»   »  எப்படி இருந்த நிகழ்ச்சிகள், இப்படி ஆகிப்போச்சே.. சர்ச்சைகளை தாண்டி சாதிக்குமா விஜய் டிவி?

எப்படி இருந்த நிகழ்ச்சிகள், இப்படி ஆகிப்போச்சே.. சர்ச்சைகளை தாண்டி சாதிக்குமா விஜய் டிவி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்துல டிவி-ன்னு சொன்னவே எல்லாரும் சொல்லுற ஒரே டிவி சன் டிவி தான். சுமார் 10 வருஷத்துக்கு முன்னாடி விஜய் டிவி, ஜோடி நம்பர் 1, கனா காணும் காலங்கள், காபி வித் டிடி, சூப்பர் சிங்கர், நீயா நானா மற்றும் குழந்தைகளுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர் என புதிய நிகழ்சிகள் மூலம் அதிகப்படியான ரசிகர்களை பெற்றது.

டிவி என்றால் சீரியல் மட்டுமில்லை என்பதை தமிழ் ரசிகர்களுக்கு உரைத்து தங்களுடைய புதிய நிகழ்சிகள் மூலம் முன்னிலையை வகித்த விஜய் டிவி இன்று கொஞ்சம் கொஞ்சமாக தன் இயல்பை இழந்து வருவதற்கான காரணத்தை ஒரு சுற்று பார்த்துவிட்டு வரலாம்.

2004-ம் ஆண்டு ஸ்டார் வேர்ல்ட் டிவியில் காப்பி வித் கரண என்ற ஹிந்தி நிகழ்ச்சியின் காப்பியே, காபி வித் டிடி. 2006-ம் ஆண்டு காபி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முதலில் காபி வித் சுச்சி, காபி வித் அணு என நிகழ்சிகள் தொகுத்து வழங்கப்பட்டன.

பேச்சு ஓவர்

பேச்சு ஓவர்

இடையில் நிறுத்தப்பட்ட இந்நிகழ்ச்சி 2013ம் ஆண்டு புது பொலிவுடன் ஒளிப்பரப்பானது. அதன் தொடர்ச்சியாக 2014 -ம் ஆண்டு சீசன் 2 வந்தது. டிடி-யின் ஓவர் பேச்சின் விளைவாக அந்த நிகழ்ச்சியும் நடுவில் நிறுத்தி தற்போது விசேஷ காலங்களில் மட்டும் ஒளிப்பரப்பாகிறது. பேச்ச குறைச்சா இன்னும் கொஞ்ச நாளுக்கு தாக்குபிடிக்கலாம்.

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர்

ஸ்பான்சரும் மாறல, நிகழ்ச்சியின் அறிமுகத்துக்கான வசனங்களும் மாறவில்லை என்றால், அது ஏர்டல் சூப்பர் சிங்கர் தான். தற்போது 2010ம் ஆண்டு முதல், போட்டியாளருக்கான இறுதிச்சுற்றில் வெற்றியாளர்களை நேயர்விருப்பம் என்று கூறி யாருக்கு அதிக வாக்குகள் வருகிறதோ அவர்களே வெற்றியாளர் என அறிவிக்கின்றனர்.

நடுவர்கள் ஏன்?

நடுவர்கள் ஏன்?

இதனால், திறமையானவர்கள் வெற்றி பெறுவதை விட ரசிகர்களுக்கு விருப்பமனவர்களே வெற்றியாளர் ஆகின்றனர். விருப்பமானவர்கள் தான் வெற்றிபெற வேண்டுமெனில் எதற்காக நடுவர்கள்...? இதே போலத்தான் சூப்பர் சிங்கர் ஜூனியரிலும். நடுவர்கள் மற்றும் போட்டியாளர்கள் விட அந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவர்கள் தான் அதிக பந்தா காட்டுகின்றனர்.

நீயா நானா

நீயா நானா

2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீயா நானா நிகழ்ச்சி இன்று வரை தடையின்றி ஒளிப்பரப்பாகின்றது என்றால் அது நிச்சயம் அங்கு விவாதிக்கப்படும் டிரெண்டிங் விவாதங்களாலும், அதனை தொகுத்து வழங்கும் கோபியாலும்தான். தன்னுடைய டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த சில சச்சரவு ஏற்படுத்தும் தலைப்பையும் தற்போது விவாதிக்கின்றது நீயா, நானா. இதனால், பேச்சாளர்கள் தரப்பினரிடையே மோதல் கூட வருகின்றது.

கலக்க போவது யாரு

கலக்க போவது யாரு

ஒரு காலத்தில் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பல திறமையானவர்களை திரையில் காண்பித்த பெருமை விஜய் டிவிக்கே உரியது. அதற்கு பெயர் போனதுதான் கலக்க போவது யாரு நிகழ்ச்சி. பங்குபெற்றவர்கள் மட்டுமில்லை, அதன் நடுவர்கள் கூட நகைச்சுவைக்கு பெயர்போனவர்கள் தான். அந்தா இந்தான்னு இப்போ சீசன் 5-ன்னு ஒளிப்பரப்புராங்க. இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் பாலாஜி, சேது மற்றும் மகேஷ் மூவரும் நகைச்சுவை திறமையும், அனுபவமும் மதிப்பெண் வழங்க தகுதியானவர்கள்னு கூட சொல்லலாம்.

டபுள் மீனிங்

டபுள் மீனிங்

ஆனா ரெண்டு பக்கமும் அதே நடுவர்கள் இருக்கையில் உள்ள நந்தினி மற்றும் பிரியங்கா எந்த வகையை சார்ந்தவர்கள் என்று தான் தெரியவில்லை. ஒன்று, இந்த ரெண்டு பெரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றவர்களாக இருக்க வேண்டும். இல்லையானால், தொகுப்பாளர்களாக இருக்கும் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் இவர்களுக்கு குழுவை பிரித்து தந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நந்தினி மற்றும் பிரியங்காவை நடுவர்களாக்கியதே பெரும் சோகம் என்றால், போட்டியாளர்கள் இரட்டை அர்த்தங்களில் பேசுவது இன்னும் கொடுமை.

அது இது எது

அது இது எது

அது இது எது நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கியவர் சிவகார்த்திகேயன். அவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வர, மா கா பா தொகுத்து வழங்க ஆரம்பித்தார். நிகழ்ச்சி என்னவோ நல்லாத்தான்யா போகுது. ஆனா, அந்த நிகழ்ச்சில ரொம்ப முக்கியமானது, பிரபலமானது எல்லாமே இந்த சிரிச்சா போச்சு சுற்று தான். அவ்வளோ பிரபலம். காமெடி பண்ணி பிரபலமானது ஒரு காலம்னா, இப்போ சர்ச்சையான வார்த்தைகள், வந்த விருந்தினர்களிடம் அதுமீறல்னு செய்தி வழியா பிரபமாகிறது இப்போது. இப்படியே போச்சு.... சிரிச்சா போச்சு, ஒரேதா போச்சுன்னு சொல்லற காலம் வந்துரும் போலிருக்கே...!

சீரியல்

சீரியல்

கோலங்கள், மெட்டி ஒலி, சித்தி இப்படி குடும்ப தொடர்களை வருஷ கணக்குல கட்டிபோட்ட சன் டிவி-ய ஓவர் டேக் பண்ணது விஜய் டிவியின் லொள்ளு சபா, கனா காணும் காலங்கள், மதுரை, கீதாஞ்சலி, கள்ளிகாட்டு பள்ளிக்கூடம்-னு புது கான்செப்ட் சீரியல் வந்தது தான். இந்த சீரியல் அதிகபட்சமா 150 நாள் தான் ஓடும். கதை சுருக்கமா இருக்குறதும், புதுசா இருக்குறதுமே விஜய் டிவிக்கு பெரியபாலமா அமைஞ்சது.

இப்படி பண்றீங்களே

இப்படி பண்றீங்களே

ஆனா, இப்போ ஓடுற சரவணன் மீனாட்சி செந்தில், ஸ்ரீஜாவோட முடிஞ்சிருந்தா இந்த தொடரும் எடுத்துக்காட்டு லிஸ்ட்ல வந்திருக்கும். இப்போ, இந்த தொடர தலைமுறை தலைமுறையா இவங்க இழுக்குறத பார்த்தா பார்க்குறவங்களுக்கு இழுத்துகிரும் போலிருக்கே.. சொந்த வீட்டுல இருக்குறவங்க கூட அளவாத்தான் இருப்பாங்க. ஆனா, இங்க தெய்வம் தந்த வீடுல இருக்குறவங்க தூங்கும் போதுகூட மேக்கப் போட்டு தான் தூங்குறாங்க. எங்க போய் முடியப்போகுதோ.. ?

English summary
Vijay tv programs on its low after it's starting.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil