»   »  ஹெலிகாப்டர் மாப்பிள்ளையும்... கெத்து காட்டும் பெண்களும்! - விஜய் டிவி நீயா நானா

ஹெலிகாப்டர் மாப்பிள்ளையும்... கெத்து காட்டும் பெண்களும்! - விஜய் டிவி நீயா நானா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 50 சவரன் நகை, வீடு கொடுத்தால்தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன் இல்லைன்னா எனக்குக் கல்யாணமே வேணாம்னு இந்த காலத்தில் பெண்கள் பெற்றோர்களுக்கு செக் வைக்கிறார்கள். கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்தால் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஆசை ஆசையாக ஒரு பெண் சொன்னது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் ஆனது.

பொண்ணு வீட்டில் மாப்பிள்ளை வீட்டார் பஜ்ஜி, டீ சாப்பிட்டு வரதட்சணை கேட்ட காலம் போய் இப்போது பொண்ணுங்களே பெற்றவர்களிடம் தனக்கான நகை, பணத்தை வரதட்சணையாக கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

பொண்ணு ஆசைப்படுகளேன்னு கஷ்டப்பட்டு கடன் வாங்கி நகை, வீடு, இடம்னு கேட்குறதெல்லாம் வாங்கித் தர்றோம் என்று கூறிய பிறகு, திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று பெண்கள் கூறுவதைக் கேட்டு மாப்பிள்ளைகளும் இப்போது மயங்கி சரிகிறார்கள்.

கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்தால் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஆசை ஆசையாக ஒரு பெண் சொன்னது டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. சமூக வலைத்தளங்களில் ஹெலிகாப்டர் பொண்ணுதான் இப்போது ஹாட் டாபிக்

வாடகை ஹெலிகாப்டர்ல வரணும்

சொந்த ஹெலிகாப்டர்ல வராவிட்டாலும் வாடகை ஹெலிகாப்டரிலாவது வரவேண்டும் என்று ஆசை ஆசையாய் ஒரு பெண் பேசினார். அதை கிண்டலடித்துள்ளார் இந்த இளைஞர்.

தாங்க முடியலை

ஹெலிகாப்டரில் பெண் கேட்கப் போகும் டிஸ்கவரி சேனனின் மேன் வர்சஸ் வைல்ட் தொகுப்பாளர் என்று மீம்ஸ் போட்டு கலக்கியிருக்கிறார் ஒரு வலைஞர்.

ஹெலிகாப்டர் மாப்பிள்ளை

காரில் வந்த மாப்பிள்ளையிடம் ஹெலிகாப்டர் எங்கே என்று பெண் கேட்பது போல மீம்ஸ் போட்டுள்ளார் ஒரு வலைஞர்.

பொண்ணு வேணாம்

ஹெலிகாப்டர் மாப்பிள்ளை கேட்கும் பெண் வேண்டாம் நாங்க சிங்கிளாவே இருக்கோம் என்கிறார்கள் சில மாப்பிள்ளைகள்.

கல்யாணமே கனவுதான்

இந்த காலத்து பசங்களுக்கு கல்யாணமே கனவாகத்தான் இருக்கிறது என்று மீம்ஸ் போட்டுள்ளார் ஒருவர்.

என்னவெல்லாம் கேக்கறாங்க பாருங்க

பெற்றவர்களிடம் பெண்கள் என்னவெல்லாம் கேட்கிறார்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது நீயா நானா

English summary
Neeya Naana debate on girls dowry for their marriage to them parents.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil