Just In
- 57 min ago
போலி இ-மெயில் விவகாரம்.. கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜரான ஹிரித்திக் ரோஷன்.. பாலிவுட் பரபரப்பு!
- 1 hr ago
ஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ
- 1 hr ago
நடமாடும் நகைக்கடை ஹரி நாடாருக்கு ஜோடியான வனிதா.. தொடங்கியது 2கே அழகானது காதல் படப்பிடிப்பு!
- 2 hrs ago
ஏலே.. நான் கண்ணாடி மாதிரில. மிரட்டும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ.. குவியுது லைக்ஸ்!
Don't Miss!
- News
நெருங்கும் 5 மாநில தேர்தல்.... கட்சி பலவீனமாகிக் கொண்டே போகிறது... காங். தலைவர்கள் சர்ச்சை பேச்சு
- Automobiles
நாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா? பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்!
- Lifestyle
சத்தான... வாழைத்தண்டு சூப்
- Sports
கடைசி மேட்சில் ஆட முடியாது.. திடீரென வந்து சொன்ன பும்ரா.. அணியில் இருந்து விலகல்.. என்ன நடந்தது?
- Finance
தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புகழுக்கு பார்வதி கொடுத்த சர்ப்பிரைஸ்.. எதிர்பார்க்கவே இல்லையே.. வேற லெவல்!
சென்னை: எப்போதுமே அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பார்த்துக்கொண்டிருந்த குக் வித் கோமாளி புகழுக்கு தற்போது அவருடைய ரசிகர்களும் விஜே பார்வதியும் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ் அவரே எதிர்பார்க்காமல் கண்கலங்கிய லேட்டஸ்ட் வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக சந்தோஷமாக சிரித்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் மனதில் ஏகப்பட்ட கஷ்டங்கள் மனதில் புதைந்து இருக்கும் .
ஆனாலும் அந்தக் கவலைகளை மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு அடுத்தவர்களிடம் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் நடிகைகள் .

எமோஷனல்
ஆனாலும் அவர்களும் திடீரென ஏமோஷனல் எட்டி பார்க்கும் அந்த மாதிரி தான் தற்போது புகழுக்கும் ஒரு எமோஷனலான காட்சி நடைபெற்றிருக்கிறது. அதனை அவருடைய ரசிகர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் ஃபேன்ஸ் பேஜ்சுகளில் போஸ்ட் பண்ணி வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் தற்போது உருவாகி விட்டது.

சூப்பரான ஷோக்கள்
சீரியல்கள் எல்லாமேபலருக்கு பார்த்து போராக இருக்கிறது என்று சீரியல்களை பார்ப்பதை தவிர்த்து வரும் நிலையில் டிவி முன்பு அனைவரையும் உட்கார வைத்திருப்பது இந்த நிகழ்ச்சிதான் .இது பல சீசன் களை கடந்து வந்தாலும் இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு கன்டஸ்டன்ட் களும் ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கின்றனர்.

சீசன்தோறும் பேமஸ்
பல படங்களில் நடித்து வாங்கும் பெயரை இவர்கள் இந்த நிகழ்ச்சி மூலமாகவே பெற்று வருகின்றனர். அதிலும் அனைத்து சீசன்களின் புகழின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதில் எத்தனை கன்டஸ்டன்ட் இருந்தாலும் இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்துகொண்டிருக்கிறது. அதுவும் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்னுடைய காமெடியால் சிரிக்க வைத்து அடுத்தவர்களின் கவலைகளை மறக்க வைத்து கொண்டிருக்கிறார் .

வேற லெவல் ரகளை
அதுவும் இந்த சூட்டிங் ஸ்பாட்டில் இவர் செய்யும் ரகளை வேற லெவல் தான். அவர் சிரிக்காமலே அடுத்தவர்கள் வயிறு புண்ணா ஆக்குகின்ற வரைக்கும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர். இவரும் ஷிவாங்கியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் நாளுக்கு நாள் அதிகமாய் கொண்டு ரசிகர்களை பாடாய் படுத்தி எடுத்து வருகிறது. அண்ணன்கள் இல்லாத தங்கச்சி கூட இந்த மாதிரி ஒரு அண்ணன் நமக்கு இருக்கக் கூடாதா என்று ஏங்கி வருகின்றனர் .

அண்ணன் தங்கச்சி போல
அந்த அளவுக்கு அண்ணன் தங்கச்சிகள் இவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது. சிவானி எப்போதுமே குழந்தைத்தனமாக இந்த செட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது இவர் அவருக்கு பாசமான அண்ணனாக நடந்து கொள்வதைப் பார்க்கும் போது பலரும் இந்த மாதிரி நமக்கு இருக்கக்கூடாதா என்று பொறாமைப்பட்டு கொண்டு வருகிறார்களாம்.

ரம்யா பாண்டியன்
அதுவும் ஒவ்வொரு சீசனில் இவருக்காக ஜோடி சேரும் கன்டஸ்டன்ட் ஒவ்வொருவரும் ஒரு பாடு படுத்தி எடுத்து விடுகிறார். போன சீசனில் ரம்யா பாண்டியனுக்கும் இவருக்கும் நல்ல காம்பினேஷன் போய்க்கொண்டிருந்தது. தற்போது அது போல இவருக்கும் பவித்ரா விற்கும் கெமிஸ்ட்ரி நல்லா நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர்கள் எப்போதுமே விளையாட்டு சண்டை போட்டுக்கொண்டும் கலக்கலாக காமெடி பண்ணிக் கொண்டும் இருக்கிறார்கள்.

வீடுகள் தோறும் வரவேற்பு
இதனால்தான் இந்த சோ பார்ப்பதற்காக அனைவரும் டிவி முன்பாக சனி ஞாயிறு இரவு தவம் இருக்கின்றனர். தற்போது இவரது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி இவர்களுடைய ரசிகர்களும் இவருடைய பிரண்ட்ஸ் களும் வந்து இவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள். விஜே பார்வதி இவரை ஒரு அறைக்குள் கூட்டிக்கொண்டு போய் வித்தியாசமாக கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோக்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.