கடைசியாக தெருநாய் கடித்து எந்த பணக்கார வீட்டு குழந்தை இறந்தது? நீயா நானாவில் ஃபயர் விட்ட கோபிநாத்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் வார வாரம் ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் விவாதிக்கப்பட்ட தலைப்பு, தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் மற்றும் தெரு நாய்க்கும் நகரத்தில் உரிமை உள்ளது என்ற இரண்டு தலைப்புகளின் கீழ் விவாதிக்கப்பட்டது.

தெரு நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் மிக மோசமாக தாக்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது உலா வந்து அச்சுறுத்தியதை பார்த்திருக்கிறோம். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவு வழங்கக் கூடாது. டெல்லி முழுவதும் உள்ள தெருநாய்களை அப்புறப்படுத்தி, அவற்றை காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். நாய்களுக்கு கருத்தடை ஊசி, ரேபிஸ் தொற்று தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் தெரு நாய்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றது. சென்னையிலும் நடைபெற்றது.

Vijay TV Neeya Naana Gopinath Slams Who Supports Stray Dogs Blindly Video Goes Trending

இந்நிலையில் இது தொடர்பாக நீயா நானாவில் விவாதக்கப்பட்டு, அது இன்று அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விவாதத்தில் தொகுப்பாளர் கோபிநாத் பேசியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதாவது, அவர் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசியவர்களின் வாதத்திற்கு எதிர்வாதமாக எழுப்பிய கேள்விகள் குறித்த வீடியோ துணுக்குகள் இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. அதாவது, " ஊசி அரசாங்கம் போடுகிறது என்பது சரி. நான் ஒரு தினக்கூலி நான் எத்தனை நாட்களுக்கு என் வேலையை விட்டுவிட்டு ஊசி போட போக முடியும். தெரு நாய்கள் யாரைக் கடிக்கிறது என்பதை கவனிக்கனும்.

இது தான் பாய்ண்ட்: கடைசியாக தெரு நாய்கள் பணக்கார வீட்டுக் குழந்தைகளை கடித்து அவர்கள் மரணித்ததாக செய்தி கேட்டுள்ளீர்கள்? என்று கேட்டதற்கு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படவா கோபி, அது பாய்ண்ட் இல்லை என்று கூறினார். இதனால் ஆவேசப்பட்ட கோபிநாத் அது தான் பாய்ண்ட், நான் அதைத் தான் பேசுவேன். பணக்கார தெருக்களில் தெரு நாய்கள் பெரும்பாலும் இல்லை.

ஃபயர் கேள்வி: அந்த நாய்கள் நடுத்தர மற்றும் விளிம்புநிலை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் மட்டும் எப்படி இத்தனை தெருநாய்கள் உள்ளது? அப்படியானால் தெருநாய்கள் நகரங்களில் இருக்கலாமா கூடாதா என்கிற முடிவை யார் எடுக்க வேண்டும்? நாயால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் பணக்கார வீட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசியவர்கள் கூறியது, அந்த பட்டியலில் பணக்காரர்கள் இல்லை, காரணம் அவர்கள் தெருக்களில் நடப்பதில்லை என்று கூறினர்.

Vijay TV Neeya Naana Gopinath Slams Who Supports Stray Dogs Blindly Video Goes Trending
Photo Credit:

கோபிநாத் கோபம்: உடனே கோபிநாத், அப்படியானால் பிரச்னை யாருக்கு உள்ளது? சாலைகளில் நடக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு தானே அந்த பிரச்னை உள்ளது. அப்படியானால் சாலைகளில் நாய் இருக்க வேண்டுமா கூடாதா என்ற முடிவை யார் எடுக்க வேண்டும்? பிரச்னை என்னுடையதாக இருக்கும்போது, தீர்வு எப்படி உங்களுடையதாக இருக்க முடியும்? " என்று கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்ச்சி தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் அதிகம் உலா வருகிறது. பலரும் நீயா நானா கோபிநாத்தின் வாதத்திற்கு சரி என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X