பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் என்னை பலரும் அவாய்ட் பண்ணாங்க… கண்கலங்கிய அறந்தாங்கி நிஷா !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு அனைவரும் என்னை அவாய்ட் செய்தார்கள் என்று அறந்தாங்கி நிஷா, கண்கலங்கி பேசிய ப்ரோமோ வெளியாகி வைரலாகி உள்ளது.

அனைவரையும் சிரிக்கவைக்கும் நிஷாவுக்கே இந்த நிலைமையா? பாவம் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த எபிசோட் இன்று இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

கலக்கப்போவது யாரு

கலக்கப்போவது யாரு

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் அறந்தாங்கி நிஷா. பெண்களுக்கு காமெடி சாத்தியமாகுமா என்கிற கேள்வியை உடைத்துச் அதை திறன்பட செய்து சாதித்து காட்டினார் நிஷா.

படங்களில்

படங்களில்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நிஷாவுக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. விஷால் நடித்த இரும்புத்திரை, நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, தனுஷ் நடித்த மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில்

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில்

கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் ரன்னர் அப் பட்டத்தைக் கைப்பற்றினார். பின்னர், விஜய் டி.வியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்த நிஷா. அர்ச்சனாவின் வரவுக்கு பிறகு சர்ச்சையில் சிக்கினார்.

பிபி ஜோடிகள் வனிதா வெளியேறினார்

பிபி ஜோடிகள் வனிதா வெளியேறினார்

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா ஆடிய டான்ஸ் பற்றி ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் விமர்சித்தது பிடிக்காமல் ஷோவிலிருந்தே வெளியேறினார் வனிதா. தன்னை மற்றவர்கள் உடன் ஒப்பிடாதீர்கள் என்றும் அவர் சண்டை போட்டார் இதனால் ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பிறகு தான் வனிதா செட்டில் இருந்து வெளியேறினார். பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் ஆரம்பமே வனிதாவால் அமர்க்களமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

பன்ச் கேம்

பன்ச் கேம்

இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் பன்ச் கேம் விளையாடிகிறார்கள். இதில், தன்னைப்பற்றி பரவும் நெகடிவ் விமர்சனங்களை சொல்லி அதை பன்ச் குத்த வேண்டும். தற்போது, இன்று வெளியாக உள்ள பிபி ஜோடிகள் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஒவ்வொருவாராக வந்து நெகடிவ் கருத்துக்களை கூறி குத்துகின்றனர்.

அனிதா சம்பத்

அனிதா சம்பத்

உமா ரியாஸ்கானின் மகன் ஷாரிக் கூறுகையில், இந்த நிகழ்ச்சியில நீ ஏன் போற உனக்கு எல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தகுதியே இல்லை என்று கூறினார்கள் என்று வருத்தத்துடன் கூறினார். இதையடுத்து பேசிய அனிதா சம்பத், உனக்குத்தான் கல்யாணம் ஆய்டுச்சில அப்புறம் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்குற என்று கேட்கிறார்கள் என்று கூறினார்.

வருத்தத்தில் அறந்தாங்கி நிஷா

வருத்தத்தில் அறந்தாங்கி நிஷா

இதையடுத்து பேசிய அறந்தாங்கி நிஷா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு நெருக்கமானவர்களே என்னை அவாய்ட் பண்ணாங்க. நான் ஒரு லூசு மாறி சுத்திட்டு இருந்தேன் . என்னைப்பத்தி ஏகப்பட்ட நெகடிவ் கமெண்ட்டுகள் வந்தன. பலர் என்னை கேலியும் கிண்டலும் செய்தார்கள் என கூறி பஞ்ச் செய்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களை சற்று யோசிக்க வைத்துள்ளது. சிரிச்சி சிரிச்சி பேசும் நிஷாவுக்கே இந்த நிலைமையா? பாவம் எனவும், நீங்க பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனதுதான் தப்பு எனவும் மாறி மாறி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X