twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது ஸ்ட்ரெஸ் இல்லீங்க... பொறுப்பு... வெளுத்து வாங்கிய கோபிநாத்!

    |

    சென்னை : விஜய் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணிக்கு கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    நாளைய தினம் பகல் 12.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

    ஜிம்மில் தீயாய் உடற்பயிற்சி செய்யும் லாஸ்லியா!ஜிம்மில் தீயாய் உடற்பயிற்சி செய்யும் லாஸ்லியா!

    இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பொருப்புகளை ஸ்ட்ரெஸ் ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று ஒரு மாணவனுக்கு கோபிநாத் அறிவுரை வழங்குகிறார்.

    நீயா நானா நிகழ்ச்சி

    நீயா நானா நிகழ்ச்சி

    விஜய் டிவியில் நீண்ட நாட்களாக நீயா நானா நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென பிரத்யேகமாக ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த நிகழ்ச்சியில் விவாதம் மேற்கொள்ளப்படுகிறது.

    வெற்றிகரமான நிகழ்ச்சி

    வெற்றிகரமான நிகழ்ச்சி

    கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமான நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத். அவரது தொகுப்பிற்கு எனவே நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் உள்ளனர்.

    கோபிநாத்தின் சமூக அக்கறை

    கோபிநாத்தின் சமூக அக்கறை

    இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு விருதுகளையும் கோபிநாத் பெற்றுள்ளார். இதைத் தவிர்த்து விஜய் டிவியின் வேறுசில நிகழ்ச்சிகளிலும் அவரை சமீப காலங்களில் காண முடிகிறது. அவருடைய நகைச்சுவை கலந்த பேச்சு இந்த நிகழ்ச்சிகளில் எதிரொலிக்கிறது. ஆனால் நீயா நானா நிகழ்ச்சியில் சமூக அக்கறை கொண்ட மனிதராகவே அவர் அடையாளம் கொள்ளப்படுகிறார்.

    புதிய ப்ரமோ வெளியீடு

    புதிய ப்ரமோ வெளியீடு

    இந்த வாரம் இந்த நிகழ்ச்சிக்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரு இளைஞர் காலையில் எழுந்திருப்பது ஸ்ட்ரெஸ்ஸாக உள்ளதாக கூற, அதை மறுதலித்து பேசுகிறார் கோபிநாத். 8 மணிக்கு எழுந்து 9 மணிக்கு ஆன்லைன் வகுப்பில் அமர்வது ஸ்ட்ரெஸ் அல்ல, அது பொறுப்பு என்று விளக்குகிறார்.

    வாழ்க்கையை கடினமாக்காதீர்கள்

    வாழ்க்கையை கடினமாக்காதீர்கள்

    பொறுப்புகளை ஸ்ட்ரெசில் சேர்த்து விடாதீர்கள் என்றும் அவர் அறிவுரை வழங்குகிறார். வாழ்க்கையில் பொறுப்புகளை ஸ்ட்ரெஸ் என்ற வகையில் சேர்த்து கடினமாக்கிக் கொள்ளாதீர்கள் என்பதும் விவாதத்தில் பங்குபெறும் ஒரு மாணவனுக்கு அவர் வழங்கும் அறிவுரையாக உள்ளது.

    ரசிகர்கள் ஆர்வம்

    ரசிகர்கள் ஆர்வம்

    கடினமான வேலைகளுக்கிடையில் படிப்பதுதான் கடினம் என்பதையும் அவர் விளங்க வைக்கிறார். இந்த ப்ரமோ தற்போது நிகழ்ச்சியை பார்க்கும் ஆவலை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இத்தகைய நிகழ்ச்சிகளை பார்த்துவரும் ரசிகர்களுக்கு இத்தகைய பிரமோக்களும் உத்வேகமாக அமைகிறது.

    English summary
    Vijay TV's Neeya Naana show new promo released
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X