»   »  மாமியார் நடிகைகளின் குத்தாட்டம்… அட அட அட… விஜய் டிவியில நீங்க பாத்தீங்களா?

மாமியார் நடிகைகளின் குத்தாட்டம்… அட அட அட… விஜய் டிவியில நீங்க பாத்தீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சீரியல் மாமியார் நடிகைகள் போட்ட குத்தாட்டத்தில் அரங்கமே அதிர்ந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவில் கதாநாயகிகளாகவும், குத்தாட்ட நாயகிகளாகவும் நடித்த நடிகைகள் இன்றைக்கு மாமியார்காளக டிவியில் வில்லத்தனம் செய்கின்றனர். தங்களின் அந்தகால நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் மேடையில் நடனமாடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

இரண்டாம் ஆண்டு விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழா கடந்தவாரம் சென்னையில் நடைபெற்றது. 27ம் தேதி இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது.
சிறந்த பேவரைட் நாயகன் விருதை சரவணன் மீனாட்சி தொடரின் வேட்டையனும், சிறந்த பேவரைட் நாயகி விருதை மீனாட்சியும் பெற்றுக்கொண்டனர்.

ஜோடிகளின் நடனம்

ஜோடிகளின் நடனம்

சீரியல் ஜோடிகள் ஐவர் வந்து அமர்களமாக நடனமாடி நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தினர். சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர் ஜோடிகள் நடனமாடியது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம்.

நான் உங்கள் ரசிகன்…

நான் உங்கள் ரசிகன்…

சிறந்த நடுவருக்கான விருதை நடிகை ராதாவிற்கு இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் வழங்கும் போது... நான் உங்கள் ரசிகன்... அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தை ஸ்கூல் கட் அடித்துவிட்டு பார்த்தேன் என்று கூறி ராதாவை வெட்கப்பட வைத்தார்.

பிரியா… பிரியா…

பிரியா… பிரியா…

நிகழ்ச்சியில் அதிகம் கவனம் ஈர்த்தது பிரியாதான். விஜய் டிவியின் தொகுப்பாளினிகள் பலருக்கும் திருமணம் ஆகிவிட்டதால் இளமையான அழகான தொகுப்பாளினி பிரியாவை மேடையில் அதிகம் கலாய்த்தார்கள். தொகுப்பாளர் கவின், சிறப்பு அழைப்பாளர் நடிகர் சதீஸ் என பலருமே பிரியாவின் செல் நம்பரை கேட்டு பிரியாவை நெளிய வைத்தனர்.

நெளியவைத்த நண்டு ஜெகன்

நெளியவைத்த நண்டு ஜெகன்

நிகழ்ச்சி தொகுப்பாளர் மேடையில் பகிரங்கமாக எதை கேட்க வேண்டும் என்று இல்லை. செந்தில் ஸ்ரீஜா ஜோடி 4 முறை திருமணம் செய்தது போல எத்தனை முறை ஹனிமூன் போனீர்கள் என்று கேட்டு நெளிய வைத்தார். சிவகார்த்திக்கேயன் மீது என்ன கோபமோ அவ்வப்போது குத்திக்காட்டி பேசினார்.

மா.கா.பா – பாவனாவிற்கு விருது

மா.கா.பா – பாவனாவிற்கு விருது

சிறந்த தொகுப்பாளர் ஜோடிக்கான விருது மா.கா.பா. ஆனந்த் - பாவனா ஜோடிக்கு கிடைத்தது. விஜய் டிவி சீரியல் ஹீரோயின்கள் இணைந்து இந்த விருதினை கொடுத்தனர்.

சிறந்த மாமியார் நடிகை

சிறந்த மாமியார் நடிகை

சீரியலின் சிறந்த மாமியார் விருது தெய்வம் தந்த வீடு நடிகை சுதா சந்திரனுக்கு கிடைத்தது. அதேபோல சிறந்த மருமகள் விருது அதே சீரியலில் நடித்த மருமகள் சீதாவிற்கே (மேக்னா) கிடைத்ததுதான் ஆச்சரியம்.

கண் கலங்கிய மீனாட்சி

கண் கலங்கிய மீனாட்சி

கர்நாடகாவில் பிறந்த தமிழ் சீரியலில் பிரபல நடிகையாக மாறியுள்ள ரட்சிதா( மீனாட்சி) சிறந்த பேவரைட் நடிகைக்கான விருது பெற்றபோது கண் கலங்கினார். தமிழ் நாட்டு மருமகளான தனக்கு தமிழர்களின் ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

என்னா ஒரு ஆட்டம்

என்னா ஒரு ஆட்டம்

சினிமாவில் குத்தாட்டம் போட்ட நடிகைகள் சீரியலில் நடிக்க வந்த கையோடு வில்லத்தனம்தான் செய்கின்றனர். தங்களின் நீண்டநாள் ஆசையை விருது விழாவில் நடனமாடியதன் மூலம் தீர்த்துக்கொண்டனர். அங்கும் சாதனாதான் அதிகம் ஸ்கோர் செய்தார்.

விருது வாங்கியும் விடலையே

விருது வாங்கியும் விடலையே

விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் வேலையை செய்யவில்லை என்றாலும் காபி வித் டிடி, சிறந்த தொகுப்பாளினி விருது டிடிக்கே கிடைத்தது. விருது வாங்கும் போது டிடி பேசியது.... ஸ் ஸ் அப்பா ரகம்.

கார்த்திக் - ராஜி

ஆபிஸ் சீரியலில் நடித்த கார்த்தி - ராஜி சிறந்த ஜோடியாக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் ஏன்ன எங்க ஆதரவு எப்பவும் உங்களுக்குத்தான் என்று சிலர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்த விருதுல என்னென்ன அரசியல் இருக்கோ யாருக்கு தெரியும்?

English summary
2nd Annual Vijay Television Awards aired on Vijay TV on September 27. The award function was hosted by Jegan, Ma Ka Pa Anand, Bhavna, Priya and Kavin.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil