Bigg Boss Tamil 9: பிக் பாஸ் 9 எப்போது தொடங்குகிறது.. அதிரடியாக வெளியான அறிவிப்பு!

சென்னை: பிக் பாஸ் சீசன் 9 விரைவில் தொடங்க இருப்பதாக விஜய் டிவி அடுத்தடுத்த ப்ரோமோக்களை வெளியிட்டது. இதில், விஜய்சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும் என நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஹைப்பை ஏற்றிவிட்டதால், நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், தற்போது நிகழ்ச்சி குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.
'
இந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 8 சீசன் முடிந்து 9வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. முதல் சீசனில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 9ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதால், இணையத்தில் பலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இதில், பாக்கியலட்சுமி சீரியல் இனியா, டான்ஸர் சிந்தியா வினோலின், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன், நடிகர் பால சரவணன், நடிகர் புவி அரசு, இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, குக் வித் கோமாளி 6 போட்டியாளர் ஷபானா ஷாஜஹான், நடிகை ஃபரினா ஆசாத், கூமாப்பட்டி தங்க பாண்டி, வி.ஜே. பார்வதி, மீடியா பிரபலம் அரோரா, நடிகர் அஸ்வின் குமார், நடிகர் சித்து சித் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையானது என தெரிவில்லை.

Bigg Boss Season Tamil 9 Vijay Sethupathi
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 9: இதைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சி கடந்த வாரம், வித்தியாசமான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது. அதில், உங்களுக்கு தெரியல எனக்கு புரியல என விஜய் சேதுபதி தனது ஸ்டாலில் அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்டு வந்தார். இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சி பாக்க பாக்க தான் புரியும் போக போக தான் தெரியும் என சொல்லி பிக் பாஸ் சீசன் 9 வித்தியாசமாக இருக்கும் என்று கூறியதால், இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், விஜய்டிவி தரமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி அக்டோபர் 5ந் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பால், பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதிக்கு ரூ.75 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Read more about: vijay sethupathi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X