராப் ஆனதாக செய்திகள் வெளியாகின.

உண்மை என்ன?

உண்மை என்ன?

ஆனால், நயன்தாராவின் படத்தால் அதிகாரம் படத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 முடித்துவிட்டு வந்ததும் அதிகாரம் ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதற்குள் நயன்தாராவின் படத்தை முடித்துவிட இயக்குநர் துரை செந்தில்குமார் முடிவு செய்துள்ளாராம். இதனால், அதிகாரம் திரைப்படம் ட்ராப் ஆனதாக வெளியான செய்திகள் பொய் என தெரியவந்துள்ளது. மேலும், சீக்கிரமே அதிகாரம் ஷூட்டிங் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X