விஜய்யோட மாஸ்டரை பார்க்க ரெடியா... உழைப்பாளர் தின ஸ்பெஷலா ஒளிப்பரப்பாக இருக்கு!

சென்னை : நடிகர் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் மாஸ்டர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த நிலையில், விஜய்யின் மாஸ் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்பட்டது.

விஜய்யின் மாஸ்டர் படம்

விஜய்யின் மாஸ்டர் படம்

நடிகர் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டு பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசான படம் மாஸ்டர். இந்தப் படத்தில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் நடைபெறும் அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வாத்தியாக நடித்திருந்தார் விஜய்.

சிறப்பான கதைக்களம்

சிறப்பான கதைக்களம்

படத்தில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். படத்தில் கெட்டப் பழக்கங்களை கொண்டிருக்கும் ஹீரோவாக விஜய்யும், எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாத வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய கெட்டப் பழக்கத்திலிருந்து வெளிவரும் கேரக்டர் விஜய்க்கு.

மிரட்டலான வில்லன்

மிரட்டலான வில்லன்

படத்தில் விஜய்க்கு சமமான வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் மாசாக படமாக்கப்பட்டிருந்தன. இந்தப் படத்தின் வெற்றி அனைவருக்கும் மிகவும் சாதகமாக அமைந்தது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

குறிப்பாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜுக்கு பெற்றுத் தந்துள்ளது. தற்போது படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். வரும் ஜூன் 3ம் தேதி படம் ரிலீசாக உள்ளது. படம் மிகவும் அதிகமான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பு

சன் டிவியில் ஒளிபரப்பு

விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி ஓராண்டை கடந்துள்ளது. இதுகுறித்து கடந்த ஜனவரி மாதத்தில் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு விஜய் சேதுபதி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது படம் வரும் மே 1 உழைப்பாளர் தினத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட உள்ளதாக சன் டிவி அறிவித்துள்ளது.

மே தினத்தில் ஒளிபரப்பு

மே தினத்தில் ஒளிபரப்பு

படம் வரும் ஞாயிறு மாலை 6.30 மணியளவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து தற்போது மாஸ்டர் படம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த விஷயத்தை ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர். மே தினக் கொண்டாட்டத்தில் மாஸ்டர் படத்தை பார்ப்பது கண்டிப்பாக சிறப்புதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X