Don't Miss!
- News
கும்மிருட்டில்.. 4 பேரிடம் சிக்கிய லண்டன் பெண்.. கரெக்ட்டா வந்த சமையல்காரர்.. என்னாச்சுன்னு பாருங்க
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
80களை கண்முன்னே கொண்டுவரப் போகும் விஜய் ஸ்டார் நைட்.. எல்லாரும் வாங்க அனுமதி இலவசம்!
சென்னை : விஜய் டிவி தொடர்ந்து தனது ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் சொக்கிப் போயுள்ளனர்.
அந்த வகையில் தன்னுடைய சேனலில் மட்டுமில்லாமல் வெளியிலும் பல ஷோக்களை ரசிகர்களுக்காக நடத்தி வருகிறது.
சமீபத்தில் கோடைக் கொண்டாட்டமாக விஜய் நட்சத்திரக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.
தளபதி 67 படத்துக்காக விஜய் எடுத்த துணிச்சலான முடிவு: ரசிகர்களுக்கு இது கொஞ்சம் ஷாக்கிங் அப்டே தான்

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
விஜய் டிவி தொடர்ந்து சிறப்பான நிகழ்ச்சிகளை தன்னுடைய சேனலில் அரங்கேற்றி வருகிறது. பிக் பாஸ், குக் வித் கோமாளி, பிக்பாஸ் ஜோடிகள் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை ரசிகர்களை நாடித்துடிப்பை உணர்ந்து கொடுத்து வருகிறது. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 3 நிறைவடைந்த நிலையில், விரைவில் பிக்பாஸ் சீசன் 6 துவங்கவுள்ளது.

இலவச நிகழ்ச்சிகள்
சேனலில் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை கொடுத்து ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமான விஜய் டிவி, வெளியிலும் சிறப்பான பல நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதன்மூலம் சேனலுக்கும் சிறப்பான பப்ளிசிட்டி கிடைத்து வருகிறது.

நட்சத்திரக் கொண்டாட்டம்
சமீபத்தில் கோடைக் கொண்டாட்டமாக விஜய் நட்சத்திரக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. சேனலின் சிறப்பான தொகுப்பாளர்கள், சீரியல் நடிகர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். ஒவ்வொரு வாரயிறுதியிலும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு சென்று இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிரபலங்கள் ஆட்டம் -பாட்டம்
நட்சத்திரங்கள் ஆட்டம், பாட்டம், கலக்கல் காமெடி, கேள்வி பதில் என இந்த நிகழ்ச்சி களைகட்டியது. அதுமட்டுமில்லாமல் அவர்களது மாவட்டங்களுக்கே இந்த சேனல் பிரபலங்கள் சென்று இந்த நிகழ்ச்சியை நடத்தியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சி
அந்த வகையில் விஜய் டிவி விருதுகள் உள்ளிட்டவையும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சியுடன் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 20ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடத்த திட்டமிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

20ம் தேதி மாலை
நீண்ட காலங்களுக்கு பிறகு சென்னை தீவுத்திடலில் வரும் 20ம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் தீமாக 80களின் காலகட்டம் வைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் வெளியான சூப்பர்ஹிட் பாடல்களை மையமாக கொண்டு இசை நிகழ்ச்சிகள், காமெடி கலாட்டாக்கள் மற்றும் கேள்வி -பதில்கள் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளது.

சீரியல் நடிகர்கள் பங்கேற்பு
தமிழ் ரசிகர்களின் பேவரிட் தொடர்களான விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னைத் தொடும், முத்தழகு, நம்ம வீட்டுப் பொண்ணு மற்றும் கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் பிரபலங்களும் இந்த ஸ்டார் நைட்டில் கலந்துக் கொள்ள உள்ளனர்.

தொகுப்பாளர்கள் மாகாபா -நிஷா
இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியில் 80களில் ரசிகர்களின் இதயத்தை தொட்ட இளையராஜாவின் மெலடி மற்றும் அதிரடி பாடல்கள் சூப்பர் சிங்கர்களால் பாடப்பட உள்ளது. மொத்தத்தில் இந்த விஜய் டிவி ஸ்டார் நைட்டில் ஃபன்னிற்கு குறைவிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

பிரம்மாண்ட நிகழ்ச்சி -அனுமதி இலவசம்
இதனிடையே தீவுத்திடலில் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு முற்றலும் இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் அதிகமான ரசிகர்களை இந்த நிகழ்ச்சிக்கு வரவைக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சி விரைவில் ஸ்டார் விஜய்யிலும் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.