நாஞ்சில் விஜயன் சொன்ன குட்டிக் கதை.. அவமானப்படுத்துபவர்களுக்கு இதுதான் பதிலா? தரமா இருக்கே!

சென்னை: கடந்த வாரத்தில் இருந்து பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை வைஷ்ணவி என்பவர் சொன்ன குற்றச்சாட்டுகள் தான். குறிப்பாக நாஞ்சில் விஜயன் தன்னை காதலிப்பதாக கூறினார் என்றும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்றும் கூறியிருந்தார் இப்படி இருக்கையில் நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள குட்டிக் கதை வைஷ்ணவிக்கு அவர் அளித்துள்ள மறைமுகமான பதில் தான் என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், " ஒரு அம்மா தனது பக்கத்து வீட்டில் இருந்த மாமரத்தைப் பார்த்து பொறாமையில், என்னது பக்கத்து வீட்டில் மட்டும் இவ்வளவு பெரிய மாமரம் உள்ளது என்று கூறியுள்ளார். இப்படி இருக்கையில், பொறாமை பிடித்த பெண், அந்த மாமரத்தின் கீழ் குப்பைகளை கூடை கூடையாக தினமும் கொட்டியுள்ளார். ஒரு நாள் அந்த பக்கத்து வீட்டு பெண், கூடை நிறைய மாம்பழங்களைக் கொண்டு வைத்துள்ளார். இதைப் பார்த்ததும் அந்த பொறாமை பிடித்த பெண், என்னமா மாம்பழங்களை கொண்டு வந்து வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.

Vijay TV Celebrity Nanjil Vijayan Says Kutty Story on Instagram Goes Trending

குட்டிக் கதை: அதற்கு அவரோ, எனது வீட்டில் இருந்த மாமரம் சரியாக காய் பிடிக்காமல் இருந்தது. நீங்கள் கொட்டிய குப்பையை எனது மாமரம் உரமாக எடுத்துக் கொண்டது. அதன் பின்னர் அதிக அளவில் காய்கள் பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோலத்தான் நாமும், நம்மை நோக்கி யாராவது நீ உருப்பட மாட்டாய், நன்றாக இருக்க மாட்டாய் என்று யார் நம்மை அவமானப்படுத்தினாலும், அவற்றை நமது வாழ்க்கைக்கு தடையாக எடுத்துக் கொள்ளாமல், நமது வளர்ச்சிக்கு உரங்களாக எடுத்துக் கொண்டு மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். நாஞ்சில் விஜயனின் இந்த குட்டிக் கதை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மேலும் சில இணையவாசிகள் தற்போது நாஞ்சில் விஜயனைச் சுற்றி நடைபெறும் சர்ச்சைகளுக்கு மறைமுகமாக இந்த கதை மூலம் பதில் சொல்லி இருப்பார் போலயே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

மனைவியுடன் விளக்கம்: இது மட்டும் இல்லாமல் தனது மனைவியுடன் இணைந்து கொண்டு அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " தான் வைஷ்ணவியுடன் நட்பாகவும் சகோதர பாசத்துடனும் தான் பழகியதாகவும். ஆனால் அவரை நான் திருநங்கை என்ற காரணத்திற்காக அவரை புறக்கணிக்கவில்லை. மேலும் அவர் இனிமேல் இது போல பேசாமல் எனது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நிம்மதியை சீர்குலைக்காமல் இருக்க வேண்டும் என்று தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். நான் அவரது மனம் புண்படும்படி பேசியிருந்தால் மன்னிக்கவும்" என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X