மாதம்பட்டி மீண்டும் மானபங்கம் செய்யப்பட்டாரா? இந்த முறை ப்ளூ சட்டை மாறன் ஸ்டைலில் கலாய்த்த குரேஷி!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின்னர் அடிக்கடி டாக் ஆஃப் த டவுனாக உள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே, அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதுதான் பெரும் விவாதமாக மாறியது. இப்போதும் யூடியூப்க்குள் நுழைந்தால் ஜாய் கிரில்டாவின் சமீபத்திய பேட்டிகள் வேகமாக பரவிக் கொண்டுள்ளது.
இது இப்படி இருக்க, விஜய் டிவி கலக்கப்போவது யாரு குரேஷி மாதம்பட்டியை தொடர்ந்து கலாய்த்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் மானத்தை வாங்கி வருகிறார். அதாவது, சில தினங்களுக்கு முன்னர் குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் குரேஷி மாதம்பட்டி ரங்கராஜைப் போல இமிடேட் செய்திருந்தார். அதாவது மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய பர்சனல் வீடியோ ஒன்றை ஜாய் கிரிசில்டா பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ், லவ் யூ, மிஸ் யூ என ஜாய் கிரிசில்டாவை ஹாய் பொண்டாட்டி என்று எல்லாம் அழைத்திருந்தார். மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி ரொமான்டிக்காக அந்த வீடியோவில் பேசி இருந்தாரோ, அதே போல் பேசி மாதம்பட்டி அண்ணன் ஸ்டைலில் மனைவிக்கு ஓணம் வாழ்த்து சொன்னேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் " ரொமான்ஸ் பத்தல டா என்கிட்ட இரண்டு வாரம் ட்ரைனிங் வாடா" என்று கமெண்ட் போட்டிருந்தார்.
குரேஷி: இப்படி இருக்கையில் குக் வித் கோமாளி சீசன் 6இல் ஒரு எபிசோடில் குரேஷி மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜை பங்கமாக கலாய்த்துள்ளார். அதாவது பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் போல, ப்ளூ சட்டை அணிந்து கொண்டும், ப்ளூ சட்டை மாறன் எப்படி ஒரு படத்திற்கு விமர்சனம் கூறுவாரோ அதே போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விமர்சனம் செய்வது போல செய்கிறார். முதலில் நிகழ்சியின் தொகுப்பாளர்களைக் கலாய்த்த குரேஷி அதன் பின்னர் நிகழ்ச்சியின் நடுவர்களைக் கலாய்த்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ்: நடுவர்களில் அவரை முதலில் கலாய்த்தது, மாதம்பட்டி ரங்கராஜைத் தான். அதாவது, மாதம்பட்டி ரங்கராஜை, " முதலில் நாம் பார்க்கப்போவது மாதம்பட்டி. மாதம்பட்டி என வைத்ததற்கு பதிலாக மாத வட்டி என்று வைத்திருக்கலாம். வட்டி கடைக்காரர் எப்படி வாராவாரம் புதுப்புது துணிகளைப் போட்டுக் கொண்டு வந்து நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார். எல்லாரும் கொடி கட்டுகிற கயிறில் தான் துணி காயப் போடுவாங்க, இவரு கொடி கட்டுற கயிறை துணியில் கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்" என்று கூறுகிறார்.
செம கலாய்: குரேஷி இவ்வாறு கூற மாதம்பட்டி ரங்கராஜ், சிரித்துக் கொண்டே பொம்மை கட்டையை எடுத்துக்கொண்டு சென்று குரேஷியை அடிக்கிறார். அதற்கு புகழ்," குரேஷியாக இருந்தாலே கலாய்ப்பான், இப்போது ப்ளூ சட்டை மாறனைப் போல வேடம் போட்டுக் கொண்டு வந்துள்ளான் கலாய்க்காமல் இருப்பானா" என்று கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகளோ மாதம்பட்டி ரங்கராஜை குரேஷி மீண்டும் மீண்டும் கலாய்த்து வருகிறாரே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











