கிடைக்கிற கேப்புல எல்லாம்.. மாதம்பட்டி ரங்கராஜை கலாய்க்கும் குரேஷி.. கூட அவரும் சேர்ந்துட்டாரே!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்ட்டா பிரச்னை நாளுக்கு நாள் பரபரப்பை கூட்டிக் கொண்டு இருந்தாலும், மாதம்பட்டி ரங்கராஜ்க்கு நெருக்கமானவர்கள், அந்த விவகாரத்தை வைத்தே மாதம்பட்டி ரங்கராஜை மிகவும் பங்கமாக கலாய்க்கும் சம்பவங்கள் நடைபெற்றுத்தான் வருகிறது. முதலில் இது தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் நடந்து கொண்டு இருந்தது. இப்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவிலேயே நடக்கிறது. இதைப் பார்த்த இணையாவாசிகள், கிடைக்குற கேப்புல எல்லாம் மாதம்பட்டி ரங்கராஜைப் போட்டு செஞ்சுக்கிட்டு இருக்கான்னு கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதாவது, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்ட்டாவுக்கும் பிரபல நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ்க்கும் திருமணம் நடைபெற்றது தொடர்பான புகைப்படங்களை கிரிசல்ட்டா வெளியிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன். இப்படி இருக்கும்போது, ஜாய் கிரிசல்ட்டாவுடன் திருமணம், மேலும அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்ற தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

Vijay TV KPY Qureshi And Pugazh Trolls Madhampatty Rangaraj Regards Joy Crizildaa Issue
Photo Credit:

இருவரும் இணைந்து தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் பலருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசல்ட்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மாதம்பட்டியுடன் இது தொடர்பாக முறையிட்ட போது அவர் தன்னைத் தாக்கியதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

விவகாரம்: இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் உடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் கிரிசல்ட்டா. இப்படி இருக்கும்போது மாதம்பட்டி ரங்கராஜ்க்கு நெருக்கமானவர்களா உள்ள கலக்கப்போவது யாரு குரேஷி மற்றும் புகழ் என இருவரும் மாதம்பட்டியை இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு கலாய்த்து வருகிறார்கள். இதில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய, வீடியோ ஒன்றை கிரிசல்ட்டா பகிர்ந்து இருந்தார். அதில் மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி பேசினாரோ, அதேபோல் குரேஷி பேசி வீடியோ வெளிட்டிருந்தார். அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ், ரொமான்ஸ் பத்தல, எங்கிட்ட டிரைனிங் வாடா என்று கமெண்ட் போட்டிருந்தார்.

Vijay TV KPY Qureshi And Pugazh Trolls Madhampatty Rangaraj Regards Joy Crizildaa Issue
Photo Credit:

குரேஷி - புகழ்: இப்படி இருக்கும்போது, தற்போது ஒரு நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஒரு பாடல் டெடிக்கேட் செய்கிறேன் என்று, ' காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம் பெற்றுள்ள படலான ஐ லவ் யூ 2 ரியலி ஐ லவ் யூ 2" பாடலை டெடிகேட் செய்கிறார். இப்படி இருக்கும்போது கலக்கப்போவது யாரு புகழும் இந்த வரிசையில் சேர்ந்து கொண்டு மாதம்பட்டி ரங்கராஜை பங்கமாக கலாய்த்துள்ளார். அதாவது மாதம்பட்டி தரப்பில் இருந்து ஜாய் கிரிசல்ட்டா தன்னைப் பற்றி விமர்சிக்கக் கூடாது என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் என்று குறிப்பிடாமல், ரங்கராஜ் என்று குறிப்பிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நஷ்டம்: மேலும் அந்த மனுவில் கடந்த 2 வாரங்களில் ரூபாய் 12.5 கோடிகள் வரை தனது சமையல் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை குறிப்பிட்டு மாதம்பட்டி ரங்கராஜை பங்கமாக கலாய்த்துள்ளார் கலக்கப்போவது யாரு புகழ். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையாவாசிகள், கிடைக்குற கேப்புல எல்லாம் மாதம்பட்டி ரங்கராஜைப் போட்டு செஞ்சுக்கிட்டு இருக்கான்னு கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X