ஆடையில் ஒன்றும் இல்லை… மனநிலை மாறவேண்டும்.. நீச்சல் உடையில் சூப்பர் மெசேஜ் சொன்ன டிடி!
சென்னை : சின்னத்திரையில் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் டிடி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.
அந்தமானுக்கு விடுமுறைக்காக சென்றுள்ள இவர், அங்கு எடுக்கும் போட்டோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அண்மையில் இவர் கிளாமர் உடையில் வெளியிட்ட போட்டோ வைரலாகி வருகிறது.

டிடி
நடிகை மற்றும் தொகுதிப்பாளியான டிடியை தெரியாதவர்களே இருக்க முடியாது. விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான தொகுப்பாளர் யார் என்றால் அது டிடி தான். இவர் விசில், பவர் பாண்டி மற்றும் சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

விவாகரத்து
2014ம் டிடிக்கும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகும் டிடி விஜய் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மனநிலைமாற்றம் தேவை
சுற்றுலா செல்வதை பெரிதும் விரும்பும் டிடி சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்தார். தற்போது அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ள டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை அப்லோடு செய்துள்ளார். மேலும், ஒரு அழகான கருத்தையும் அதில் பகிர்ந்துள்ளார். அதில், ஆடையில் ஒன்றும் கிடையாது நம் மனநிலையில் தான் உள்ளது. அந்தமானில் இருக்கும் ஒரு ஆண்கள் கூட இதை தவறாக பார்க்கவில்லை. இந்த உடையை நான் அணிந்து கொண்ட போது, பாதுகாப்பு இல்லாமலோ, அசௌகரியமான உணர்வையோ தரவில்லை.

கனவுகளை நோக்கி பயணம்
உலக சுற்றுலா தினமான இன்று நான் விரும்புவது, பெண்களும் இரட்டை பாலினத்தவர், தங்கள் கனவுகளை நோக்கி பயணம் செய்யும்போது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வரவேண்டும் என்று விரும்புகிறேன். சுற்றுலா துறை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை நம்பி பல உயிர்கள் இருக்கிறது. அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தேவையில்லாதது
டிடியின் இந்த பதிவுக்கு ஒரு நெட்டிசன்ஸ், உங்களோட ஆசைகள் இப்போதாவது நிறைவேறட்டும் டிடி... இதெல்லாம் பார்க்கும் போது நீங்கள் நிறைய ஆசைகளை இழந்து இருக்கீங்கள்னு தோனுது என்று ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர், இந்த கிளாமர் உங்களுக்கு தேவை இல்லாதது என்று கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











