twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிவியில் போலீஸை கூப்பிட்ட நடிகருக்கு சினிமாவில் நடிக்க ஆசை

    By Mayura Akilan
    |

    விஜய் டி.வியின் 'அது இது எது?' நிகழ்ச்சியில் 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா? போலீஸைக் கூப்பிடுவேன்' என்ற வசனங்களால் அமர்க்களப்படுத்திய மதுரை ராமர் இப்போது தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்

    சமூக வலைதளங்களிலும் இந்த வசனத்தின் பெயரில் ஃபேஸ்புக் பக்கங்களை ஆரம்பித்து, இதே வசனத்தை பலவிதமாகப் பயன்படுத்தி கலாய்க்கிறார்கள். இதனால் அதிகம் சந்தோசப்படுவது இந்த வசனத்தைப் பேசிய மதுரை ராமர்.

    ஆணாக இருந்தாலும் பெண் வேடத்தில் அசத்தியவர் இவர்தான். 20 வருடங்களாக டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் அதிகம் ரீச் ஆனது அது இது எது நிகழ்ச்சியின் மூலம்தானாம். இப்போது சினிமாவில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார் மதுரை ராமர்.

    Vijay TV fame Madurai Ramar eager to enter into big screen

    மதுரைக்காரன்தான்

    மதுரை பக்கத்துல மேலூர்தான் சொந்த ஊர். சின்ன வயசுல இருந்தே அடுத்தவங்களை இமிடேட் பண்ணி நடிக்கிறது, நடிகர் நடிகைகள் மாதிரி மிமிக்ரி பண்றதுனு சொந்தக்காரங்ககிட்ட அதகளம் பண்ணுவேன். 'எதுக்குடா இதெல்லாம்'னு உதாசீனப்படுத்தாம, 'சூப்பரா பண்றேப்பா'னு உற்சாகப்படுத்தினாங்க.

    நடிப்புக்கு அங்கீகாரம்

    மேடை, டி.வினு கிட்டத்தட்ட 20 வருடங்களா காமெடி நிகழ்ச்சிகள் பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுவரை கிடைக்காத அங்கீகாரம் இந்த வசனம் மூலமா கிடைச்சிருக்கிறது சந்தோஷமா இருக்கு.

    ஹியூமர் கிளப்

    ஸ்கூல்ல, காலேஜ்ல என்னோட நிகழ்ச்சிகள் பொறி பறக்கும். பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் சாரோட 'ஹியூமர் கிளப்'ல சேர்ந்தேன். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில இருக்கிற நோயாளிகளை சந்தோஷப்படுத்துறதுக்கு காமெடி நிகழ்ச்சிகள் நடத்துவோம்.

    விஜய் டிவியில் நிகழ்ச்சி

    'நியூ காமெடி பாய்ஸ்'னு ஒரு குரூப் ஆரம்பிச்சு நிறைய மேடை நிகழ்ச்சிகள் பண்ணினோம். அப்புறம் விஜய் டி.வியின் 'கலக்கப்போவது யாரு?'ல ஆரம்பிச்சு, 'அது இது எது?' வரை நிறைய நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன்.

    என்னமா இப்படி பண்றீங்களேமா?

    என்னோட மனைவி 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ரெகுலரா பார்ப்பாங்க. அந்த நிகழ்ச்சியோட தீவிரமான ரசிகை. அப்போதான் 'இந்த நிகழ்ச்சியை ஏன் காமெடியா பண்ணக் கூடாது?'னு தோணுச்சு. பண்ணிட்டேன்.

    போலீஸை கூப்பிடுவேன்

    தவிர ஊர்ல குழந்தைக்கு சோறு ஊட்டுற அம்மாக்கள் எல்லாம் என்னை காட்டி 'அதோ அவர்தான் போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவாரு... சாப்பிடு'னு கலாய்க்கிறாங்க.

    சிவகார்த்திக்கேயன் பாராட்டு

    இந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு சிவகார்த்திகேயன் 'பின்னிட்டீங்க அண்ணே'னு பாராட்டினார்.

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

    'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்துற லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடமே பாராட்டினது இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.

    சினிமாவில் நடிக்கணும்

    இந்த பாராட்டுகளுக்கெல்லாம் என்கூட நடிச்சவங்களுக்கும் பெரிய பங்கு இருக்கு. அடுத்து சினிமாவிலேயும் நடிக்கணும்னு ஆசை'' என்றார் மதுரை ராமர்!

    English summary
    Vijay TV's Athu Ith Ethu fame Madurai Ramar is eager to enter into cinema as a comedian
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X