யாருக்கெல்லாம் match ஆகுதுன்னு… Launch அன்னைக்கு பார்ப்போம்… பிக்பாஸ் சீசன் 5 !

சென்னை : பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்பது குறித்த சுவாரசியத்தை ஏற்படுத்த, விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் Guess the contestants என்று கேட்டுள்ளது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பெயரை பதிவிட்டு வருகின்றன.

பிக் பாஸ் நான்கு சீசன்களை கமலஹாசன் தொகுத்து வழங்கியது போல, ஐந்தாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்க உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியானதில் இருந்து இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

Bigg Boss Tamil Season 5

Bigg Boss Tamil Season 5

Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஊகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர்.

லோகோ அறிமுகம்

லோகோ அறிமுகம்

இதற்கிடையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 ப்ரொமோ வெளியானது. இந்த ப்ரொமோவில் கோட் ஷூட்டில் இருக்கும் கமல்ஹாசன் தனது கண்களை உருட்டி மிரட்டி, ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்து வைத்தார்.

வீடும் பெருசு,கலாட்டாவும் பெருசு

வீடும் பெருசு,கலாட்டாவும் பெருசு

இதையடுத்து இரண்டாவது ப்ரொமோ வீடியோ வெளியானது. அதில்., கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை மையப்படுத்தி இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. பின்னர் பேசும் கமல், ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ணும் கல்யாண வீட்லயே இவ்ளோ கலாட்டா இருக்கும் போது, வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு. எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று ப்ரொமோவில் தெரிவித்து இருந்தார்.

போட்டியாளர்களா?

போட்டியாளர்களா?

இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிளா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றது.

Guess the contestants

Guess the contestants

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளது. அதில், யாருக்தெல்லாம் match ஆகுதுன்னு Launch அன்னைக்கு பாப்போம் என்று பதிவிட்டுள்ளது. மேலும் Guess the contestants என்று கேட்டுள்ளது. இதற்கு பலரும் நான் நீ என்று போட்டி போட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ வெளியானதில் இருந்து இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

நான் இல்லீங்க

நான் இல்லீங்க

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமான லஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு பருவத்திலும் எனது பெயரை நான் பார்க்கிறேன். நான் #BiggBossTamil5ல் இல்லை, பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும் என் தனது ட்விட்டர் பக்கத்தில், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X