»   »  வினா விடை வேட்டைக்கு வருகிறார் விஜய் ஆதிராஜ்…

வினா விடை வேட்டைக்கு வருகிறார் விஜய் ஆதிராஜ்…

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய விஜய் ஆதிராஜ் சினிமா இயக்குநராக பயணித்து மீண்டும் புதுயுகம் தொலைக்காட்சியில் வினா விடை வேட்டை நிகழ்ச்சி நடத்த வருகிறார்.

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'வினா விடை வேட்டை ஜூனியர்ஸ் சீஸன் 1' மற்றும் சீஸன் 2 நிகழ்ச்சிகள் உங்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றது. நடிகை கஸ்தூரி முதல் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கினார்.

வினா விடை வேட்டை சீசன் -3

வினா விடை வேட்டை சீசன் -3

குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரையிலும் அனைவரது உள்ளங்களையும் கொள்ளைகொண்ட ‘வினா விடை வேட்டை ஜூனியர்ஸ்' நிகழ்ச்சியின் ‘சீஸன் - 3' இப்போது புத்தம் புது பொலிவுடன் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

மாணவர்களின் அறிவுத்திறன்

மாணவர்களின் அறிவுத்திறன்

8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கும் அறிவுத்திறனுக்கான நிகழ்ச்சி இது. இன்றையத் தலைமுறையினருக்கு புத்தக அறிவைத் தாண்டி பரந்துபட்ட உலக அறிவையும் வளர்த்துக்கொள்ளப் பயன்படும் அரிய நிகழ்ச்சி.

பொது அறிவுத்திறன்

பொது அறிவுத்திறன்

விளையாட்டு, பண்பாடு, அரசியல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய விஷயங்களையே கேள்வி பதில்களாகக் கொண்டு இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருப்பதால், பங்கேற்பாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களது பொது அறிவுத் திறனையும் வளர்த்தெடுக்கும்.

விஜய் ஆதிராஜ்

விஜய் ஆதிராஜ்

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான விஜய் ஆதிராஜ் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். வருகிற 13-9-2015 ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணி வரை 'வினா விடை வேட்டை ஜூனியர்ஸ் சீஸன் 3' புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

English summary
Television fame Vijay Adhiraj, is back again with a bang in television as an anchor after a short break through Vina Vidai Vettai Juniors Season 2 to be telecast from 13th of September 2015. Vina Vidai Vettai Juniors, the quiz show of Puthuyugam which was successful in previous seasons and is specially designed quiz show for school students particularly from grades 8 to 12.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil