விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்... காரணம் இது தான்

சென்னை : தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் விஜய் டிவி சீரியல்கள் தான் ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளன. பிரைம் டைமில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். சீரியல்களுடன் சேர்த்து ரசிகர்களை கவர பல நிகழ்ச்சிகளை விஜய் டிவி நடத்தி வருகிறது.

எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர், 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும், 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ், 8.30 மணிக்கு பாக்யலட்சுமி, 9 மணிக்கு பாரதி கண்ணம்மா, 9.30 மணிக்கு ராஜா ராணி, 10 மணிக்கு தேன்மொழி பிஏ ஆகிய சீரியல்கள் மக்களிடம் மிகவும் பிரபலம். இந்த சீரியல்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

சீரியல்கள் நேரம் மாற்றம்

சீரியல்கள் நேரம் மாற்றம்

அக்டோபர் முதல் தேதியில் இருந்து விஜய் டிவி.,யில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 5 துவங்க உள்ளதால் சீரியல் நேரங்கள் மாற்றப்பட உள்ளது. பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு துவங்கி 10 மணி வரை ஒளிபரப்பப்படும். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கமல் வரும் எபிசோட்கள் மட்டும் 9 மணிக்கு துவங்கி 10 மணி வரை ஒளிபரப்பாகும்.

பிக்பாஸ் நேரமும் மாறுதா

பிக்பாஸ் நேரமும் மாறுதா

ஆனால் இந்த சீசன் ஒளிபரப்பப்படும் நேரம் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இரவு 8 மணி அல்லது 8.30 மணிக்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட உள்ளதாம். அதோடு இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் விஜே ஜேக்குலின் நாயகியாக நடிக்கும் தேன்மொழி பிஏ சீரியல் செப்டம்பர் இறுதியுடன் முடிவடைய உள்ளதாம்.

டிஆர்பி பாதிக்கப்பட கூடாது

டிஆர்பி பாதிக்கப்பட கூடாது

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல் வரும் எலிமினேஷன் எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்பதால், மற்ற சீரியல்களின் டிஆர்பி பாதிக்கப்படாமல் இருக்க, டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல்கள் இனி திங்கள் முதல் வெள்ளி வரை மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. பிக்பாஸ் ரேட்டிங் கூட்டுவதற்காக, மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே இரவு நேரத்தில் ஒளிபரப்பப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

எந்த நேரத்திற்கு மாற்றம்

எந்த நேரத்திற்கு மாற்றம்

இந்த தகவலால் தங்களின் ஃபேவரைட் சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரங்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். விரைவில் பிக்பாஸ் சீசன் 5 துவங்கும் தேதியுடனான ப்ரோமோ வெளியிடப்பட உள்ளதாம். ஏற்கனவே 3 ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த விறுவிறுப்பான ப்ரோமோ விரைவில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

கவலையில் சீரியல் பிரியர்கள்

கவலையில் சீரியல் பிரியர்கள்

ப்ரைம் டைம் சீரியல்கள் அனைத்தும் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், சீரியல்களின் நேரம் மாற்றப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சீரியல் பிரியர்களை கவலையடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X