Bigg Boss Tamil 9 : முதல் போட்டியாளரே வாட்டர் மெலன் திவாகர் தான்.. அவரை செலக்ட் செய்ய இதுதான் காரணமா?

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்று முதல் அதாவது அக்டோபர் 5ஆம் தேதியில் இருந்து, தொடங்குகிறது. நிகழ்ச்சியை கடந்த 8வது சீசனைத் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இப்படி இருக்கும்போது இந்த சீசனின் முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் களமிறங்கியுள்ளார். இவரை ஏன் தேர்வு செய்தார்கள் என்பதை விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர் போட்டியாளராக களமிறங்குகிறார் என்றால், அதற்கு பலகட்ட தேர்வுகளை கடக்க வேண்டும். ஏதோ சிபாரிசு மூலம் எல்லாம் போட்டியாளராக களமிறங்கி விட முடியாது. அப்படி இருக்கும்போது இந்த சீசனில் பிசியோதெரபி மருத்துவர், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் களமிறங்குகிறார் என்று அரசல் புரசலாக தகவல்கள் வந்தபோதே இணையவாசிகளும் ரசிகர்களும் பிக்பாஸ் மற்றும் பிக்பாஸ் குழுவினரை விமர்சித்தனர்.

Vijay tv Bigg Boss Tamil 9 Vijay Sethupathi Explains Why Watermelon Star Diwakar as Contestant

அதாவது, வாட்டர் மெலன் ஸ்டார் பொதுவெளியில் சில சர்ச்சைகளை பேசி, சர்ச்சைக்குரிய செயல்களைச் செய்து விமர்சனத்திற்கு ஆளானவர். இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு ஆர்வக்கோளாறு என்று விமர்சித்தவர்கள் எல்லாம் உண்டு. இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வாகி உள்ளார் என்றதும் விமர்சிக்கத் தொடங்கினர். இந்த சீசனின் முதல் போட்டியாளராக களமிறங்கி உள்ள அவரை எப்படி தேர்வு செய்தார்கள் என்பது குறித்து விஜய் சேதுபதியே விளக்கம் கொடுத்தார். அவர் கூறும்போது, பல கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்வுக்கு பின்னரே வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை பிக்பாஸில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் மருத்துவத்துறை குறித்து குறிப்பாக அவரது பிசியோதெரபி துறை குறித்து கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலை அளித்துள்ளார். இதன் காரணமாகவே அவரை பிக்பாஸ் குழு தேர்வு செய்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

Vijay tv Bigg Boss Tamil 9 Vijay Sethupathi Explains Why Watermelon Star Diwakar as Contestant

விஜய் சேதுபதி இவ்வாறு கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் திவாகருக்கு அவர் சில அறிவுரைகளை வழங்கி அனுப்பினார். குறிப்பாக, இதற்கு முன்னர் நீங்கள் எதிர்கொண்ட மேடைகளை போல் இந்த மேடையையும் நீங்கள் எதிர் கொள்ளக் கூடாது என்று கூறினார். அதன் பின்னர் திவாகர் விஜய் சேதுபதி முன்னால், தான் ஒரு காட்சி நடித்துக் காட்டுவதாக கூற, உடனே விஜய் சேதுபதியோ இதைத்தான் நான் வேண்டாம் என்று சொன்னேன் என்று கூறினார். முதல் போட்டியாளராக இவரும், இரண்டாவது போட்டியாளராக அரோராவும் மூன்றாவது போட்டியாளராக எஃப்.ஜேவும் களமிறங்கி உள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X