For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மொத்த குடும்பமும் தெருவில் நிற்கனும்…பழிவாங்க துடிக்கும் வடிவு … நாம் இருவர் நமக்கு இருவர் ட்விஸ்ட்!

  |

  சென்னை : முத்துராசின் கொலைக்கு ஈடாக மொத்த சொத்தையும் கேட்டு இருக்கிறார் வடிவு இதனால் நாச்சியார் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

  மொத்த குடும்பத்தையும் நடுந்தெருவில் நிறுத்துவேன் என்று புதிய குண்டை தூக்கிப்போடுகிறார் வடிவு.

  வடிவுவின் பழிவாங்கும் முடிவால், அடுத்தடுத்து விறுவிறுப்புகளுடன் சுவாரசியம் மேலும் அதிகரித்து உள்ளது.

  பிரபல சீரியல் நடிகைக்கு பாப்பா பொறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா ?பிரபல சீரியல் நடிகைக்கு பாப்பா பொறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா ?

  நாம் இருவர் நமக்கு இருவர்

  நாம் இருவர் நமக்கு இருவர்

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் எல்லா தரப்பு ஆடியன்ஸ்களையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. சின்னத்திரை அழகன் மிர்ச்சி சரவணன் மாயன் ரோலில் கலக்க, இன்னும் இல்லத்தரசிகளின் வீடுகளில் மீனாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ரச்சிதா மகாலட்சுமி கேரக்டரில் நடித்திருக்கிறார். மாயன் - மகா ஜோடியின் லவ் ரொமான்ஸ் பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தொடங்கிய நாளிலிருந்து இந்த சீரியல் பீக் டைமில் வெற்றி நடைப்போட்டு கொண்டிருக்கிறது.

  க்ரைம் த்ரில்லரில்

  க்ரைம் த்ரில்லரில்

  மாயன் - மகா திருமணம் தொடங்கி, கத்தி - காயத்ரி திடீர் கல்யாணம், வீட்டை மீட்பது, முத்துராசு ஐஸ்வர்யா ரகசிய திருமணம் என எப்போதுமே பரபரப்பாக ட்விஸ்டுகளுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் கடந்த 1 மாத காலமாக மிகச் சிறந்த கிரைம் த்ரில்லர் பாணியில் பயணித்து ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

  குண்டைபோட்ட வடிவு

  குண்டைபோட்ட வடிவு

  முத்துராசுவை கொன்றது யார்? மாயன் தொடங்கி மகா, காயத்ரி, கத்தி, சரண்யா, ஐஸ்வர்யா, முத்துராசு அப்பா என போலீஸின் சந்தேக பார்வை விரிந்து ஒருவழியாக முத்துராசு உடல் கிடைத்து விட்டது. இது முத்துராசு தானா என உறுதிப்படுத்த அம்மாவை அழைத்துச் சென்றது போலீஸ், உடலை பார்த்ததும் கதறி அழுதார். வெளியே வந்ததும் போலீஸ் விசாரித்த போது அது முத்துராடி பாடி இல்லை என்றும்,அது என் புள்ள இல்லை என்றும் கலங்கிய கண்களுடன் கூறுகிறார். இது என்னடா புதுவித ட்வீட் என்று எண்ணத் தோன்றுகிறது.

  பழிவாங்க துடிக்கும் வடிவு

  பழிவாங்க துடிக்கும் வடிவு

  மொத்த சொத்தையும் எழுதி தருவதாக கூறி மாயன் முத்துராசின் அம்மாவை போலீசிடம் பொய் சொல்ல வைக்கிறார். இதுதெரிந்து ஆவேசமாக கத்துகிறார் வடிவின் கணவர் சிதம்பரம், சொத்துக்காக மகனேயே இல்லனு சொல்லிட்டியே நீ எல்லாம் ஒரு அம்மாவா, பெத்த மகனவிட உனக்கு சொத்து பெருசா போச்சா ச்சீ என்று புலம்கிறார் சிதம்பரம். ஆமாம்... சொன்னேன்.... என் மகனை கொன்ன உன் தங்கச்சி குடும்பத்தை நடுந்தெருவுல உக்காரவைக்கனும் அதுக்காக அப்படி சொன்னேன். இந்த சொத்தைவிட என்மகன் தான் பெருசு அவனுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் என்று ஆவேசமாக பேசுகிறார்.

  காயத்ரி கணவரிடம் அழகை

  காயத்ரி கணவரிடம் அழகை

  முத்துராசை கொலை செய்த காயத்ரி கணவர் கத்தியிடம் ஒரு கேள்வி கேட்கிறார். என்னை பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள். என்னை பார்த்தால் பயமாக இருகிறது, இனி உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்றாலும் சொல்லிவிடுங்கள் என கேட்கிறார்.ஆனால் கத்தி காயத்ரியை பாராட்டுகிறார்.உங்க தங்கச்சிக்கு ஒன்னு வரும் போது நீங்க முடிவு சரி என்று கூறுகிறார்.நேற்றைய எபிசோடை பார்க்கும் போது வரும் வாரங்களில் சீரியலில் அனல் பறக்கப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது.

  மாறன் வந்தாச்சு

  மாறன் வந்தாச்சு

  கடந்த ஒரு மாதமாக ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டுடன் ரசிகர்களை தொலைக்காட்சி பெட்டி முன் உட்கார வைத்த சீரியலில் தற்போது மற்றுமொரு ட்விஸ்ட் வர இருக்கிறது. அதுதான்,சின்ன வயதில் அம்மாவுடன் போன மாயனின் சகோதரர் மாறன் தற்போது என்ட்ரி கொடுக்கிறார். அந்த கதாப்பாத்திரத்திலும் மிர்ச்சி செந்திலே நடிக்க இருக்கிறார். மாறன் கையில் துப்பாக்கி உடன் மாஸாக வருவது போல வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  English summary
  Naam Iruvar Namak Iruvar has been entertaining viewers ever since the creators released the serial. the show hooks the fans on the edge of their seats as it provides a string of twists and turns.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X