குக் வித் கோமாளி சீசன் 3... ஐபிஎல் ரேஜ்சிற்கு ப்ரோமோ வெளியிட்ட விஜய் டிவி
சென்னை : விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து, வித்தியாசமாக வழங்கி மிகவும் பிரபலமாக்கப்பட்ட நிகழ்ச்சி இது.
பிக்பாஸிற்கு அடுத்த படியாக அதிகமானவர்களால் ரசிக்கப்படும் ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளது. பிக்பாசை போல் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், கோமாளிகள் என அனைவரும் மக்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டனர்.

சினிமா வாய்ப்பு
பவித்ர லட்சுமி, தர்ஷா குப்தா, புகழ், சிவாங்கி, மணிமேகலை, வெட்டிக்கிளி பாலா, பாபா பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் மக்களிடம் மிக பிரபலம். இதில் பவித்ர லட்சுமி, புகழ், சிவாங்கி உள்ளிட்டோர் சினிமாவில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். பவித்ர லட்சுமி, காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

பிரபலங்களும் பார்க்கிறார்கள்
மணிமேகலை, விஜய் டிவி தொகுப்பாளராக இருந்து வருகிறார். புகழ், சினிமாவில் நுழைந்ததும் விஜய், அஜித், சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று பிரபலமாகி விட்டார். குக் வித் கோமாளி முதல் சீசனை வனிதா விஜயக்குமாரும், இரண்டாவது சீசனை கனியும் வென்றனர். சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபலங்களே குக் வித் கோமாளியின் மிகப் பெரிய ஃபேனாக உள்ளனர். இரண்டாவது சீசனின் இறுதிப் போட்டிக்கும் சிம்பு தான் நடுவராக வந்தார்.

விரைவில் சீசன் 3
முதல் இரண்டு சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்த சீசன் எப்போது துவங்கப்படும் என அனைவரும் ஆர்வமாக காத்திருந்தனர். இந்நிலையில் குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளதாக விஜய் டிவி ஃபோட்டோவுடன் உறுதி செய்தது.

ஐபிஎல் ரேஞ்சில் ப்ரோமோ
இந்நிலையில் இன்று மாலை இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ரோமோஷனுக்காக விசில் போடு பாடல் வெளியிடப்பட்டு, செம ஹிட்டானது. அதே பாணியில் சொல்லு...சொல்லு என துவங்கும் ப்ரோமோ பாடல் வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

தேதியை சொல்லுங்க பாஸ்
இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆவலாக காத்திருப்பதாக பலர் கமெண்ட் செய்துள்ளனர். புகழை மிஸ் செய்வதாக ஏராளமானோர் தெரிவித்துள்ளனர். எப்போது ஆரம்பிக்க போறீங்கன்னு அப்படியே தேதியையும் சொல்லீடுங்க பாஸ் என ரசிகர்கள் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











