»   »  சாதியின் பேரால் காதலை எதிர்ப்பதா?... 'நீயா நானாவில்' குமுறல்!

சாதியின் பேரால் காதலை எதிர்ப்பதா?... 'நீயா நானாவில்' குமுறல்!

Subscribe to Oneindia Tamil
Neeya Naana
காதல்.... சரித்திர காலத்திலும், சங்க காலத்திலும் காதல்தான் பாடுபொருள்... சினிமாவிலும், நாடகங்களிலும், கதைகளிலும் காதல் இன்றி இல்லை. காதல் மட்டும் இல்லை என்றால் மனிதர்களின் வாழ்வே சூன்யமாகிவிடும்.

காதலுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது. அதுபோலத்தான் சாதி பார்த்து வருவதில்லை காதல். அந்த காதல்தான் இன்றைக்கு சாதி மாறி காதலித்த குற்றத்திற்காக மூன்று கிராமங்களை எரித்து சாம்பலாக்கியிருக்கிறது.

இந்த காதல்தான் ஞாயிறு இரவு விஜய் டிவியின் விவாதப் பொருளாகவும் அமைந்திருந்தது. காதல் திருமணங்களை எதிர்ப்பவர்கள் ஒருபுறமும், காதல் திருமணங்களை ஆதரிப்பவர்கள் ஒருபுறமும் பேசி தங்களின் கருத்துக்களை நியாயப்படுத்தினர்.

தன்னுடைய மகள் வேறு சாதிக்காரரை காதலிக்கிறார் என்பதற்காக வெறுக்காமல் அவர்களின் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்து வைத்ததாக கூறினார் ஒருதாய்.

அதேபோல் காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர்கள் உறவினர்களிடம் ஒதுக்கப்பட்டு வாழ்வதைப் போல தங்களின் பிள்ளைகளும் ஒதுக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே காதலை எதிர்ப்பதாக கூறினார் மற்றொரு பெண்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நான்கு சிறப்பு விருந்தினர்களும் காதல் திருமணம் பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். பத்திரிக்கையாளர் இறைவன் காதல் திருமணத்தால் பெண்கள்தான் ஏமாற்றப்படுகின்றனர் என்றார்.

கொங்குநாடு முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஈஸ்வரன், 20 வயதிற்கு மேல் அனுபவத்தில் வரும் காதலை எதிர்க்கவில்லை. அதே சமயம் 17 வயதில் பெண்களை காதல் வயப்படுத்தி அவர்களை ப்ளாக் மெயில் செய்யும் கலாச்சாரம் பரவி வருகிறது. இந்த காதலைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

தங்களை விட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெண் கொடுக்கமாட்டோம் என்று நிகழ்ச்சியில் பேசிய சிலர் கூறினர். இதே போலத்தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பையன் என்பதற்காக அவனை காதலித்த பெண் குழந்தையை கவுரக் கொலை செய்யவும் துணிகின்றனர். இந்த விசயத்தை எதிர்த்தார் சிறப்பு விருந்தினர் சுப.வீ.

இந்த சமூகத்தில் மதம் மாறுவதைப் போல சாதி மாறிக்கொள்ள முடியும் என்றால் தான் தலித் ஆக மாறுவேன் என்று கூறினார் சுப.வீ. சாதியக் கட்டுப்பாடு என்பது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதை நூறு ஆண்டு கோடாறியால் வெட்டி விட முடியாது. ஆனால் கண்டிப்பாக அது வெட்டப்படும். கலப்பு காதல் திருமணங்கள் சமுதாயத்தில் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றார்.

இந்த விவாதங்களைக் பேட்ட எழுத்தாளர் இமையன், மிகவும் வேதனையோடு சில கருத்துக்களைத் தெரிவித்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை பிற சமூதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் காதலிக்கின்றனர் அதை ஏற்றுக்கொள்கிறது இந்த சமூகம். அதே போல் பிற சமூக ஆண்கள் காதலின் பெயரால் தலித் இளம் பெண்களை ஏமாற்றிவிடுகின்றனர் அதை கேட்பதற்கு யாருமில்லை. ஆனால் பிற சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களை காதலித்தால் எதிர்க்கின்றனர். கவுரக் கொலை செய்கின்றனர். இது போன்ற மக்கள் வாழும் சமுதாயத்தில் பிறந்த காரணத்திற்காக வெட்கப்படுகிறேன் என்றார் இமையன்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தொகுப்பாளர் கோபிநாத், இந்த சமுதாயத்தில் எத்தனையோ விசயங்கள் மாறிவிட்டன. வீட்டுக்குள் ஒடுக்கப்பட்டிருந்த பெண்களுக்கு கல்வி அறிவு கொடுப்பட்டு விட்டது. அவர்கள் வேலைக்குப் போகின்றனர். அதேபோல் காதல் கலப்புத் திருமணங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நிச்சயம் ஒருநாள் இந்த நிலை மாறும் என்று கூறி முடித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Gopinath's Neeya Naana will deal with the love marriage issues on 20th January 2013. The two opponent teams will be having a heated argument regarding the love marriage.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more