Don't Miss!
- News
அதிமுக தொண்டர்களின் கண்கள் சுப்ரீம் கோர்ட்டை நோக்கி..யாருக்கு இரட்டை இலை? எகிறும் எதிர்பார்ப்பு
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹே நாங்க ட்யூஷனுக்கு போறோம்.. பாக்கியலட்சுமி தொடரின் கலக்கல்ப்ரமோ இதோ!
சென்னை : விஜய் டிவியின் கலக்கல் தொடரான பாக்கியலட்சுமி தொடரின் புதிய ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இந்தத் தொடரில் பள்ளியில் மார்க் குறைவாக வாங்கிய மகள் இனியாவை ட்யூஷனில் சேர்க்க பாக்கியலட்சுமி தன்னுடைய மாமனாரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து அவர் தன்னுடைய பேத்தி இனியாவை ட்யூஷனில் சேர்த்துள்ளார். இதன் புதிய ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
வாரிசு பட தயாரிப்பாளருடன் இணையும் தனுஷ்.. யார் டைரக்டர் தெரியுமா?

விஜய் டிவியின் தொடர்கள்
விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை தொடர்களுக்கும் வழங்கி வருகிறது. இந்த சேனலின் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே சீசன் 2 ஆகிய தொடர்கள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. டிஆர்பியிலும் முக்கியமான இடங்களில் இந்த தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

பாக்கியலட்சுமி தொடர்
இந்நிலையில் இந்த சேனலின் முக்கியமான மற்றும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து பல்வேறு சிறப்பான எபிசோட்களை தந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக அமைந்துள்ளது. தன்னுடைய மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துள்ள கோபி, ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதையொட்டிய சுவாரஸ்மான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தவிப்பில் கோபி
இரண்டாவது திருமணம் செய்தாலும் அவர் விரும்பிய வகையில் வாழ்க்கை அமையவில்லை என்பதை அவர் பல கட்டங்களில் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் வெளிக்காட்டி வருகிறார். அவரது விருப்பத்திற்குரிய இரண்டாவது மனைவி ராதிகாவையும் விட்டுக் கொடுக்க முடியாமல், தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ள தன்னுடைய தந்தை மற்றும் மகள் இனியாவையும் கைவிட முடியாமல் தவித்து வருகிறார்.

மதிப்பெண்கள் குறைந்த இனியா
'
இதனிடையே, குடும்பத்தில் அடுத்தடுத்த பிரச்சினைகளால் மனமுடைந்துள்ள கோபியின் மகள் இனியா, பள்ளியில் குறைவான மதிப்பெண்களை எடுத்தது முக்கியமான பிரச்சினையாக இரு குடும்பத்திலும் எதிரொலிக்கிறது. குறிப்பாக தன்னுடைய மகளின் இந்த மதிப்பெண் குறைவால் மிகவும் மனமுடைந்து போகிறார் பாக்கியா. தன்னுடைய மகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இனியாவை ட்யூஷனில் சேர்க்கும்படி தன்னுடைய மாமனாரிடம் கேட்டுக் கொள்கிறார்.

ட்யூஷனுக்கு போகும் இனியா
இதையடுத்து தன்னுடைய மகள் இனியா, ட்யூஷன் போகிறாளா என்பதை கண்காணிக்க தன்னுடைய வீட்டின் வாசலிலேயே காத்திருக்கிறார். இதையடுத்து மகள் இனியா மற்றும் மாமனார் இருவரும் கோபியின் வீட்டிலிருந்து வெளியில் வருவதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார் பாக்கியா. தன்னுடைய அம்மா, வாசலில் தனக்காக காத்திருப்பதை பார்க்கும் இனியாவும் நெகிழ்ச்சி அடைகிறாள்.

நெகிழ்ச்சியடையும் பாக்கியா
இதையடுத்து பின்னால் வரும் தாத்தாவிடம், தன்னுடைய அம்மாவிற்கு தான் ட்யூஷன் போவது குறித்து சொல்ல வேண்டும் என்று இனியா கேட்க, தன்னுடைய வழக்கமான அதிரடியான செயல்பாடாக, ஹே நாங்க ட்யூஷனுக்கு போறோம் என்று கத்தியபடி செல்கிறார் ராமசாமி. இனியா வேண்டாம் தாத்தா என்று கூறுவதையும் கேட்காமல் அவர் தொடர்ந்து வீட்டு வாசலில் நின்றபடி கூவுகிறார். இதை கேட்கும் பாக்யா, கண்ணீருடன் கையசைப்பதாக இந்த ப்ரமோ காணப்படுகிறது.