»   »  விஜய் டிவியின் ஜோடி 9 வது சீசனில் நடுவரான டி. ராஜேந்தர்.... பட்டையை கிளப்பும் நடன வீடியோ

விஜய் டிவியின் ஜோடி 9 வது சீசனில் நடுவரான டி. ராஜேந்தர்.... பட்டையை கிளப்பும் நடன வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாப்புலரான ரியாலிட்டி நிகழ்ச்சியான ஜோடி 9வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனின் நடுவராக இயக்குநர், நடிகர் டி. ராஜேந்தர் களமிறங்குகிறார்.

விஜய் டிவியில் 2006ம் ஆண்டு முதல் ஜோடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ரீல் ஜோடி, ரியல் ஜோடி இணைந்து நடனமாடினர். இப்போது சின்னத்திரை நட்சத்திரங்கள், நடனத்திறமையுள்ள பல போட்டியாளர்களும் நடனமாடுகின்றனர்.

நடுவர்களாக நடிகை ராதா, பூர்ணிமா பாக்கியராஜ், அம்பிகா, ரம்யா கிருஷ்ணன், சங்கீதா ஆகிய பலரும் பங்கேற்று போட்டியார்களுக்கு மதிப்பெண்கள் போட்டுள்ளனர்.

டி. ராஜேந்தர் நடனம்

விஜய் டிவியின் நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஜோடி நம்பர்-1 தற்போது ஒன்பதாவது சீசனை எட்டியுள்ளது. இந்த ஷோவில் நடனமாடும் ஒவ்வொரு ஜோடியை பற்றியும் விஜய் டிவியினர் தனிதனியாக முன்னோட்ட வீடியோவை ஒளிப்பரப்பி வந்தனர். தற்போது இந்த ஷோவிற்கு நடுவராக டி.ராஜேந்தர் வருகிறார் என ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் நடனம் ஆடி கலக்கியிருக்கிறார் டி.ஆர். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் குடும்பம் டி.ராஜேந்தர்

எந்த ஒரு நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் பங்கேற்றாலும் அந்த நிகழ்ச்சி களை கட்டும். சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் குடும்பத்தின் நடுவராக வந்த டி.ராஜேந்தர்தான் அந்த நிகழ்ச்சிக்கே ஹைலைட். போட்டியாளர்களுக்கு போட்டியாக நடனமாடி அசத்தினார் டி. ராஜேந்தர்.

2வது சீசனில் நடுவராக இருந்தார் சிம்பு

2வது சீசனில் நடுவராக இருந்தார் சிம்பு

கடந்த 2007ம் ஆண்டு ஜோடி நம்பர் 1 2வது சீசனில் நடுவராக இருந்தார் சிம்பு. நடிகர் பப்லு என்ற பிரிதிவிராஜ் நடனமாடிய போது நடுவர் சிம்பு அவரை சீண்டினார். இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். அப்போது எனக்கு நடிக்கத் தெரியாது என்று கூறி தேம்பி தேம்பி அழுதார்.

டிஆர்பி சண்டைகள்

டிஆர்பி சண்டைகள்

இது டிஆர்பிக்காக போடப்பட்ட பொய் சண்டை என்று பேசப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து இது பொய் சண்டைதான் பேசி வைத்து போடப்பட்ட சண்டைதான் என்று சில வாரங்களுக்கு முன்பு பிரிதிவிராஜ் கூறினார். அதே நேரத்தில் எனது கோபம் நிஜம்... எனது அழுகை நிஜம் என்று பதில் கூறினார் சிம்பு. 9 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய் டிவியில் தோன்றி தீபாவளி தினத்தன்று பேட்டியளித்தார் சிம்பு.

மகனுக்குப் பின் அப்பா

மகனுக்குப் பின் அப்பா

விஜய் டிவியில் மகன் சிம்பு பேட்டி கொடுத்த பின்னர் தற்போது அப்பா டி. ராஜேந்தர் ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக தோன்றுகிறார். சும்மாவே ஒவ்வொரு போட்டியாளருக்கும் நடனமாடி காட்டுவார் டி. ராஜேந்தர். இப்போது நடனநிகழ்ச்சிக்கு நடுவராகியுள்ளதால் போட்டியாளர்களை நடனமாட விடுவார? அல்லது இவரே நடனமாடி டிஆர்பியை ஏற்றுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
The ninth edition of the dancing reality show Jodi is back on Star Vijay. The first season of the show was launched on October 2006, which witnessed four real life couples and four reel couples. The show has been a major draw among the audience. Jodi Number One is a series reality dance show on the T.Rajendar is the Judge of 9th season.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil