Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் இப்படி எல்லாம் இருக்கா? பஞ்சாயத்துக்கு ஏத்தமாதிரி கட்டி இருக்காங்கப்பா!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்று முதல் அதாவது அக்டோபர் 5ஆம் தேதியில் இருந்து, தொடங்குகிறது. நிகழ்ச்சியை கடந்த 8வது சீசனைத் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். என்ன காரணமோ தெரியவில்லை இந்த சீசன் மீது ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை. மேலும் போட்டியாளர்கள் குறித்து வெளியான தகவலும் ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. இப்படி இருக்கும்போது, இந்த சீசனில் உருவாக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீடு என்பது, இந்தி பிக்பாஸ் வீட்டைப் போல உருவாக்கி உள்ளார்கள். இதற்கு முன்னர் இருந்த சீசனைக் காட்டிலும் இந்த சீசனில் என்ன மாதிரி எல்லாம் உள்ளது என்பது குறித்து காணலாம்.
வீடு எப்படி இருக்கு: இந்த சீசன் வீட்டின் முகப்பே மிகவும் வித்தியாசமாக கட்டப்பட்டுள்ளது. அதாவது வீட்டின் பெரிய கதவில் இருந்து மற்றொரு சிறயக் கதவைத் திறந்து, அதன் பின்னர், வீட்டின் கார்டன் ஏரியாவுக்கு செல்வதைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டிற்குள் வீட்டின் நடுவே பெரிய கிச்சன் உள்ளது. வழக்கமாக எல்லா சீசன்களின் வீடுகளிலும் வீட்டின் ஒரு ஓரத்தில் கிச்சன் இருக்கும். ஆனால் இந்த வீட்டில் வீட்டின் நடுவே கிச்சன் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வீட்டின் ஒரு அறை மிகவும் வழக்கமான அறையாகவும், அதில் கிட்டத்தட்ட 12 முதல் 14 பேர் தங்குவதற்கான பெட்கள் உள்ளது. மற்றொரு அறை அதற்கு நேர் எதிராக உள்ளது. அதில், மிகவும் லக்ஸூரியான அறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் இருப்பவர்கள் ஜக்குஸி எல்லாம் பயன்படுத்த ஏதுவாக, ஜக்குஸி எல்லாம் வைத்துள்ளார்கள். ஆனால், சாதாரணமாக அமைக்கப்பட்டுள்ள அறையில் வழக்கமான கழிப்பறைகளும் பாத்ரூம்களும்தான் வைக்கப்பட்டுள்ளது.

வண்ண விளக்குகள்: கார்டன் ஏரியாவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மூன்றாவது சீசனில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்த சீசனில் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், வீட்டின் சீலிங் மிகவும் பிரமாண்டமாக பல வண்ண விளக்குகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், எந்த சீசனிலும் இல்லாத மாதிரி, இந்த சீசனில் கேப்டனுக்கு என்று தனி அறை மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள சிறையும் வித்தியாசமாக உள்ளது. கன்ஃபக்ஷன் அறையும் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த சீசன் வீடு மிகவும் வித்தியாசமாகவும் பிரமாண்டமாகவும் ஆட்டத்தை எப்படி எல்லாம் நகர்த்த வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் வடிவமைத்து உள்ளார்கள். மொத்தத்தில் ஆட்டம் முதல் நாளில் இருந்தே சூடு பிடிக்குமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











